மது அளவுகோளில் Full என்றால் 1 லிட்டர் இல்லையா? இதற்கு என்ன காரணம்? சுவாரஸ்ய பின்னணி

சந்தைகளில் கிடைக்கும் குவாட்டர், ஹாஃப், ஃபுல் பாட்டில்களின் அளவு நாம் நினைப்பது போல 500, 250 மில்லி அல்ல. ஒரு ஃபுல் பாட்டிலின் அளவு 750 மில்லி தான். ஹாஃப் பாட்டிலின் அளவு 375 மில்லி மற்றும் குவாட்டரின் அளவு 180.
மது அளவுகோளில் Full என்றால் 1 லிட்டர் இல்லையா? இதற்கு என்ன காரணம்? சுவாரஸ்ய பின்னணி
மது அளவுகோளில் Full என்றால் 1 லிட்டர் இல்லையா? இதற்கு என்ன காரணம்? சுவாரஸ்ய பின்னணிcanva
Published on

மதுபானம் என்பது அரசர் காலத்தில் இருந்து வழக்கத்தில் இருக்கிறது. இதனை பல விதமாக, பல சுவைகளில் தயாரிக்கின்றனர்.

இன்றளவில், பல்வேறு நாடுகளும் மதுபானம் தயாரிப்பில் முன்னணி வகித்து வருகின்றன. இந்த ஆல்கஹால் பல விதமான அளவுகளில் நமக்கு கிடைக்கிறது.

இதன் அளவுகளை குவாட்டர், ஹாஃப், ஃபுல் என நாம் குறிப்பிடுவோம்.

பொதுவாக குவாட்டர் என்றால், 250 மில்லி, ஹாஃப் என்றால் 500 மில்லி என்ற கணக்கு தான் நமக்கு தெரியும்.

ஆனால் மதுபானங்களை பொறுத்தமட்டில் இந்த அளவுகள் மாறுகிறது. என்ன மாற்றங்கள்? அதற்கான காரணம் என்ன?

அளவீடு

சந்தைகளில் கிடைக்கும் குவாட்டர், ஹாஃப், ஃபுல் பாட்டில்களின் அளவு நாம் நினைப்பது போல 500, 250 மில்லி அல்ல. ஒரு ஃபுல் பாட்டிலின் அளவு 750 மில்லி தான். ஹாஃப் பாட்டிலின் அளவு 375 மில்லி மற்றும் குவாட்டரின் அளவு 180.

இந்த அளவில் தான் உலகம் முழுவதிலுமே மதுபானம் அளவிடப்பட்டு விற்கப்படுகிறது.

அமெரிக்காவில் மட்டும் 1 லிட்டருக்கு 1000 மில்லி மதுபானம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்கிருந்து வந்தது இந்த அளவீடு?

இந்த முறை பிரிட்டிஷர்களின் வழக்கமாம். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோதிலிருந்து இந்த அளவீடு வழக்கத்தில் இருக்கிறது.

கோரா என்ற இணையதளத்தில் இதற்கான விளக்கமும் அளிக்கப்ப்ட்டிருந்தது.

இந்த அளவு, ஒரு பெக்கின் அளவை வைத்து கணக்கிடப்பட்டு பாட்டில்கள் நிரப்பப்படுகிறது. ஒரு பெரிய பெக்கின் அளவு 60 மில்லி ஆகும். மற்றும் ஒரு சிறிய பெக்கின் அளவு 30 மில்லி.

மது அளவுகோளில் Full என்றால் 1 லிட்டர் இல்லையா? இதற்கு என்ன காரணம்? சுவாரஸ்ய பின்னணி
ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?

அதன்படி தான் ஒரு பாவா அதாவது குவாட்டரின் அளவு 180 மில்லி - மூன்று பெரிய பெக் அல்லது 6 சிறிய பெக்.

ஒரு ஃபுல் பாட்டிலை ஒரு தூண் என்கின்றனர். ஒரு ஃபுல் பாட்டில் என்பது 12 பெரிய பெக் மற்றும் ஒரு சிறிய பெக் (750 மில்லி).

ஒரு ஹாஃப் பாட்டில் 6 பெரிய பெக்குகள், இதில் மட்டும் 375 மில்லி இருக்கும், ஒரு ஃபுல் அளவீட்டில் இருந்து பாதியாக இருக்க கூடுதலாக 15 மில்லி சேர்க்கப்படுகிறது.

மது அளவுகோளில் Full என்றால் 1 லிட்டர் இல்லையா? இதற்கு என்ன காரணம்? சுவாரஸ்ய பின்னணி
பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com