Nile : உலகிலேயே நீளமான நதி பாதாள உலகின் வாசலா? - நைல் குறித்த ஆச்சரிய தகவல்கள்!

ஆப்ரிக்க மக்களுக்கும் பரந்த காடுகளில் வசிக்கும் விலங்கினங்களுக்கும் நைல் தான் உயிர் காக்கும் நதி. நைல் நதி எவ்வளவு இன்றியமையாதது என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...
Nile : உலகிலேயே நீளமான நதி பாதாள உலகின் வாசலா? - நைல் குறித்த ஆச்சரிய தகவல்கள்!
Nile : உலகிலேயே நீளமான நதி பாதாள உலகின் வாசலா? - நைல் குறித்த ஆச்சரிய தகவல்கள்!Twitter

உலகில் இருக்கும் பயண மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமான நதி ஆப்ரிக்காவில் இருக்கும் நைல் நதி.

பைபிள் முதலான வரலாற்று புத்தகங்களிலும் ஆப்ரிக்க நாட்டுப்புற கதைகளிலும் நைல் நதி குறிப்பிடப்படுகிறது.

ஆப்ரிக்க மக்களுக்கும் பரந்த காடுகளில் வசிக்கும் விலங்கினங்களுக்கும் நைல் தான் உயிர் காக்கும் நதி. நைல் நதி எவ்வளவு சிறப்பு மிக்கது என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பூமியிலேயே மிக நீளமான நதி

ஆப்ரிக்கா முழுவதும் 6,650 கிலோ மீட்டர் நீண்டிருக்கிறது நைல் நதி.

ஆப்ரிக்க ஏரிகளையும் சகாரா பாலைவனத்தையும் கடந்து மத்திய தரைக்கடலில் சென்று சேருகிறது நைல் நதி.

இது ஆப்ரிக்க கண்டத்தின் பரப்பளவில் 10 விழுக்காடைக் கொண்டுள்ளது.

Nile River, Uganda
Nile River, Uganda

நைல் நதி கடந்து செல்லும் 11 நாடுகள் :

தான்சானியா

உகாண்டா

ரவாண்டா

புருண்டி

காங்கோ ஜனநாயக குடியரசு

கென்யா

எத்தியோப்பியா

எரித்ரியா

தெற்கு சூடான்

சூடான்

எகிப்து

Nile River, Egypt Capital Cairo
Nile River, Egypt Capital Cairo

ஒரே ஒரு நைல் நதி இல்லை

நைல் நதி வெள்ளை நைல், நீல நைல், அத்பரா என மூன்று முக்கிய துணைநதிகளைக் கொண்டுள்ளது.

வெள்ளை நைல் உலகின் மிகப் பெரிய வெப்பமண்டல ஏரியான விக்டோரியா ஏரியில் (தான்சானியா) இருந்து தொடங்குகிறது. இது தான் மிகப் பெரிய நதியும் கூட.

அத்பரா மற்றும் நீல நைல் எத்தியோப்பியாவில் தொடங்குகிறது.

Nile River
Nile River

நைல் இல்லை என்றால் எகிப்து இல்லை

உலகிலேயே வெப்பமான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் எகிப்து நைல் நதியில் துணை நதிகள் கலந்து முழுமையாக செல்லும் பாதையாக இருக்கிறது.

அந்த காலத்தில் ரயில், கார் எல்லாம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் எகிப்துக்கு பயணிக்க மிக விரைவான வழியாக இருந்தது நைல் நதி.

வறண்டு கிடக்கும் எகிப்துக்கு நன்னீர் கொடுத்து வருகிறது.

விவசாயம் செய்யவே முடியாத எகிப்திய நிலம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நைலில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் விவசாயத்துக்கு ஏற்றதாகிறது. இதன் மூலம் எகிப்தியர்கள் தங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்கின்றனர்.

இப்படி பசுமையை அழைத்துவரும் வெள்ளத்தை வஃபா எல்-நில் என்ற விழா கொண்டாடி வரவேற்கின்றனர்.

எகிப்து மக்கள் தொகையில் 95% பேர் நைல் நதியை நம்பியே வாழ்கின்றனர்.

Farmland along the Nile
Farmland along the Nile

மனித வரலாற்றில் நைல்

நாடோடியாக அழைந்து திரிந்த ஆதி மனிதக் கூட்டம் முதன் முதலாக ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கியது நைல் நதியில் தான் என்கின்றனர்.

இதற்கான காரணத்தை இப்போது செயற்கைக் கோள் அனுப்பும் படங்களில் கூட காண முடிகிறது. இந்த படத்தில் நைல் நதியை ஒட்டி மட்டும் பசுமைக் கட்டிப்பிடித்திருப்பது தெரியும்.

நைல் நதிக்கரையில் மட்டுமே அக்கால மனிதர்களுக்கு உணவும், தண்ணீரும் பிரச்னையின்றிக் கிடைத்தது.

பாப்பிரஸ் தாவரம்

நைல் நதியில் வளரும் நீர் வாழ் தாவரமான பாப்பிரஸ் பண்டைய எகிப்தியர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்தது.

அக்காலத்தில் துணி, கயிறு, பாய்கள், பாய்மரங்கள் போன்றவற்றைத் தயாரிக்க இந்த தாவரத்தைப் பயன்படுத்தி வந்தனர். இது இன்றியமையாத வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது.

இதில் பேப்பர் கூட தயாரித்தனர். பாப்பிரஸ் என்ற சொல்லில் இருந்து தான் பேப்பர் என்ற ஆங்கில சொல் உருவானது.

Papyrus
Papyrus

வனவிலங்குகளின் சொர்கம்

நைல் நதியில் ஏராளமான மீன்கள் வளர்கின்றன. நைல் பெர்ச், பார்பெல்ஸ் உள்ளிட்ட சில வகை மீன்கள் இங்கு மட்டுமே காணப்படுகின்றன.

நைல் நதியை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் பறவைகளும் ஆண்டு தோறும் நைல் கரைக்கு வந்து செல்லும் பறவைகளும் ஏராளம்.

நைல் நதில் பெரும் பகுதியில் நீர்யானைகள் வசிப்பதைக் காண முடியும்.

தெற்கு சூடான் பகுதியில் மென்மையான ஓடு கொண்ட ஆமைகள், நாகப்பாம்புகள், கருப்பு மாம்பாக்கள், நீர் பாம்புகள் மற்றும் மூன்று வகையான மானிட்டர் பல்லிகள் இருக்கின்றன. இந்த பல்லிகள் 1.8 மீட்டர் (6 அடி) வளரக் கூடியவை.

இவை அனைத்தையும் விட நைல் நதியில் வசிக்கும் முதலைகள் பிரபலமானவை. இங்கு 6 மீட்டர் ( 20 அடி ) வளரக் கூடிய ராட்சத முதலைகள் கூட இருக்குமாம்.

மரணத்துக்கு பிறகான வாழ்வு

வாழ்வுக்கு மரணத்துக்கும் இடையிலான பாதை தான் நைல் நதி என்று எகிப்தியர்கள் நம்பினார்கள்.

சூரியன் உதிக்கும் கிழக்கு பிறப்பு என்றும் மறையும் மேற்கு மரணம் என்றும் அவர்கள் கருதியதால் கல்லறைகளை (பிரமிடுகள்) எகிப்துக்கு மேற்கே அமைத்தனர். அப்படியானால் அவர்களால் மரணத்துக்கு அடுத்த கீழ் உலகத்துக்கு செல்ல முடியும் எனக் கருதினர்.

pyramid
pyramid

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com