சூயஸ் கால்வாய் வரலாறு : அந்த காலத்திலேயே இத்தனை கோடிகள் செலவு செய்து கட்டப்பட்டதா? - 1

இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் கடல் வழி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பது சூயஸ் கால்வாய்
Suez Canal

Suez Canal

Twitter

Published on

சூயஸ் கால்வாய் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு கால்வாய். இது செங்கடல் வழியாக இந்தியப் பெருங்கடலையும், மத்திய தரைக்கடலையும் இணைக்கிறது. செங்கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு நடுவில் இருந்த நிலப்பகுதியை வெட்டி இக்கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆசியாவுடன் கடல் வாணிபம் செய்ய அட்லாண்டிக் கடல் வழியாக ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றி வந்தே வர முடியும். இந்தியாவிற்கு முதன்முறையாக வந்த வாஸ்கோடகாமா உள்ளிட்டோர் அப்படித்தான் பயணித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இதுதான் நிலைமை. 1869 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பிறகு இக்கடல் பயணம் எளிதாகியது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் மிச்சமாகியது.

Suez Canal

Suez Canal

சூயஸ் கால்வாய் எங்கே இருக்கிறது?

மத்திய தரைக்கடல் பகுதியில் இருக்கும் எகிப்திய பகுதியின் போர்ட் சைடில் இருந்து தெற்கே இருக்கும் சூயஸ் நகரம் வரை 120 மைல் நீளத்திற்கு சூயஸ் கால்வாய் இருக்கிறது. இந்தக் கால்வாய் எகிப்தின் பெரும்பகுதியை சினாய் தீபகற்பத்தில் இருந்து பிரிக்கிறது. பத்து ஆண்டுகள் நடந்த கட்டுமானப் பணிக்கு பிறகு இக்கால்வாய் நவம்பர் 17, 1869 அன்று திறக்கப்பட்டது.

தற்போது எகிப்திய அரசின் சூயஸ் கால்வாய் ஆணையத்திறகு சொந்தமான இக்கால்வாய் அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கும் பயன்படுகிறது.

Suez Canal

Chennai Book Fair 2022 : இந்த ஆண்டு கண்காட்சிக்குப் பரிந்துரைக்கப்படும் 12 புத்தகங்கள்

Suez Canal

Suez Canal

Facebook

சூயஸ் கால்வாய் கட்டுமானம்

மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் கனவு பழங்காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. நைல் நைதி சூடான் வழியாக எகிப்தில் ஓடி மத்திய தரைக் கடலில் இணைகிறது. செங்கடலையும் நைல் நைதியையும் இணைக்கும் சிறிய கால்வாய்கள் கிமு 2000 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தன.

இருப்பினும், மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பு சாத்தியமற்றதாகக் கருதப்பட்டது. காரணம் இரண்டும் வெவ்வேறு உயரத்தில் அமைந்துள்ளதாக அப்போது கருதப்பட்டன.

இதன்காரணமாக மத்திய தரைக்கடல் வழியாக வரும் கப்பல்கள் எகிப்தில் வடக்கு பகுதியில் நிலை நிற்கும். அதிலிருந்து பொருட்களை இறக்கி பல்வேறு தரைவழிப்பாதைகள், குதிரை வண்டிகள் பின்னர் ரயில்பாதைகள் மூலம் செங்கடலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கே கப்பல்களில் மீண்டும் ஏற்றப்படும். குறிப்பாக இந்த வழிமுறை பிரிட்டனால் பயனபடுத்தப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள காலனிய நாடுகளுக்கான வர்த்தகத்தை இப்படித்தான் பிரிட்டன் மேற்கொண்டது.

பிரெஞ்சு பொறியாளர் லினான்ட் டி பெல்லேஃபாண்ட்ஸ்

பிரெஞ்சு பொறியாளர் லினான்ட் டி பெல்லேஃபாண்ட்ஸ்

Facebook

பிரெஞ்சு பொறியாளர் லினான்ட் டி பெல்லேஃபாண்ட்ஸ்

1830 ஆம் ஆண்டிலேயே இரு கடல்களையும் இணைக்கும் வழி விவாதிக்கப்பட்டது. இதற்கு காரணம் பிரெஞ்சு ஆய்வாளரும், பொறியியலாளருமான லினான்ட் ஆவார். இவர் எகிப்து குறித்து நன்கு பரிச்சயம் உள்ளவர்.

இவர்தான் இருகடல்களும் ஒரே உயரத்தில் இருப்பதை சர்வே மூலம் உறுதிப்படுத்தினார். அதற்கு முன் இரு கடல்களும் வெவ்வேறு உயரத்தில் இருப்பதாக நம்பப்பட்டன. லினான்ட்டின் கண்டு பிடிப்பிற்கு பிறகு இரு கடல்களையும் இணைக்கும் கால்வாயை எளிதாக கட்டியமைக்கலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

1850 களில் எகிப்து ஓட்டோமான் பேரரசில் இருந்தது. பேரரசு சார்பாக எகிப்தையும் சூடானையும் நிர்வகித்து வந்தவர் கெடிவ் செட் பாஷா. இவர் பிரெஞ்சு தூதர் ஃபெர்டினாண்ட் டி லெசப்ஸுக்கு சூயல் கால்வாய் உருவாக்குவதற்கு அனுமதி வழங்கினார். அப்படித்தான் சூயஸ் கால்வாய் நிறுவனம் தோன்றியது. இந்நிறுவனத்திற்கு கால்வாயின் நீர்வழியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டன.

பிரெஞ்சு தூதர் லெசப்ஸும் உடனடியாக சூயல் கால்வாய் கட்டுவதற்கான திட்டத்தை வகுக்க சர்வதேச ஆணையத்தை உருவாக்கினார். இதில் ஏழு நாடுகளில் இருந்து 13 வல்லுநர்கள் இடம்பெற்றனர். அதில் முக்கியமானவர் அலோயிஸ் நெக்ரெல்லி எனும் முன்னணியான கட்டுமானப் பொறியாளர்.

இதற்கு முன்பு பெல்லேஃபோன்ட்ஸ் எடுத்திருந்த சர்வேயைப் பயன்படுத்தி நெக்ரெல்லி கால்வாய் கட்டுவதற்கான கட்டுமானத் திட்டத்தை தயாரித்தார். சூயஸ் ஆணையத்தின் இறுதி வரைவுத் திட்டம் 1856-இல் முடிக்கப்பட்டது. இதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் சூயஸ் கால்வாய் நிறுவனம் முறையாக நிறுவப்பட்டது.

Suez Canal

Suez History : அரபு உலகம் VS இஸ்ரேல் - சூயஸ் கால்வாய்க்காக நடந்த ஒரு பெரும் போர்

சூயஸ் கால்வாய் கட்டுமானம்

சூயஸ் கால்வாய் கட்டுமானம்

Twitter

சூயஸ் கால்வாய் கட்டுமானம்

1859 ஆம் ஆண்டில் கால்வாயின் வடக்கு முனையியல் இருந்த போர்ட் சைட் பகுதியில் கட்டுமானப்பணி துவங்கியது. கால்வாயைத் தோண்டும் பணி மட்டும் 10 ஆண்டுகள் நடந்தது. 15 இலட்சம் தொழிலாளிகள் பணியாற்றினர்.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், உணவு பொருட்கள், பல்வேறு எந்திரங்கள் அனைத்தும் சூயஸ் கால்வாய் வழியாக கொண்டு வரப்படுகிறது. ஆனால் அதைக் கட்டும் போது பல்லாயிரணக்கான தொழிலாளர்கள் காலரா மற்றும் இதர தொற்று நோய்களால் இறந்து போயிருக்கின்றனர். மேலும் கால்வாய் கட்டுமான முதலீட்டில் இடம்பெற்றிருந்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க முதலாளிகளின் விருப்பப்படி இத்தொழிலாளிகளில் பலர் அடிமைகளாக கொண்டு வரப்பட்டனர். ஏதோ கால் வயிற்றுக் கஞ்சியைக் குடித்துக் கொண்டு எந்த வித அடிப்படை வசதிகள் இன்றியே இவர்கள் பணிபுரிந்தனர்.

அப்போது மத்திய கிழக்கில் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக கட்டுமானப்பணி பாதிக்கப் பட்டது. பிரான்ஸ், பிரிட்டன இரு நாடுகளும் அப்போது எகிப்தை ஆண்டு வந்தன. இருநாட்டின் காலனிய ஆட்சியை எதிர்த்தும் உள்நாட்டில் போராட்டம் நடந்து வந்தது.

இத்தகைய காரணங்களால் பல்வேறு சிக்கல்களை சந்தித்த சூயஸ் கால்வாய் கட்டுமானம் திட்டமிட்டிருந்த செலவு முதலீட்டை விட இருமடங்கு அதிகமாய் 100 மில்லியன் டாலர் ஆனது. இந்திய ரூபாயில் சுமார் 746 கோடி.

சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது

சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது

Twitter

சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது

எகிப்து மற்றும் சூடானின் கெடிவ் - துருக்கிய ஆட்டமான் பேரரசின் நிர்வாகி - இஸ்மாயில் பாஷா நவம்பர் 17, 1869 அன்று சூயஸ் கால்வாயை முறையாகத் திறந்து வைத்தார்.

முதலில் பிரெஞ்சு கப்பலும் அதைத் தொடர்ந்து பிரிட்டனின் கப்பலும் கால்வாயில் பயணித்தன. ஆனால் இந்த முறையான பயணத்திற்கு முன்பே பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலான எச்எம்எஸ் நியூபோர்ட் கால்வாயில் நுழைந்தது. அதற்காக அந்தக் கப்பலின் கேப்டன் ஜார்ஜ் நரேஸ் அதிகாரப்பூர்வமாக கண்டிக்கப்பட்டாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பாராட்டப்பட்டார். மேற்கண்ட கப்பல்கள் வடக்கிலிருந்து அதாவது மத்திய தரைக்கடலில் இருந்து செங்கடலுக்கு வந்தன. அதே போன்று தெற்கே செங்கடலில் இருந்து மத்தியதரைக் கடலுக்கு சென்ற முதல் கப்பலின் பெயர் எஸ்.எஸ்.டிடோ.

கால்வாய் திறக்கப்பட்ட காலத்தில் நீராவிக் கப்பல்கள் மட்டுமே பயணித்தன. பெரிய பாய்மரக் கப்பல்கள் காற்றின் விசைக்கு ஈடுகொடுத்து குறுகிய கால்வாயில் பயணிப்பது சிரமமாக இருந்தன.

முதல் இரண்டு ஆண்டுகளில் கால்வாயின் போக்குவரத்து எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளை காலனிப்படுத்துவதற்கு இந்த நீர் வழி முக்கியமான பங்காற்றியது. கால்வாயை கட்டியது அடிமைகள் என்றால் அதைப் பயன்படுத்தி ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்துவதற்கும் அதே கால்வாய் பயன்பட்டது.

இருப்பினும் சூயஸ் கால்வாய் நிறுவன உரிமையாளர்கள் போதிய வருவாயின்றி நிதி சிக்கல்களை சந்தித்தனர். இஸ்மாயில் பாஷாவும் மற்றவர்களும் தங்கள் கால்வாய் நிறுவன பங்குகளை 1875-ல் பிரிட்டனுக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் கால்வாயின் பெரும் பங்குதாரராக பிரான்ஸ் நாடே இருந்தது.

ஆனால் இத்தோடு சூயஸ் பிரச்சினை முடிந்து விடவில்லை. கால்வாயின் உரிமையை யார் வைத்திருப்பது என்பதை ஒட்டி நிறைய போர்களே நடந்திருக்கின்றன. அதை பாகம் இரண்டில் பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com