மோடி அரசு : அரபு பணத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா

இதற்கு முன்பே இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள், ரஷ்யா கச்சா எண்ணெய் வர்த்தகர்களுக்கு துபாய் வங்கிகள் மூலம் திர்காம் கரன்சி வழியாக பேமென்ட் கொடுக்க முயன்று அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
அரபு பணத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா
அரபு பணத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாNewssense
Published on

இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருவதாக நாம் பல்வேறு செய்திகளில் படித்திருப்போம்.

ஆனால் இந்திய சுத்திகரிப்பாளர்கள் ரஷ்ய ஏற்றுமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரில் பணத்தை செட்டில் செய்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் கரன்சிகளில் பேமென்ட் செய்கிறார்களா என்பது குறித்த தெளிவான விவரங்கள் ஏதும் இத்தனை நாட்கள் கிடைக்காமல் இருந்தது.

ஆனால் இப்போது, இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் துபாயிலிருந்து இயங்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக திர்காம் கரன்சியில், பேமென்ட் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிலேயே செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள், அமெரிக்க டாலரில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான பேமெண்ட் கொடுக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்கிற எண்ணத்தில் வேறு ஒரு வழிமுறையைக் கையில் எடுத்தனர்.

அப்படித்தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்காம் கரன்சியில் ரஷ்யா கச்சா எண்ணெய்க்கான பேமெண்டைக் கொடுக்கத் தொடங்கியது இந்தியா.

இதற்கு முன்பே இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள், ரஷ்யா கச்சா எண்ணெய் வர்த்தகர்களுக்கு துபாய் வங்கிகள் மூலம் திர்காம் கரன்சி வழியாக பேமென்ட் கொடுக்க முயன்று அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. மீண்டும் அமெரிக்க டாலர்களிலேயே வர்த்தகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அரபு பணத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா
ரஷ்யா : உலக கச்சா எண்ணெய் சந்தையை கட்டுப்படுத்த போகிறாரா புதின்? - அதிர வைக்கும் செய்தி

ஆனால் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் திர்காம் கரன்சியில் கொடுக்கும் பேமென்ட்களை கிளியர் செய்கிறது என ராய்டர் செய்தி முகமை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு அமெரிக்காவிலும் கிளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள், ரஷ்யா கச்சா எண்ணெய்யை துபாயிலிருந்து இயங்கும் எவரெஸ்ட் எனர்ஜி மற்றும் லிடாஸ்கோ (இது ரஷ்யாவின் Lukoil நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம்) போன்ற வர்த்தகர்களிடமிருந்து, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை விநியோகிக்கும் டெலிவரி செலவு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விலையில் வாங்குகிறார்கள்.

அதுவும் டெலிவரி அடிப்படையில் வாங்குகிறார்கள். இதனால் கச்சா எண்ணெய்யை கப்பலில் கொண்டு வரும் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட அதை தவிர்த்துக் கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதாம்.

அரபு பணத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இல்லாமல் உலக நாடுகளால் சமாளிக்க முடியுமா? ரஷ்யா மீதான தடைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com