இரானில் கடும்போக்கு மதகுரு இப்ராஹிம் ரைய்சி அதிபராகப் பதவியேற்ற பின்பு அங்கு மரண தண்டனைகள் வெகுவாக அதிகரித்துள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இரானில் கடந்த வருடத்தில் மட்டும் 25 சதவீத அளவில் மரண தண்டனைகள் அதிகரித்துள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு 333 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்கிறது நார்வே நாட்டை மையமாகக் கொண்டு இரானில் மனித உரிமை செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் இரான் யூமன் ரைட்ஸ் அமைப்பு மற்றும் பிரான்ஸ்’ஸ் டுகெதர் அகெய்ன்ஸ்ட் டெத் பெனால்டி என்ற அமைப்பு.
இந்த 333 பேரில் 18 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டு பேர். 17 பெண்களும் அடக்கம். 2020ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் சென்ற ஆண்டு கிட்டதட்ட அது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வெவ்வேறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் பல விவாதத்திற்குரியதாகவும் உள்ளது.
ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது சுமார் 126 பேர் போதைப் பொருள் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
சில தெய்வ நிந்தனை குற்றங்களும் இதில் அடங்கும். தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அவர்களின் கொடுமைப்படுத்தும் கணவர்களைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
இதில் சாஹ்ரா இஸ்மாயில் என்ற பெண் தனக்கு முன்பு பலர் தூக்கிலிடப்படுவதைக் கண்டு மாரடைப்பு வந்து இறந்துள்ளார். இருப்பினும் ஈவு இரக்கமின்றி உயிரற்ற உடலையும் தூக்கில் தொடங்கவிட்டுள்ளனர்.
சிலர் தங்களின் பாலின அடையாளங்களுக்காகவும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இது எல்லாவற்றையும்விட கொடூரத்தின் உச்சமாய் தனது கொடுமைக்கார கணவனைக் கொலை செய்த குற்றத்துக்கு மரண தண்டனை பெற்றிருந்த மர்யம் கரிமி என்ற பெண்ணின் தூக்குத் தண்டனையை அவரின் மகளை வைத்து நிறைவேற்றியுள்ளனர்.
2018ஆம் ஆண்டு இரானில் 253 பேர் தூக்கிடப்பட்டனர்.
2019ஆம் ஆண்டு 225 பேர்
2020ஆம் ஆண்டு 267 பேர்
2021ஆம் ஆண்டு 333 பேர்
அதாவது உலகளவில் இரானில்தான் அதிக எண்ணிக்கையிலானோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன.
இரானில் பொதுவாக மரண தண்டனை என்பது தூக்குத் தண்டனையாகும்.இதில் பல தண்டனைகள் போதிய ஆதாரங்கள் இல்லாமலும், போராட்டக்காரர்களை ஒடுக்கவும், அரசை எதிர்ப்பவர்களை ஒடுக்கவும் வழங்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த மரண தண்டனை இரானின் சிறுபான்மை இனக்குழுவான பலூசிஸ் இன மக்களை இலக்கு வைத்தும் வழங்கப்படுவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதம் பேர் பலூசிஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இரானின் மொத்த மக்கள் தொகையில் இந்த பலூசிஸ் இன மக்கள் மொத்தம் 2-6 சதவீதம் பேர் மட்டுமே.
இந்த மரண தண்டனைகள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வமாக வெளியில் தெரிவிக்கப்படுவதும் இல்லை.
அதேபோல முந்தைய காலங்களில் பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றுதல் நடந்து கொண்டிருந்தது அது 2021ஆம் ஆண்டில் நடைபெறவில்லை. ஆனால் அது மீண்டும் நடைமுறைக்கு வரும் என அச்சம் கொள்கின்றன மனித உரிமை அமைப்புகள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu