உக்ரைன் ரஷ்யா போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் கீவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் கொத்து குண்டுகளைப் போட்டு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய தூதரகத்தால் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களுக்கும் கீவ் நகரை விட்டு வெளியேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேப் போல கார்கீவ் நகரிலும் மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. விமானம் மூலம் நடந்த தாக்குதலில் மாணவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியை சேர்ந்த அவர், தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். கல்லூரி விடுதியிலிருந்து புறப்பட்டு கார்கீவிலிருந்து தப்பிச் செல்வதற்காக இரயில் நிலையம் சென்ற போது கொல்லப்பட்டிருக்கிறார்.
மாணவரின் குடும்பத்திற்கு தகவல் சொல்லியிருப்பதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ரஷ்ய மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறையிடம் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.