சாலமன் தீவுகள் : பசிபிக் பெருங்கடலில் ஒரு குட்டி தீவு நாடு - ஆச்சர்ய வரலாறு | பகுதி 1

சாலமன் தீவுகள் ஓசேனியா கடல் பகுதியில் அமைந்திருக்கிறது. கிழக்கே பாப்புவா நியூ கினியாவும் வடகிழக்கில் வானுவாட்டு தீவு நாடும் அமைந்திருக்கிறது.
Austronesian

Austronesian

Facebook

Published on

சாலமன் தீவுகள் ஒரு இறையாண்மை பெற்ற நாடாகும். இதில் ஆறு பெரும் தீவுகளும் 900-த்திற்கும் மேற்பட்ட தீவுக்கூட்டமும் அடக்கம். சாலமன் தீவுகள் ஓசேனியா கடல் பகுதியில் அமைந்திருக்கிறது. கிழக்கே பாப்புவா நியூ கினியாவும் வடகிழக்கில் வானுவாட்டு தீவு நாடும் அமைந்திருக்கிறது. சாலமன் தீவுகளின் பரப்பரளவு 28,400 சதுர கி.மீட்டராகும். மக்கள் தொகை 6,52,858 ஆகும். தலைநகரம் ஹொனைரா.

People of Solomon Islands

People of Solomon Islands

Twitter

சாலமன் தீவுகள் நாட்டில் அரசாட்சியும் பாராளுமன்றமும் உண்டு. பாராளுமன்றத்தில் 50 உறுப்பினர்களும் அவர்களது ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்.

சாலமன் தீவுகள் நாட்டின் தனிநபர் வருமானம் 600 டாலராகும். அதனால் இந்நாடு குறைவளர்ச்சி கொண்ட நாடாக இருக்கிறது. மக்கள் தொகையில் 75% பேர் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் இருக்கின்றனர். மக்களுக்குத் தேவையான தொழிற்சாலை பொருட்களும், பெட்ரோலும் இறக்குமதி செய்யப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் 3.9% மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுகிறது. கொப்பரைத் தேங்காய், கொக்கோ, பாமாயில் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகிலேயே தேங்காய் உற்பத்தியில் 18-வது பெரிய நாடு சாலமன் தீவுகள் ஆகும்.

ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும் மக்கள் தொகையில் 2% மட்டுமே அதை பேசத் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். பிஜின் எனப்படும் உள்ளூர் மொழி பரவலான மக்களால் பேசப்படுகிறது. நாட்டில் 70-க்கும் மேற்பட்ட மொழிகளை மக்கள் பேசுகிறார்கள். மக்களின் பெரும்பான்மையினர் கிறித்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்.

இனி சாலமன் தீவுகளின் சுருக்கமான வரலாற்றைப் பார்ப்போம்.

Austronesian

சாலமன் தீவுகள் வரலாறு : மக்கள் தொகை வெறும் 6.5 லட்சம், தினம் நூறு சண்டைகள் |பகுதி 2

வரலாற்றுக்கு முந்தைய காலம்

சாலமன் தீவுகளில் மனிதர்களின் முதல் குடியேற்றம் கி.மு. 2000-க்குள் நடந்திருக்கலாம். குடியேறியவர்கள் அநேகமாக ஆஸ்ட்ரோனேசிய மொழிக் குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தக் குடியேற்றத்திற்கு ஆதாரமாக தொல்லியல் சான்றுகள் உள்ளன. லபிடா கலாச்சாரத்தின் மட்பாண்டங்கள் சாண்டா குரூஸ் மற்றும் ரீஃப் தீவுகளில் கிமு 1500 இல் பயன்பாட்டில் இருந்தன. கிமு 1000 க்கு முந்தைய பொருட்கள் சாண்டா அனா தீவில் உள்ள வட்டுலுமா குகை (குவாடல்கனல்), மற்றும் அனுதா மற்றும் டிகோபியாவின் வெளிப்புற தீவுகளில் தோண்டப்பட்டுள்ளன.

Álvaro de Mendaña de Neira

Álvaro de Mendaña de Neira

Facebook

தீவுகளில் ஐரோப்பிய இருப்பு

1568 இல் ஸ்பானிய ஆய்வாளர் அல்வாரோ டி மெண்டானா டி நீரா தீவுகளை அடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். பின்னர், அவர் தங்கத்தை கண்டுபிடித்தார் என்பது வதந்தியதாக பரவயிது. மட்டுமல்லாமல், பைபிளில் வரும் மன்னர் சாலமன் தனது ஜெருசேலம் கோவிலுக்கான தங்கத்தை இங்கிருந்து கண்டுபிடித்தார் என்ற செய்தியும் வதந்தியாக பரவியது.

இதனால் தீவுகளுக்கு இஸ்லாஸ் டி சாலமன் Islas de Solomon என்ற பெயர் வந்தது. பின்னர் 1595 மற்றும் 1606 இல் தென்மேற்கு பசிபிக் பகுதிக்கு பயணித்த ஸ்பானியர்களின் பயணங்கள், மெண்டனாவால் அறிவிக்கப்பட்ட தங்கம் குறித்த செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் அப்போதைய புவியியலாளர்கள் குழு சாலமன் தீவுகளின் இருப்பை சந்தேகித்தனர். மேலும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை, பிரெஞ்சு மற்றும் ஆங்கில கடலோடி மாலுமிகளால் பார்வையிட்ட பிறகுதான், சாலமன் தீவுகள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டது. 1788 இல் ஆங்கிலேயர்களால் சிட்னியில் குடியேறிய பிறகு, கடற்படை மற்றும் வணிகக் கப்பல்கள் சாலமன் தீவுகளின் கடல் வழியாக அதிக அளவில் செல்லத் தொடங்கின.

ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் 1840 களில் ஒரு குடியேற்றத்தை நிறுவ முயற்சி செய்து தோல்வியுற்றனர். ஆனால் 1898 இல் அதில் வெற்றி பெற்றனர். 1850 களில் இருந்து பயிற்சிக்காக சாலமன் தீவுவாசிகளை நியூசிலாந்திற்கு அழைத்துச் சென்ற ஆங்கிலிகன் மிஷனரிகள் 1870 களில் சாலமன் தீவுகளில் குடியேறத் தொடங்கினர். பிற மிஷனரிகள் பின்னர் வந்தன.

Austronesian

வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

Solomon Islands 1910

Solomon Islands 1910

Facebook

காலனித்துவ ஆட்சியை நிறுவுதல்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஃபிஜி தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் தோட்டங்களில் வேலை செய்யும் பொருட்டு சாலமன் தீவு வாசிகள் பெருமளவு சுரண்டப்பட்டனர். 1870 மற்றும் 1910 க்கு இடையில் சுமார் 30,000 தொழிலாளர்கள் சாலமன் தீவுகளிலிருந்து கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஜெர்மனியும் பிரிட்டனும் 1886 இல் சாலமன் தீவுகளை அவர்களுக்கிடையில் பிரித்துக் கொண்டன. ஆனால் 1899 இல் ஜெர்மனி புகா மற்றும் பொகெய்ன்வில்லே தவிர வடக்கு தீவுகளை பிரிட்டனுக்கு மாற்றியது. பதிலுக்கு பிரிட்டனிடமிருந்து ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை ஜெர்மன் பெற்றது. பிரிட்டிஷ் சாலமன் தீவுகள் பாதுகாப்பு குறித்த அறிவிப்பு 1893 இல் அறிவிக்கப்பட்டது.

இது தொழிலாளர் ஏற்றுமதி தொடர்பான துஷ்பிரயோகங்களை மட்டுப்படுத்தவும் மற்றும் சாலமன் தீவுவாசிகளுக்கும் ஐரோப்பிய குடியேறியவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் ஆகும்.

சாலமன் தீவுகளில் காலனித்துவ ஆட்சி 1896 இல் தொடங்கியது. பொதுவாக இந்த ஆட்சியில் மனிதாபிமானம் இருந்தாலும், தீவுவாசிகளின் நலன்களை விட ஐரோப்பிய வணிகர்கள் மற்றும் தோட்டக்காரர்களின் நலன்களை மேம்படுத்துவதில் நிர்வாகிகள் அதிக அக்கறை கொண்டிருந்தனர். மேலும் தீவுவாசிகள் காலனித்துவ சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு எதிரான குற்றங்களுக்காக கடுமையாக தண்டிக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.

Honiara

Honiara

Facebook

இரண்டாம் உலக போர்

பசிபிக் பகுதியில் இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், ஜப்பானியர்கள் 1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாக்கப்பட்ட சாலமன் தீவுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். ஆனால் தெற்கு நோக்கி அவர்களின் முன்னேற்றம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமெரிக்கப் படைகளால் நிறுத்தப்பட்டது. அடுத்த 15 மாதங்களில் சாலமன் தீவுகளில் நடந்த சண்டைகள் சில, பசிபிக் பகுதியில் மிகவும் மோசமான ஒன்றாகும். குவாடல்கனல் பகுதியில் நடந்த நீண்ட போர் பசிபிக் போரின் முக்கியமான மோதல்களில் ஒன்றாகும்.

போரில் அமெரிக்கப் படைகளும் அவர்களது கூட்டாளிகளும் சாலமன் தீவுவாசிகளால் வலுவாக ஆதரிக்கப்பட்டனர். போருக்குப் பிறகு, விமானநிலையம் அருகாமையில் இருந்ததாலும், தட்டையான நிலம் மற்றும் ராணுவக் கட்டிடங்கள் இருந்ததாலும், குவாடல்கனலில் உள்ள ஹோனியாரா, புதிய தலைநகராக மாறியது.

Solomon Mamaloni

Solomon Mamaloni

Facebook

சுதந்திரம்

போரின் மற்றொரு விளைவு, தீவுவாசிகளிடையே அரசியல் உணர்வைத் தூண்டி, 1944 முதல் 1952 வரை நீடித்த மாசினா ஆட்சி எனப்படும் ஒரு தேசியவாத இயக்கத்தை ஊக்குவித்தது. அதைத் தொடர்ந்து, காலனித்துவ நீக்கத்திற்கான உலகளாவிய இயக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், சாலமன் மக்களும் போராட்டத்தில் இறங்கினார். அரசியலமைப்பு வளர்ச்சிக்காக போராடினர். நாடு 1975 இல் முறையாக சாலமன் தீவுகள் என மறுபெயரிடப்பட்டது. ஜூலை 7, 1978 இல் சுதந்திரம் அடைந்தது. சாலமன் தீவுகளை சுதந்திரத்திற்கு இட்டுச் செல்ல உதவிய பீட்டர் கெனிலோரியா, அதன் முதல் பிரதமரானார் (1978-81). மற்றும் 1984 முதல் 1986 வரை இரண்டாவது முறையாகவும் பணியாற்றினார்.

சுதந்திரத்திற்கு முந்தைய மற்றொரு தலைவரான சாலமன் மாமலோனி, 1980கள் மற்றும் 90களில் பலமுறை பிரதமராகப் பணியாற்றினார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 1997 இல் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதற்கு பிந்தைய காலம் சாலமன் தீவுகளில் வன்முறை நிறைந்த ஒன்றாக இருந்தது. அதை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.

Austronesian

சாலமன் தீவுகள் வரலாறு : மக்கள் தொகை வெறும் 6.5 லட்சம், தினம் நூறு சண்டைகள் |பகுதி 2

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com