சொத்துக்களை விற்று வளர்ப்பு சிறுத்தைகளுக்கு பாம் ஷெல்டர் அமைத்த இந்திய மருத்துவர்

யுக்ரேனில் போர் நடந்துவருவதால், பலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை செய்து வரும் வேளையில், ஒரு இந்திய மருத்துவர் தன் இரண்டு சிறுத்தைகளை விட்டு வர மறுத்து அவற்றிற்கு பாம் ஷெல்டர் அமைத்து உடன் தங்கி வருகிறார்
Girikumar Patil
Girikumar PatilTwitter
Published on

யுக்ரேனில் தன் செல்ல பிராணிகளான கருஞ்சிறுத்தை மற்றும் ஒரு ஜாகுவாரை பிரிந்து வர மறுத்துள்ளார் ஓர் இந்திய மருத்துவர். அவைகளை பாதுக்காக்க தன் சொத்துக்களை விற்று பாம் ஷெல்டர் அமைத்துள்ளார் மருத்துவர் பாட்டில்.

தாக்குதலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு அடித்தளத்தில் மூவரும் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், தன் செல்ல பிராணிகளுக்கு உணவு வாங்க மட்டும் அவ்வப்போது வெளியில் சென்று வருகிறாராம்.

Black Panther
Black PantherTwitter

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கிரிகுமார் பாட்டில், சுமார் 20 மாதங்களுக்கு முன், கீயவ் விலங்கியல் பூங்காவிலிருந்து இந்த சிறுத்தைகளை வாங்கியுள்ளார். கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய நகரமான செவெரோடொன்யட்ஸ்க் என்ற இடத்தில் இவர்கள் மூவரும் வசிக்கின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

ரஷ்ய படைகள் யுக்ரேன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள இடம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்தனர். இவர்களுக்கு மத்தியில் பலரும் தங்கள் செல்லமாக வளர்க்கும் பிராணிகளை யுத்தத்திற்குப் பலியாக்க மனமில்லாமல், அவைகளையும் எடுத்து வர அனுமதித்தால் தான் யுக்ரேனில் இருந்து வெளியேறுவோம் என்று சொல்லி வந்தனர்.

Black Panther
Black PantherTwitter

இந்த செல்ல பிராணிகள் பெரும்பாலும் நாய், பூனைக்குட்டிகள், அல்லது பறவைகள் போன்றே இருந்து வந்தன. இந்நிலையில், பாட்டில் தான் வளர்க்கும் இரு சிறுத்தைகளையும் விட்டு வர மறுத்து வருகிறார். தினமும் ஊரடங்கு அமலாகும் நேரத்திற்கு முன்பு விரைந்து சென்று சிறுத்தைகளுக்கு உணவு வாங்கி வந்துவிட்டு, மீண்டும் அடித்தளத்தில் பதுங்கி விடுகிறார்.

தனது செல்லப்பிராணிகளின் பாதுகாப்பிற்காக, வசதியான தங்குமிடத்தை உருவாக்க ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக செலவழித்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அவர் தனது சொத்துக்கள் மற்றும் காரை விற்று அந்த சிறுத்தைகளுக்காக பாம் ஷெல்டரை உருவாக்கியுள்ளார்.

Girikumar Patil
விளாடிமிர் செலன்ஸ்கி : "உக்ரைனின் சாக்ரடீஸ்" நினைவிடத்தை அழித்த ரஷ்யா - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com