போலி விசா மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் ஃபிஷிங் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். விரைவான விசா சேவைகள் அல்லது பிரத்தியேக வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி தேவையில்லாத மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகளை அனுப்புகின்றனர்.
How to stay safe from FAKE visa scams?
How to stay safe from FAKE visa scams?Canva

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல விசா முக்கியமானதாக கருதப்படுகிறது. சில நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை, ஆனால் சில நாடுகள் விசா எடுக்க கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. இதனால் போலி விசாக்களின் புழக்கமும் அதிகரித்துவிட்டது.

இந்த நிலையில் போலி விசா மோசடிகளை எப்படி கண்டுபிடிப்பது என்று இங்கே தெரிந்துக்கொள்ளலாம். போலி விசா மோசடிகள் பல்வேறு விதங்களில் நடைபெறுகின்றன.

போலியான பயண நிறுவனங்கள், ஆன்லைன் தளங்கள் மூலம் விரைவான மற்றும் எளிதான விசா செயலாக்கத்தை உறுதியளிப்பதாக விளம்பரம் கொடுக்கிறது.

இந்த மோசடிகள் பெரும்பாலும் வெளிநாட்டில் முறையான வாய்ப்புகளைத் தேடும் தனிநபர்களின் நம்பிக்கையை வீணடிக்கிறது.

இதனால் விசா செயல்முறைகள் மற்றும் தங்களின் தேவைகள் பற்றிய தகவல்கள் தவறான கைக்கு மாறும் நிலை ஏற்படும். எனவே ஆரய்ச்சி செய்து சரியான முகமையினை அணுகவேண்டும்.

விசா மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பின் முதல் நடவடிக்கை முழுமையான ஆராய்ச்சி தான்! எந்தவொரு விசா சேவை அல்லது ஏஜென்சியை தொடர்புக் கொள்ளும் முன், தனிநபர்கள் நிறுவனத்தின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்க வேண்டும். அரசாங்க இணையதளங்கள், தூதரகங்கள் ஆகியவை விசா செயல்முறைகள் தொடர்பான உண்மைதன்மையினை ஆராய வேண்டும்.

How to stay safe from FAKE visa scams?
இந்தியர்களுக்கு விசா இல்லாமலும் அனுமதி அளிக்கும் கஜகஸ்தான் - சாகச பயணத்துக்கு ரெடியா?

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் ஃபிஷிங் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். விரைவான விசா சேவைகள் அல்லது பிரத்தியேக வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி தேவையில்லாத மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகளை அனுப்புகின்றனர். அறிமுகம் இல்லாத தனிநபர்கள் அத்தகைய தகவல்தொடர்புகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விசாவை பெற அணுகும் போது ஏஜென்சிகளிடம் இருந்து உதவியை நாடினால், தனிநபர்கள் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். ஒரு நாட்டில் குடியேற தகுதியான சட்டப்பூர்வ வல்லுநர்கள் பதிவு செய்யப்பட்ட சான்றுகள் அங்கு உள்ளதா என பரிசோதிக்க வெண்டும்.

இது எல்லாவற்றையும் விட தனிநபர்கள் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயலை எதிர்கொண்டாலோ அல்லது போலி விசா மோசடியால் குறிவைக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் புகாரளிப்பது மிக முக்கியமானது.

அதன்படி அவர் வசிக்கும் உள்ளூர் போலீஸ், தூதரகம் அல்லது தூதரக அலுவலகம் போன்ற தொடர்புடைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, மோசடியைப் புகாரளிக்கலாம்.

How to stay safe from FAKE visa scams?
Kenya: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள் - கென்யாவில் என்னென்ன பார்க்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com