உலக அதிசயங்களில் ஒன்று ஈபிள் டவர். இதனை காலம் காலமாக காதல் சின்னமாக பார்க்கின்றனர். பாரிஸில் அமைந்துள்ள இந்த கோபுரம் 1887 முதல் 1889 வரையில் கட்டப்பட்டது. இத உயரம் சுமார் 330 மீட்டர்.
இன்றும் பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஈபிள் டவருக்கு வருகை தருகின்றனர். ஈபிள் டவர் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரிஸில் உள்ள இந்த ஈபிள் கோபுரத்திற்குச் செல்லும் இந்தியர்கள் இப்போது Unified Payments Interface (UPI) ஐப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை தடையின்றி வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை சமீபத்தில் NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) அறிவித்தது. இந்த நடவடிக்கை இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், தடையற்ற பயணத்திற்கான சிறந்த வாய்ப்பையும் வழங்குகிறது.
Eiffel Tower இப்போது ஐரோப்பாவில் UPI பேமெண்ட்டுகளை ஏற்கும் முதல் சுற்றுலா தலமாக உள்ளது. இது ஐரோப்பிய நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா மற்றும் சில்லறை வணிகர்களுக்கு UPI சேவைகளை விரிவுபடுத்துவதற்கு வழி வகுக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust