கனடா : இந்திய மாணவர் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?

கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் வாசுதேவ்
கார்த்திக் வாசுதேவ்twitter
Published on

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் கார்த்திக் வாசுதேவ். இவர் கனடா டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு மேலாண்மைத்துறை படித்து வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் வாசுதேவ் கொல்லப்பட்டதாக கனடாவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கார்த்திக் வாசுதேவ்
கார்த்திக் வாசுதேவ்twitter
கார்த்திக் வாசுதேவ்
உத்தர பிரதேச முதல்வர் யோகி டுவிட்டர் கணக்கு ஹேக்: குரங்கு புகைப்படங்களை வைத்து அட்டூழியம்

கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் 5 அடி முதல் 7 அங்குல உயரம் கொண்ட ஒரு கறுப்பின ஆணாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவர் கடைசியாக ஒரு கைத்துப்பாக்கியை ஏந்தியபடி தெற்கே க்ளென் சாலையில் நடந்து கொண்டிருந்ததாக ஒரு செய்தி சேனல் தகவல் தெரிவிக்கிறது.

Subway Station In Canada
Subway Station In Canadatwitter

கார்த்திக் வாசுதேவ் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கார்த்திக்கின் மறைவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com