International Beer Day : உலகின் மூன்றாவது பிரபலமான பானமா பீர்? ஒரு சுவாரஸ்ய வரலாறு!

முன்னதாக, பீர் சுவையை சேர்க்க பேரீச்சம்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற உள்ளூர் பொருட்கள் மட்டுமே கொண்டு காய்ச்சி வந்தனர். அதன் பின்னர் அதிக சுவையை சேர்க்க பீரில் மூலிகைகள், பழங்களுடன் ஹாப்ஸ் சேர்க்கப்பட்டது. ஹாப்ஸ் என்பது ஒரு வகையான பூ வகையாகும்.
International Beer Day : உலகின் மூன்றாவது பிரபலமான பானமா பீர்? ஒரு சுவாரஸ்ய வரலாறு!
International Beer Day : உலகின் மூன்றாவது பிரபலமான பானமா பீர்? ஒரு சுவாரஸ்ய வரலாறு!Twitter
Published on

நீண்ட வரலாற்றைக் கொண்ட சில பானங்களில் பீரும் ஒன்று. இந்த பானம் அதன் தனித்துவமான சுவையை கொண்டுள்ளது. இன்று சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்படுகிறது. எதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது என்று பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சர்வதேச பீர் தினம் 2007 இல் கலிபோர்னியாவின் சாண்டா குரூஸில் ஜெஸ்ஸி அவ்ஷலோமோவ் என்பவரால் நிறுவப்பட்டது. 2012 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்பட்டது. ஆனால் பின்னர் அது ஆகஸ்ட் முதல் வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டது.

காய்ச்சியபின் அதன் கைவண்ணத்தை கொண்டாடவும், அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த நாள் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு

பண்டைய காலத்தில் எகிப்து மக்கள் பீர் மீது ஆர்வமாக இருந்தனர் என்பதைக் குறிக்கும் சான்றுகள் உள்ளன. இடைக்காலத்தில், கிறித்துவ துறவிகள் பீர் காய்ச்சி அதில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தனர்.

முன்னதாக, பீர் சுவையை சேர்க்க பேரீச்சம்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற உள்ளூர் பொருட்கள் மட்டுமே கொண்டு காய்ச்சி வந்தனர். அதன் பின்னர் அதிக சுவையை சேர்க்க பீரில் மூலிகைகள், பழங்களுடன் ஹாப்ஸ் சேர்க்கப்பட்டது. ஹாப்ஸ் என்பது ஒரு வகையான பூ வகையாகும்.

பீர் மீதான இந்தியாவின் முயற்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, அதாவது கிமு 1500 இல் தொடங்கியது.

International Beer Day : உலகின் மூன்றாவது பிரபலமான பானமா பீர்? ஒரு சுவாரஸ்ய வரலாறு!
பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்!

புளிக்கவைக்கப்பட்ட பார்லி, பழங்கள், மசாலாப் பொருட்களுடன் கூடிய அரிசி சார்ந்த கலவையாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. பீர் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் பெருமளவில் நுகரப்பட்டது.

1800 களின் பிற்பகுதியிலும் 1900 களின் முற்பகுதியிலும் பிராந்தி, விஸ்கி மற்றும் ஜின் ஆகியவை மக்களிடையே பீருக்குப் பதிலாக வரத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து, பல உள்ளூர் மதுபான உற்பத்தி நிலையங்கள் நாடு முழுவதும் உருவாக்கியது. இந்தியாவில், பீர் மிகவும் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியர்கள் பீரின் சுவையை விரும்பும் வரை வரை நாட்டில் அதன் பயணம் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கண்டது. உலகின் மூன்றாவது பிரபலமான பானமாகவும் பீர் விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 50 பில்லியன் கேலன்கள் பீர் உட்கொள்ளப்படுகிறது!

International Beer Day : உலகின் மூன்றாவது பிரபலமான பானமா பீர்? ஒரு சுவாரஸ்ய வரலாறு!
இந்த பீர் தயாரிக்க இரண்டு நிமிடம் போதும்! Instant Beerஐ சுவைக்க ரெடியா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com