இந்தியாவின் G20 மாநாடுக்கு எவ்வளவு செலவானது? இதுவரை G20 நடத்திய மற்ற நாடுகளின் நிலவரம்?

இந்த ஆண்டு G20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் பெரும் தொகையைச் செலவிட்டது என்பது பலருக்குத் தெரியாது. இதன் மூலம், இந்தியாவில் நடைபெறும் G20 உச்சி மாநாடு விலையுயர்ந்த உலகளாவிய கூட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதுவரை G20 நடத்திய மற்ற நாடுகள் எவ்வளவு செலவு செய்தன?
இந்தியாவின் G20 மாநாடுக்கு எவ்வளவு செலவானது? இதுவரை G20 நடத்திய மற்ற நாடுகளின் நிலவரம்?
இந்தியாவின் G20 மாநாடுக்கு எவ்வளவு செலவானது? இதுவரை G20 நடத்திய மற்ற நாடுகளின் நிலவரம்?Twitter

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட 20க்கும் அதிகமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டு G20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் பெரும் தொகையைச் செலவிட்டது என்பது பலருக்குத் தெரியாது.

மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, டெல்லி காவல்துறை, PWD, MCD, DDA மற்றும் NHAI உட்பட டெல்லி முழுவதும் உள்ள பல துறைகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தது. PTI படி இந்தியா நடத்திய G20 உச்சிமாநாட்டின் மொத்த செலவு ரூ 4,000 கோடிக்கு மேல் வருகிறது.

டெல்லி காவல்துறைக்கு ரூ.340 கோடி ஒதுக்கப்பட்டது. ஜி 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தேசிய தலைநகரில் சாலைகள் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பதற்காக ரூ 700 கோடி ஒதுக்கப்பட்டது.

இதன் மூலம், இந்தியாவில் நடைபெறும் G20 உச்சி மாநாடு விலையுயர்ந்த உலகளாவிய கூட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மொத்த செலவு ரூ 4100 கோடிக்கு மேல் வருகிறது.

தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, சீனா இதுவரை மிகவும் விலையுயர்ந்த G20 உச்சிமாநாட்டை நடத்தியது.

ரூ. 1.9 லட்சம் கோடி (USD 24 பில்லியன்) செலவழித்துள்ளது. சீனா 2016 G20 உச்சி மாநாட்டை ஹாங்சூ நகரில் நடத்தியது. இது இன்றுவரை நடத்தப்பட்ட மிகவும் விலையுயர்ந்த G20 ஆனது.

கனடா 2010 இல் நடத்திய உச்சிமாநாட்டிற்கு 4300 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.

2014 இல் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டிற்கு ஆஸ்திரேலியா 2,653 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற முதல் G20 ஆகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com