டிஜிட்டல் மீடியா : மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறதா? - உண்மை என்ன?

எதேச்சதிகார ஆட்சிகளின் தகவல் கட்டுப்பாடு மற்றம் அதன் தாக்கம், ஜனநாயகங்களுக்கு எதிராக "பிரச்சாரப் போர்களை" நடத்துவதற்கும் அவற்றிற்குள் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்கிறது ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் வெளியிட்ட அறிக்கை
Unregulated online content creating a propaganda war
Unregulated online content creating a propaganda war Twitter

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் எனப்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு, (அதன் பிரெஞ்சு மொழி சுருக்கம் RSF என அறியப்படுகிறது), ஒரு சர்வதேச, இலாப நோக்கமற்ற மற்றும் அரசு சாரா அமைப்பாகும். இது தகவல் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸீல் உள்ளது. இதில் தோராயமாக 100 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த சங்கத்தை நிறுவியர்கள் ராபர்ட் மெனார்ட், ரெமி லூரி, ஜாக் மொலேனாட் மற்றும் எமிலியின் ஜூபினோ ஆகியோர் ஆவார். இதன் தற்போதைய தலைமை இயக்குநர் கிறிஸ்டோஃப் தெலோயர். இந்த அமைப்பு 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது

Fight against the misconceived Freedom of Information
Fight against the misconceived Freedom of InformationTwitter

தற்போது இந்தக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒழுங்குபடுத்தப்படாத இணைய ஆன்லைன் உள்ளடக்கம் தவறான தகவல்களையும் பிரச்சாரத்தையும் பரப்ப உதவுவதாக குறிப்பிடுகிறது. மேலும் இது அரசியல் பிளவுகளை விரிவுபடுத்துவதற்கு வழிவகுத்து வருகிறது என்றும், தற்போது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுபை ஒட்டி ஒரு சர்வதேச பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.

இந்த ஊடக கண்காணிப்பு அமைப்பு அதன் கண்டுபிடிப்புகளை அதன் வருடாந்திர உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டின் 2022 பதிப்பில் வெளியிட்டிருக்கிறது.

பிரதான ஊடகங்கள் "ஃபாக்ஸ் நியூஸ் மாதிரியை" பின்பற்றும் போது, ​​சமூக ஊடகங்கள் பரப்பும் தவறான தகவல்களால் ஜனநாயக சமூகங்கள் பிளவுபடுகின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது. இது அமெரிக்க வலதுசாரி தொலைக்காட்சி வலையமைப்பைப் பற்றிய குறிப்பு ஆகும். ஃபாக்ஸ் நியூஸ் சேனல் எனப்படும் FNC, சுருக்கமாக ஃபாக்ஸ் நியூஸ் என அழைக்கப்படுகிறது. மேலும் இது நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட ஒரு அமெரிக்க பன்னாட்டு பழமைவாத கேபிள் செய்தி தொலைக்காட்சி சேனலாகும். இது ஃபாக்ஸ் நியூஸ் மீடியாவிற்கு சொந்தமானது. ஃபாக்ஸ் நியூஸ் மீடியோ, ஃபாக்ஸ் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது. ஃபாக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுசான் ஸ்காட் 17 மே 2018 முதல் பணியாற்றி வருகிறார்.

இந்நிறுவனம் 7 அக்டோபர் 1996 அன்று நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ளது. ஃபாக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனர்கள்: ரூபர்ட் முர்டோக் மற்றும் ரோஜர் ஐல்ஸ். ரூபர்ட் முர்டோக்கிற்கு உலகம் முழுவதும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் உள்ளன. இந்தியாவின் ஸ்டார் குழுமம், தமிழில் விஜய் தொலைக்காட்சியும் இந்நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும்.

பொதுவில் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி போலிச் செய்திகளுக்கும், வலது சாரி தகவல்களுக்கும் பெயர் பெற்றது. டொனால்ட் ட்ரம்ப் அதிபரானதற்கு இந்த தொலைக்காட்சியின் தவறான செய்திகள் மற்றும் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணம் ஆகும். உலக அளவில் ஃபாக்ஸ் நியூஸ் மாடல் என்பது இத்தகைய பொய்ச்செய்தி பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு வழக்காகும்.

எதேச்சதிகார ஆட்சிகள் தங்கள் சமூகங்களுக்குள் உள்ள தகவல்களின் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்குவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் சங்க அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கட்டுப்பாடு மற்றம் அதன் தாக்கம், ஜனநாயகங்களுக்கு எதிராக "பிரச்சாரப் போர்களை" நடத்துவதற்கும் அவற்றிற்குள் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் இத்தகைய கருத்துருவாக்க அணிசேர்ப்பு மிகவும் "தீவிரமாக" மாறுகிறது என RSF இன் செயல்பாடுகள் மற்றும் பிரச்சாரங்களின் இயக்குனர் ரெபேக்கா வின்சென்ட் லண்டனில் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். வின்சென்ட், நெதர்லாந்து, கிரீஸில் பத்திரிகையாளர்களின் மரணங்களை சுட்டிக் காட்டினார்.

மேலும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மில்லியன் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவில் ஒப்படைக்கப்படுவதற்கான விசாரணையை எதிர் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

wiki leaks
wiki leaksTwitter

மேற்கத்திய ஊடகங்களின் "Fox News-isation" “ஃபாக்ஸ் நியூஸ் மயமாக்கம்", ஜனநாயகங்களுக்கு ஒரு அபாயகரமான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குடிமக்களது நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையுள்ள பொது விவாதத்தின் அடிப்படையை ரத்து செய்கிறது" என்று அவர் மேலும் கூறினார். எனவே நாடுகளுக்கிடையிலான போர் என்பது போலிச் செய்திகளின் மூலம் பரப்பப்படும் தகவல்களின் பேரில் இருந்து துவங்குகிறது. இந்தியாவும் இத்தகைய அபாயத்தை கடந்த 8 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது.

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா கடைசி இடங்களில் வருகிறது. ஆகவே உங்களை வந்தடையும் எந்த செய்தியும் உண்மையானதா, பொய்யானதா என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும், சுதந்திரமாக இயங்கும் ஊடகங்களை ஆதரிக்க வேண்டியதும் முக்கியமான கடமைகளாகும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com