சீனாவை வீழ்த்திய இந்தியா: ஃபோர்ப்ஸ் வெளியிட்ட நடுத்தர நிறுவனங்கள் பட்டியல் - விரிவான தகவல்

10 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்தப் படுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நடுத்தர நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டியது இன்றியமையாதது.
Forbes
ForbesTwitter

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சிறந்த 200 நடுத்தர நிறுவனங்களைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்திருக்கிறது.

நடுத்தரநிறுவனங்கள் என்பது சிறு தொழிலை விட பெரிய அதே நேரத்தில் சதாரணமான நிறுவனங்களை விட சிறிதாகவும் இருக்கும் நிறுவனங்களைக் குறிக்கும்.

சாதாரணமாக 10 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்தப் படுகின்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நடுத்தர நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டியது இன்றியமையாதது.

சிறந்த நடுத்தர நிறுவனங்களில் 24 நிறுவனங்களுடன் 4 வது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. கடந்த ஆண்டு 26 நிறுவனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு அடுத்த படியாக 22 நிறுவனங்களுடன் 5வது இடத்தில் சீனா இருக்கிறது.

முதல் இடத்தில் 30 நிறுவனங்களுடன் தைவான், 29 நிறுவனங்களுடன் ஜப்பான் 2வது இடத்திலும், 27 நிறுவனங்களுடன் தென் கொரியா 3வது இடத்திலும் இருக்கின்றன.

Forbes
அம்பானி, அதானி மற்றும் ஒரு தமிழர் : இவர்கள்தான் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்

இந்தியாவில், கொல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஆடைத் தயாரிப்பு நிறுவனமான டாலர் நிறுவனம் கொரோனா பாதிப்புக்கு பின்னர் அதிக வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் நிறைவு பெற்ற 2021 - 22 நிதியாண்டில் டாலர் நிறுவனத்தின் விற்பனை 30 விழுக்காடு வளர்ச்சி பெற்றதுடன், 72 விழுக்காடு நிகர லாபம் அதிகரித்திருக்கிறது.

1972ம் ஆண்டு நிறுவப்பட்ட அந்நிறுவனம் 50வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. டாலர் நிறுவனம் பல பிராண்ட் பெயர்களில் ஆடைகளைத் தயாரித்து வருகிறது.

Forbes
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற மகன்- வைரலாகும் தந்தையின் ரியாக்ஷன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com