Kim Jong Un: நவீன ஆயுதங்கள் முதல் ஹெலிகாப்டர் வரை - அதிபரின் ரயிலில் என்னென்ன இருக்கிறது?

எல்லா உலக தலைவர்களும் விமானத்தில் பறக்கும் போது வடகொரிய அதிபர்கள் மட்டும் மெதுவாக செல்லும் இந்த ரயிலில் பயணிப்பது ஏன்? அப்படி இந்த பாரம்பரிய ரயிலில் என்னதான் இருக்கிறது?
Kim Jong Un: நவீன ஆயுதங்கள் முதல் ஹெலிகாப்டர் வரை - அதிபரின் ரயிலில் என்னென்ன இருக்கிறது?
Kim Jong Un: நவீன ஆயுதங்கள் முதல் ஹெலிகாப்டர் வரை - அதிபரின் ரயிலில் என்னென்ன இருக்கிறது? Twitter
Published on

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான உச்சி மாநாட்டுக்காக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்கு சென்றுள்ளார்.

அதிபர் கிம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது மிகவும் அரிதானது. கோவிட் பரவலுக்கு பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

2011ம் ஆண்டு பதவிக்கு வந்தது முதல் இதுவரை 7 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இரண்டுமுறை தென் கொரியா எல்லையைக் கடந்து சென்றுள்ளார்.

எல்லா சர்வதேச பயணத்தையும் தனது பாதுகாப்பான புல்லட் ப்ரூஃப் ரயிலில் தான் மேற்கொள்கிறார் அதிபர் கிம். சமீபத்தில் ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த எல்லா தலைவர்களும் விமானத்தையே பயன்படுத்தினர்.

உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் சில மணி நேரத்தில் பல்லாயிரம் கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து விமானத்தில் பயணித்துவரும் சூழலில் கிம் வடகொரிய அதிபர்களின் பாரம்பரியப்படி பச்சை - மஞ்சள் நிற ரயிலில் தனது பயணத்தை மேற்கொள்கிறார்.

இதனால் ரஷ்யாவுக்கான 1,180 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொள்ள இவருக்கு 20 மணிநேரம் எடுத்துள்ளது.

இந்த ரயில் பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் கனமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. 90 பெட்டிகள் இருக்கும் இது, மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்கும்.

இன்றைய காலக்கட்ட நவீன ரயில்கள் இதைவிட பலமடங்கு வேகமாக செல்லக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் வெளியில் இருந்து உள்ளே இருப்பவரைப் பார்த்துவிட முடியாதவண்ணம் பல வண்ண சன்னல்களைக் கொண்டிருக்கும்.

ரஷ்ய அதிகாரி கான்ஸ்டான்டின் புலிகோவ்ஸ்கியும் வடகொரிய அதிபருடன் பயணித்தார். அவர் கூறியதன்படி, இந்த ரயிலில் எப்போதும் ஃப்ரெஷான இறால், பிரஞ்சு போர்டியாக்ஸ் மற்றும் பர்கண்டி சிவப்பு ஒயின்கள் இருக்குமாம்.

மேலும், கூட்டங்கள் நடத்துவதற்கான அறை, பார்வையாளர்கள் அறை, படுக்கை அறையுடன் செயற்கைகோள்-தொலைபேசி, தொலைக்காட்சி ஆகிய வசதிகள் இருக்கிறதாம்.

இந்த ரயில் ஒரு கவசம் போன்றது. இதன் சன்னல்கள் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகளால் ஆனது. வெடிகுண்டுகளால் துளைக்க முடியாத அளவு வலுவானதாக இருக்கும். இதனால் இதனை "நகரும் கோட்டை" என அழைக்கின்றனர்.

தென் கொரிய அமைச்சகம் இந்த ரயில் குறித்து குறிப்பிடுகையில், இதில் தாக்குதலுக்கான ஆயுதங்கள் உள்ளன, அவசர காலத்தில் தப்பிப்பதற்கு ஹலிகாப்டர் உள்ளது. இந்த மாதிரியான சாதனங்கள் நிறைந்திருப்பதாலேயே இது மிகவும் மெதுவாக செல்லும் ரயிலாக உள்ளது.

ஒரு விமானத்தில் செல்வதை ஒப்பிடுகையில் இந்த ரயில் பல மடங்கு பாதுகாப்பானது. கிம் செல்லும் ஒரு விமானம் தாக்குதலுக்கு ஆளானால் தப்பிக்க என்ன வழி?

இந்த ரயிலில் செல்லும் பாரம்பரியம் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சங்கிடம் இருந்து தொடங்குகிறது. அவர் வியட்நாமுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ரயிலில் சென்றார்.

கிம்மின் அப்பா கிம் ஜாங் இல் விமானத்தில் பறப்பதற்கு அச்சப்படுபவராக அறியப்பட்டார். அவர் 20,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மாஸ்கோவுக்கு கூட இந்த ரயிலில் 24 நாட்கள் பயணித்து தான் சென்றடைந்தார்!

இந்த ரயில் செல்லும் நிலையங்கள் மற்றும் பாதைகள் ரயில் வருவதற்கு முன்னரே ஸ்கேன் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடும்ப பாரம்பரியத்தின் படி கிம் ஜாங் உன் இன்றும் இந்த ரயிலையே பயன்படுத்தி வருகிறார். ஒரு முறை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க இந்த ரயிலில் 4,500 கிலோமீட்டர்கள் பயணம் செய்து வியட்நாமுக்கு சென்றார்.

இந்த பச்சை-மஞ்சள் ரயில் ஒன்று மட்டுமல்ல, இதுபோல பல ரயில்களை அவர் தயாரித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Kim Jong Un: நவீன ஆயுதங்கள் முதல் ஹெலிகாப்டர் வரை - அதிபரின் ரயிலில் என்னென்ன இருக்கிறது?
வட கொரியா கிம் ஜாங் நம் மரணம்: அதிபரின் அண்ணனுக்கு மலேசிய விமான நிலையத்தில் என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com