மாதம் ரூ.1.27 லட்சம் வருமானம்; சொகுசு வீட்டை விட்டு பிச்சை எடுக்கும் கோடீஸ்வரர் - ஏன்?

வீட்டை வாடகைக்கு விட்டு வெளியேறிய டாம், தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். ஒரு நாளைக்கு 200 முதல் 300 பவுண்டுகள் பிச்சை எடுத்து சம்பாதிக்கிறார்.
மாதம் ரூ.1.27 லட்சம் வருமானம்;
சொகுசு வீட்டை விட்டு பிச்சை எடுக்கும் பணக்காரர் - ஏன்?
மாதம் ரூ.1.27 லட்சம் வருமானம்; சொகுசு வீட்டை விட்டு பிச்சை எடுக்கும் பணக்காரர் - ஏன்?ட்விட்டர்
Published on

லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துவரும் டாம் என்ற நபர் மாதம் 1.27 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு 5 கோடி ரூபாய்.

தி டபூ ரூம் என்ற யூடியூப் பக்கத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தனது கதையை பகிர்ந்திருக்கிறார் டாம். “எனக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது” என்று தொடங்கிய டாம் தனது போதை பழக்கத்தால், வீட்டில் இல்லாமல், தெருக்களில் வசித்து வருவதாக தெரிவித்தார்.

சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த டாம், சராசரியாக படிக்கும் மாணவர் தான். ஆனால், இவர் விளையாட்டில் சிறந்து விளங்கியதால், அதன் மூலம் இவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது.

ஆனால், தனது 13வது வயதில் இவருக்கு ஏற்பட்ட போதை பழக்கம், இவரது வாழ்வையே மாற்றியிருக்கிறது

“எனது 13 வயதில் போதைப்பழக்கம் ஆரம்பித்தது மதுபானம், கஞ்சா என அனைத்து பழக்கங்களும் எனக்கு வந்தது. 17, 18 வயதிருக்கும் போது ஹெராயின் புகைத்தேன். அதற்கு அடிமையாகிவிட்டேன்” என்று டாம் தெரிவித்தார்.

போதைப்பழக்கம் அதிகரித்ததால் மறு வாழ்வு மையத்தில் டாம்மிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் கிட்டத்தட்ட 7 வருடங்கள் எந்த பழக்கமும் இல்லாமல் சுத்தமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் ஒருவேளை போதை பொருள் பயன்படுத்தினாலும், அடிமையாக மாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்த டாம், ஒரு முறை முயற்சித்தபோது, எளிதில் அவர் போதைக்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்தார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

வீட்டை வாடகைக்கு விட்டு வெளியேறிய டாம், தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். ஒரு நாளைக்கு 200 முதல் 300 பவுண்டுகள் பிச்சை எடுத்து சம்பாதிக்கிறார்.

ஆனால், இதை விட ஆச்சரியமான செய்தி என்னவென்றால், வீட்டிற்கு மாத வாடகையாக இவர் சம்பாதிப்பது 1,300 பவுண்ட். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.27 லட்சம்!

மாதம் ரூ.1.27 லட்சம் வருமானம்;
சொகுசு வீட்டை விட்டு பிச்சை எடுக்கும் பணக்காரர் - ஏன்?
வித்தியாசமான படுக்கையறை கொண்ட வீடு : ரூ.1.6 கோடி மதிப்பு - அப்படி என்ன சிறப்பு?

தனக்கு கிடைக்கும் பணத்தை மீண்டும் போதை பொருட்களை வாங்குவதற்கே செலவு செய்து வருகிறார் டாம்.

தனது போதை பழக்கத்தால், எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடிவதில்லை எனவும், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இவரை கைவிட்டு விட்டதாக டாம் தெரிவித்துள்ளார்.

தெருக்களில் பிச்சை எடுத்து வரும் நபர் மாதம் 1.27 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாதம் ரூ.1.27 லட்சம் வருமானம்;
சொகுசு வீட்டை விட்டு பிச்சை எடுக்கும் பணக்காரர் - ஏன்?
ஆணுறை மூலம் போதை ஏற்றும் இளைஞர்கள் - என்ன நடக்கிறது இங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com