
இந்தோனேசியா ஜாவா தீவில் ஏறப்பட்ட நிலநடுக்கத்தினால் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகரத்தை தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தை தலைநகர் ஜகார்த்தாவில் 100 கிலோமீட்டர் தொலைவில் உணர முடிந்தது, அங்கு உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைத்துள்ளனர்.
சுமார் ஒரு நிமிடம் நீடித்த நிலநடுக்கத்தின் போது, சிவில் மற்றும் பிசினஸ் மாவட்டத்தில் உள்ள கட்டிடங்களில் இருந்து அலுவலக ஊழியர்கள் வெளியேறினர்.
இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சியாஞ்சூர் நகரத்தின் நிர்வாகத் தலைவர் ஹெர்மன் சுஹர்மன் இந்த நில நடுக்கத்தினால் 46 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களிடம் கூறினார். மேலும் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் Kompas TVயிடம் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust