சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு: வணிகமும், வரலாறும் - ஒரு விரிவான பார்வை

சவுதி அரேபியாவின் அரசர் சல்மானின் அழைப்பை ஏற்று சவுதி அரேபியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் ஷி ஜின்பிங். இந்த நேரத்தில் சீனாவின் பல்வேறு சாதனைகளும் பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன.
சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு
சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்புIstock
Published on

சீனா கடந்த பல தசாப்த காலத்தில் எடுக்கப்பட்ட பல சீர்திருத்தங்களின் விளைவாக, உலகின் மிக முக்கிய சக்தியாக உருவெடுக்க விரும்புகிறது,  குறைந்தபட்சம் ஆசியாவிலேயே மிக முக்கிய சக்தியாக உருவாகியுள்ளது எனலாம். 

சவுதி அரேபியாவின் அரசர் சல்மானின் அழைப்பை ஏற்று சவுதி அரேபியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் ஷி ஜின்பிங். இந்த நேரத்தில் சீனாவின் பல்வேறு சாதனைகளும் பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன.

சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு
Silk Road History : ஐரோப்பாவையும் சீனாவையும் இணைத்த பட்டுவழிச் சாலையின் வரலாறு
Silk Road
Silk Road Mayuresh Borse

சீனா - அரபுலகம் நட்பு

கடந்த பல தசாப்த காலமாக சீன அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள், ராஜ்ஜிய ரீதியிலான உறவுகள், பிரம்மாண்டமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்... என பல காரணங்களால் இன்று சீனா அரபுலக பிராந்தியத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உருவெடுத்திருக்கிறது. 

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கூட சீனா உலகத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார குளறுபடிகள் காரணமாக, சீனா ஏழ்மையில் தத்தளிக்கும் ஒரு தேசமாகவே இருந்ததாக பல வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அப்படி தன் சொந்த மக்களுக்கே உணவளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த சீனா இன்று உலகத்திந் உற்பத்தியாளராக உருவெடுத்தது எப்படி...?

சில தசாப்தங்களுக்கு முன்பு வரை சீனா விவசாய பொருட்கள், ஆடைகள், ஜவுளி... போன்றவைகளையே மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்தும் ஏற்றுமதி செய்தும் வந்தது. அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்தங்களில் சீனா மெல்ல எலக்ட்ரானிக்ஸ், எந்திரங்கள், கணினிகளை உற்பத்தி செய்து உலகுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு கேந்திரமாக உருவெடுத்தது.

சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு
செளதி அரேபியா சீனா நெருக்கம் அஞ்சும் அமெரிக்கா : என்ன நடக்கிறது அங்கே?
Gorodenkoff Productions OU

ஒரு நாளில் அல்ல

இப்படி உலகப் பொருளாதாரத்திற்கே வலு சேர்க்கும் முக்கிய பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கியதன் காரணமாக, சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கத்தை அசால்டாக சமாளித்து முன்னேறியது என சுருக்கமாக சொல்லலாம். ஆனால் இந்த பொருளாதார மாற்றங்கள் எல்லாம் ஏதோ ஒரு நாள் இரவிலோ ஒரு சில மாத உணர்வு வேகத்திலோ மட்டும் ஏற்பட்டு விடவில்லை.

1970களில் ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவு. அடுத்தடுத்து வந்த சீன அதிபர்கள் மற்றும் சீன அரசாங்கங்களின் சீர்திருத்தங்கள் காரணமாக மெல்ல சீன பொருளாதாரம் உலக பொருளாதாரத்திற்கு திறந்து விடப்பட்டன. 

ஏற்றுமதிக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 1970 ஆம் ஆண்டு 2.31 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சீனாவின் ஏற்றுமதி 1975 ஆம் ஆண்டு 7.69 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. ஐந்து ஆண்டு காலத்துக்குள் சுமார் 3 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி சத்தியமானது.

1985 கால கட்டங்களில் சீனாவின் ஏற்றுமதி 25.77 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது. 1993 ஆம் ஆண்டு 53.36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சீனாவின் ஏற்றுமதி அடுத்த ஓராண்டு காலத்துக்குள் அதாவது 1994 ஆம் ஆண்டுக்குள் 104.61 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. ஓராண்டு காலத்துக்குள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வளர்ச்சி எட்டிப் பிடித்தது சீனா.

உலக வர்த்தக அமைப்பில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவும் சேர்க்கப்பட்டது. அப்போது சீனாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 520 பில்லியன் டாலரை கடந்திருந்தது.

1990 ஆம் ஆண்டு, உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் சீனா 14-வது இடத்தில் இருந்தது. அப்போது ஒட்டுமொத்த உலக ஏற்றுமதியில் 1.8 சதவீதம் மட்டுமே சீனாவின் பங்களிப்பாக இருந்தது. 2000 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் ஏழாவது இடத்தை எட்டிப்பிடித்தது சீனா. உலக ஏற்றுமதியில் 3.9 சதவீதம் பங்களித்தது சீனா.

2004 ஆம் ஆண்டு உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்கிற பெருமையை ஜப்பானை பின்னுக்கு தள்ளி வந்தடைந்தது. அப்போது சீனாவின் பங்களிப்பு 6.5 சதவீதமாக உயர்ந்தது. 

2007 ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி முதல் முறையாக ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது. அந்த ஆண்டு சீனாவின் ஏற்றுமதி 1.26 ட்ரில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது.

2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது, எல்லா உலக நாடுகள் போல சீனாவின் ஏற்றுமதியும் கணிசமாக பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் வெகு விரைவிலேயே அந்த வீழ்ச்சியில் இருந்து வீறு கொண்டு எழுந்தது சீனா.  2009 ஆம் ஆண்டு ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடு என்கிற பெருமையை பெற்றது சீனா. அப்போது ஒட்டுமொத்த உலகினல் 9.6 சதவீத ஏற்றுமதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்கிற பிரச்சனையால் தள்ளாடியது. பல நாட்டின் பொருளாதாரங்கள் இதனால் மிகப்பெரிய தாக்கங்களுக்கு உள்ளாயின. ஆனால் அந்த காலகட்டங்களிலும் சீனாவின் ஏற்றுமதி மட்டும் குறையவே இல்லை என்கிறது அராப் நியூஸ் கட்டுரை ஒன்று. கடந்த 2021 ஆம் ஆண்டு சீனா 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து இருப்பதாக அதே அராப் நியூஸ் வலைதளச் செய்திகள் சொல்கின்றன.

சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு
செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!

சில்க் ரோடு

1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனா மற்றும் அரபு உலகத்திற்கு தொடர்ந்து வணிக ரீதியான உறவுகள் இருந்து வந்ததாகவும், அவ்வணிகம் பெரும்பாலும் சில்க் ரோடு என்று அழைக்கப்படும் பட்டுப்பாதை வழியாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.

பட்டுப்பாதை வழியாக, சீனா தன் ஆடைகள் மற்றும் ஜவுளிகளை அனுப்பியது. அரபு உலக நாடுகளோ வாசனை திரவியங்கள், முத்துக்கள், வாசனை சாம்பிராணி போன்ற பொருட்களை சீனாவுக்கு அனுப்பியது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பூகோளவியலாளர் Ferdinand von richthofen என்பவரே முதல் முறையாக சில்க் ரோடு என்கிற சொல்லை உருவாக்கினார். இதை கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பாதை என்றும் குறிப்பிட்டார். அப்பேர்ப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பாதை இன்று வரை அரபுலகத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வருகின்றன.

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளில் சீனாவுக்கிய மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. ராய்டர்ஸ் செய்தி முகமையின் தரவுகள் படி, 2021 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா மற்றும் சீனாவுக்கு இடையில் சுமார் 87.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வர்த்தகங்கள் நடைபெற்றுள்ளன.

சவுதி அரேபியா சீனாவிடமிருந்து ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், எந்திரங்கள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்கின்றன. சவுதி அரேபியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் முதன்மை பிளாஸ்டிக் போன்ற பொருட்களை சீனா இறக்குமதி செய்கிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் சவுதி அரேபியாவிடமிருந்து ஒவ்வொரு நாளும் 1.77 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது சீனா. இதன் மதிப்பு சுமாராக 55 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என சீனாவின் சுங்கவரித்துறை தரவுகள் கூறுகின்றன.

1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சவுதி அரேபியா மற்றும் சீனாவுக்கு இடையில், இரு தரப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு கொண்டது. 2002 ஆம் ஆண்டு இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய சீன அதிபர் ஜியாங் செமின் (Jiang Zemin) சவுதி அரேபியா உடன் முக்கிய எண்ணெய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சீனாவின் வளரும் உற்பத்தி துறைக்கு சவுதி அரேபியா உறுதுணையாக நிற்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாரம்சம். நவீன வரலாற்றில் முதல்முறையாக ஒரு சீன அதிபர் சவுதி அரேபியாவுக்கு பயணப்பட்டதும் அதுவே முதல் முறை.

2000 ஆண்டு வாக்கில் சீனாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மதிப்பு மட்டுமே 1.5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2010 ஆம் ஆண்டு சீன கச்சா எண்ணெய் ஏற்றுமதி 25 பில்லியன் டாலரைத் தொட்டது.

சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு
செளதி அரேபியா வரலாறு : அந்நாட்டு அரச குடும்பம் எங்கெல்லாம் முதலீடு செய்து இருக்கிறது? | 3

சீனாவில் செளதி முதலீடு

இப்போது இந்த 2022 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ, சீனாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் பணிகளை மேற்கொள்ள, சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. சீன நாட்டில் சவுதி அரேபியா மேற்கொண்ட மிகப்பெரிய முதலீடு இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக சீன அதிபராக பதவி ஏற்றிருந்த ஷி ஜின்பிங் கஜகஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது ஒன் பெல்ட் ஒன் ரோடு (One Belt, One Road) என்கிற திட்டத்தை அறிவித்தார். அதே திட்டத்திற்கு, தற்போது "பெல்ட் அண்ட் ரோட் இனிசியேட்டிவ்" என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் பல நூற்றாண்டுகளாக ஒரு வணிக பாதையாக இருந்த பட்டுப்பாதையோடு ஒப்பிடப்பட்டது.

கிழக்கு ஆசியாவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளையும், ஐரோப்பாவில் இருக்கும் சந்தைகளையும் இணைக்கும் ஒரு மிகப்பெரிய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் அமைப்புதான் இந்த பெல்ட் அண்ட் ரோட் இனிசியேட்டிவ் திட்டம். இப்பாதை மத்திய ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகள் என பல நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையே செல்கிறது.

இதற்காக சீன அரசு 149 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்துள்ளது. இத்திட்டம் "யூ எஸ் மார்ஷல் பிளான்" எந்கிற அமெரிக்கா 1940களில் முன்னெடுத்து திட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது.

இந்தத் திட்டம் சீன அரசியலமைப்பு சட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது. பெல்ட் அண்ட் ரோட் இனிசியேட்டிவ் திட்டத்தை 2049 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சீன குடியரசு உருவாகி நூறாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது இத்திட்டமும் நடைமுறைக்கு வர வேண்டும் என்பது சீனர்களின் கனவாக இருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி அரேபியா விஷன் 2030 என்கிற சமூக சீர்திருத்தம் மற்றும் பொருளாதார பரவலாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். அந்தத் திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் இனிசியேட்டிவ் திட்டமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்குகளை முன்வைப்பதாக சில வலைதளச் செய்திகள் பார்க்க முடிகிறது.

நாடுகளுக்கு மத்தியிலான தொடர்பை அதிகரிப்பது எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம்... போன்ற விஷயங்களில் ஒத்துழைப்பது அதன் மூலம் நாடுகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம். சர்வதேச பஞ்சாயத்துகள் ஏதும் இல்லாமல், சுமூகமாக உலக மக்களுக்கு பயன் தருமானால் எந்த திட்டமும் நல்ல திட்டமே.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com