International Tea Day : தற்செயலாக தான் ’டீ’ கண்டுபிடிக்கப்பட்டதா? ஒரு சுவாரஸ்ய வரலாறு!
International Tea Day : தற்செயலாக தான் ’டீ’ கண்டுபிடிக்கப்பட்டதா? ஒரு சுவாரஸ்ய வரலாறு!Canva

International Tea Day : தற்செயலாக தான் ’டீ’ கண்டுபிடிக்கப்பட்டதா? ஒரு சுவாரஸ்ய வரலாறு!

கிமு 616 – 907 ஆண்டுகளில் சீனாவில் இருந்த அரச வம்ச காலத்தில் தேநீர் உலகெங்கும் பரவியது. அதற்கு முன்பு தேயிலை அதன் மருத்துவ குணங்களுக்காக மதிப்பிடப்பட்டது. ஆரம்பத்தில் தேயிலை அரிதான பொருளாக இருந்தது. பின்னர் தேயிலை சாகுபடி பல இடங்களில் வந்த பிறகே பொது மக்களுக்கு தேநீர் கிடைத்தது.
Published on

பல நூற்றாண்டுகளாக பலரும் விரும்பி அருந்தும் கலாச்சார பானம் தான் டீ! உலகளவில் நீரைத் தொடர்ந்து இரண்டாவது அதிகம் நுகரப்படும் பானமாகவும் டீ உள்ளது எனபது உங்களுக்கு தெரியுமா? தேநீர் வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனாவில் தோன்றியதாக நம்பப்பட்டாலும் துல்லியமாக எங்கு தோன்றியது என்று சரியாக தெரியவில்லை.

கிமு 616 – 907 ஆண்டுகளில் சீனாவில் இருந்த அரச வம்ச காலத்தில் தேநீர் உலகெங்கும் பரவியது. அதற்கு முன்பு தேயிலை அதன் மருத்துவ குணங்களுக்காக மதிப்பிடப்பட்டது. ஆரம்பத்தில் தேயிலை அரிதான பொருளாக இருந்தது. பின்னர் தேயிலை சாகுபடி பல இடங்களில் வந்த பிறகே பொது மக்களுக்கு தேநீர் கிடைத்தது.

அதன் கொண்டாட்டம் 2005 ஆம் ஆண்டிற்கு முந்தையது, ஐக்கிய நாடுகள் சபை 2019 இல் ஒரு புதிய சர்வதேச தேயிலை தினத்தை அறிமுகப்படுத்தியது.

சர்வதேச தேநீர் தினம்

சர்வதேச தேநீர் தினத்தின் சரியான தேதி குறித்து பல குழப்பங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 15 ஐ சர்வதேச தேயிலை தினமாக அறிவித்தது. இருப்பினும், மே 21 ஆம் தேதியும் சர்வதேச தேயிலை தினமாகவும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மையின் மீதான அதன் செல்வாக்கை உயர்த்திக் காட்டி, சர்வதேச அளவில் தேயிலையின் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.

International Tea Day : தற்செயலாக தான் ’டீ’ கண்டுபிடிக்கப்பட்டதா? ஒரு சுவாரஸ்ய வரலாறு!
டீ பிரியர்களே உஷார்! மாலை நேரத்தில் தேநீர் குடிக்க கூடாது - ஏன் ?

தேநீர் வரலாறு

தேயிலையின் வரலாறு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவில் உள்ளது. அங்கு சீனப் பேரரசர் ஷென் நங் தற்செயலாக தேநீரை தயாரித்ததாக புராணக்கதை கூறுகிறது. அவரது படைவீரர்களுடன் ஒரு மரத்தடியில் தஞ்சம் புகுந்திருந்தார். அப்போது தண்ணீர் கொதிக்க வைக்கும் போது தற்செயலாக, காற்றில் வீசப்பட்ட தேயிலை இலைகள் தண்ணீரில் விழுந்து தேநீர் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காலப்போக்கில், தேயிலை ஒரு கலாச்சார பானமாக உருவானது. இது ஒரு பிரபலமான பானமாக மட்டுமல்லாமல், மருத்துவ நடைமுறைகள் மற்றும் மத விழாக்களில், குறிப்பாக பல்வேறு ஆசிய கலாச்சாரங்களுக்குள் ஒரு அங்கமாகவும் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை மேற்கு வங்காளம், அசாம், சிக்கிம் மற்றும் கர்நாடகா ஆகியவை தேயிலை சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதிகளாகும்.

நம்மில் பலருக்கு ஒரு டீ குடிக்காமல் அன்றைய நாளை கடத்த முடியாது!

International Tea Day : தற்செயலாக தான் ’டீ’ கண்டுபிடிக்கப்பட்டதா? ஒரு சுவாரஸ்ய வரலாறு!
வெள்ளை டீ முதல் இராணி சாய் வரை : இந்தியாவில் இருக்கும் 18 தேநீர் வகைகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com