இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன? நவீன விமானங்கள் டு நீர்மூழ்கி - ஹமாஸை தோற்கடிக்க முடியுமா?

பிற அரபு நாடுகளை தோற்கடித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த காலங்களில் அமெரிக்காவின் உதவித்தொகை அதிகரித்திருப்பதைக் காணலாம். 2014ம் ஆண்டு கசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது அமெரிக்கா 5 பில்லியன் டாலர்கள் வரை நிதியுதவி கொடுத்திருக்கிறது.
இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன? நவீன விமானங்கள் டு நீர்மூழ்கி - ஹமாஸை தோற்கடிக்க முடியுமா?
இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன? நவீன விமானங்கள் டு நீர்மூழ்கி - ஹமாஸை தோற்கடிக்க முடியுமா?Twitter

பாலஸ்தீன நாட்டின் பகுதியான கசாவில் ஒருவாரத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். கசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கசா மக்கள் தப்பி ஓட கூட வழியில்லாமல் வெட்டவெளி சிறையில் அடைக்கப்பட்டது போல சிக்கியுள்ளனர். தண்ணீர், உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதுவரை ஆயிரக்கணகான பாலஸ்தீனியர்கள் அங்கு இறந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் இந்த தாக்குதலை ஆரம்பித்தபோதே அமெரிக்கா தனது போர் கப்பலை உதவிக்கு அனுப்பியது.

ஆனால் பிற நாடுகளின் உதவி தேவையில்லை எனக் கூறிவிட்டது இஸ்ரேல். ஹமாஸ் இயக்கத்தை முழுவதுமாக அழிக்க இஸ்ரேலால் முடியுமா? அவர்களின் இராணுவ பலம் என்ன? இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்யும் இராணுவ உதவிகள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்

இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் நிபந்தனை இல்லாத ஆதரவு தொடர்ந்து இருந்துவருகிறது. இந்த போரில் ஏவுகணைகளும் போர் விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருந்தார்.

மத்திய கிழக்கு நாடுகளுள் அமெரிக்காவுக்கு முழு ஆதரவு வழங்குவது இஸ்ரேல் மட்டுமே. இதனால் இஸ்ரேல் அந்த பகுதியில் அதீத இரணுவ பலத்துடன் இருப்பதை அமெரிக்கா விரும்புகிறது. இஸ்ரேலின் இராணுவ மேலாதிக்கம் அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கைகளில் ஒன்று என்றேக் கூறப்படுகிறது.

சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் - International Institute for Strategic Studies (IISS) -ன் இராணுவ இருப்பு 2023 கூறுவதன் படி, இஸ்ரேல் மிகப் பெரிய இராணுவ இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் சுமார் 1,69,500 பேர் முக்கியப் பணியாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் துணை இராணுவம் ஆகிய பிரிவுகளில் உள்ளனர்.

மேலும் 4,65,000 பேர் அதன் இருப்புப் படைகளாக உள்ளனர். 8,000 பேர் அதன் துணை ராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

சுமார் 3,00,000 இஸ்ரேலிய வீரர்கள் இப்போது காசா பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளனர். மிகப் பெரிய தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் குடிமக்களுக்கு இராணுவ சேவை கட்டாயம். 18 நிரம்பிய ஆண்கள் 32 மாதமும் பெண்கள் 24 மாதமும் இராணுவ சேவையாற்ற வேண்டும்.

இஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரிய இராணுவ பலம்கொண்டதாக இருக்கின்றது. இராணுவ கண்காணிப்பிலும் நவீன ஆயுதங்கள் வைத்திருப்பதிலும் மேம்பட்ட நாடாக திகழ்கிறது இஸ்ரேல்.

ஹமாஸின் ஏவுகனைகளை அழிக்க இஸ்ரேல் பயன்படுத்தும் அயர்ன் டோம் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும். இது எதிரியின் ஏவுகணையை கண்டறிந்து அதனை தடுக்க எதிர் ஏவுகணையை ஏவப் பயன்படும் அமைப்பாகும். இதில் நவீன ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

2021ம் ஆண்டு ஹமாஸ் ஏவிய ஏவுகணைகளில் 90 விழுக்காடு இஸ்ரேலின் அயர்ன் டோமால் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலில் தரைப்படையில் 2200க்கும் மேற்பட்ட பீரங்கிகளும் artillery எனப்படும் சிறிய ரக பீரங்கி 530-ம் இருக்கிறது.

விமானப்படையைப் பொறுத்த வரை, 339 போர் திறன் கொண்ட விமானங்கள் இருக்கின்றன. இவற்றில் 309 தரை தாக்குதல் ஜெட் விமானங்கள் அடக்கம்.

விமானங்களின் எண்ணிக்கை:

196 F-16 ஜெட் விமானங்கள்

83 F-15 ஜெட் விமானங்கள்

30 F-35 ஜெட் விமானங்கள்

142 ஹெலிகாப்டர்கள்

43 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள்

இவற்றில் F-35 மிகவும் மேம்படுத்தப்பட்ட விமானமாகும். இது வான்வழி சண்டைகளுக்கும் தரைத் தாக்குதலுக்கும் பயன்படக் கூடியது.

கடற்படையைப் பொறுத்தவரை 5 நீர் மூழ்கிகளும் 49 ரோந்து மற்றும் கடலோரப் படை கப்பல்களும் உள்ளன.

இவற்றைத் தவிர ஜெரிகோ ஏவுகணைகளும் அணு ஆயுதங்களும் அவற்றை வீசக்கூடிய திறன் கொண்ட விமானங்களும் இஸ்ரேலிடம் இருப்பதாக கூறுகிறது IISS.

இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன? நவீன விமானங்கள் டு நீர்மூழ்கி - ஹமாஸை தோற்கடிக்க முடியுமா?
Isreal - Hamas: குடியிருப்பு, மருத்துவமனை, முகாம்களில் தாக்குதல்! கசா மக்களின் நிலை என்ன?

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) கூறுவதன்படி, இஸ்ரேல் 2022ம் ஆண்டு 23.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இராணுவத்துக்கு ஒதுக்கியிருக்கிறது.

2018 முதல் 2022 வரை சராசரியாக ஒரு ஆண்டில் ஒரு நபருக்கு 2,535 அமெரிக்க டாலர்கள் என்ற வகையில் செலவிட்டுள்ளது இஸ்ரேல். இது அமெரிக்காவை விட அதிகம். உலகளவில் கத்தார் மட்டுமே இதைவிட அதிகமாக 3,379 அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளது.

2022ம் ஆண்டு அதன் மொத்த ஜிடிபி-யில் 4.5 விழுக்காட்டை இராணுவத்துக்காக செலவிட்டுள்ளது. இது உலக அளவில் 10வது அதிக விழுக்காடாகும். இந்தியா 2023ம் ஆண்டு 1.19 விழுக்காடு பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுடன் ஒப்பிடுகையில் ஹமாஸ் குழுவில் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. 7000 முதல் 10000 வீரர்கள் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் இராணுவத்தின் மிகப் பெரிய சக்தியாக இருப்பது விமானப்படையே. வான்வழி தாக்குதலில் வீரர்கள் இழப்பும் மிகக் குறைவாக இருக்கும்.

ஆனால் கசா போன்ற மக்கள் அடர்த்திமிக்க பகுதியில் விமானப்படையை பயன்படுத்துவது பொதுமக்கள் இறப்புக்கு வழிவகுக்கும். மேலும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் இருந்து தப்பிக்க சுரங்கங்களைப் பயன்படுத்துகின்றனர். இஸ்ரேல் இராணுவத்துக்கு கூடுதல் தலைவலியாக இருக்கிறது.

இதே நேரத்தில் ஹமாஸிடம் விமானப்படையோ, கடற்படையோ கிடையாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தனது இராணுவத்தை பலம்வாய்ந்ததாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது இஸ்ரேல். 2018-22 வரையிலான காலக்கட்டத்தில் 35 நாடுகள் 3.2 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்கியிருக்கின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கை (1.2பில்லியன்) வாங்கியிருப்பது இந்தியா தான்!

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதல் இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவு புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜெர்பைஜான், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தியாவைத் தொடர்ந்து அதிக ஆயுதங்களை வாங்குகின்றன.

இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன? நவீன விமானங்கள் டு நீர்மூழ்கி - ஹமாஸை தோற்கடிக்க முடியுமா?
Hamas : இஸ்ரேல் மீது போர்தொடுக்கும் இஸ்லாமிய அமைப்பின் பின்னணி என்ன? - சுருக்கமான வரலாறு

பல நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்தாலும் இரண்டு நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறது இஸ்ரேல். அவை அமெரிக்காவும் ஜெர்மனியும். 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கியிருக்கிறது. இதிலும் அமெரிக்காவிடமிருந்தே 2.1 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை பெற்றிருக்கிறது.

தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் அமெரிக்க இராணுவமும் இஸ்ரேல் இராணுவமும் இணைந்து செயல்படுகின்றன. பல கூட்டு பயிற்சிகளையும் இரு இராணுவங்களும் இணைந்து மேற்கொள்கின்றன.

அமெரிக்கா வெளிநாட்டு உதவி என்ற பெயரில் இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையை அதிகம் பெறும் நாடாக இருக்கிறது இஸ்ரேல். 1946 மற்றும் 2023 க்கு இடையில் சுமார் 263 பில்லியன் டாலர்களை வாங்கியிருக்கிறது.

இஸ்ரேலைத் தொடர்ந்து எகிப்து, ஆஃப்கானிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகள் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உதவி பெற்றிருக்கின்றன. இந்தியா இதுவரை 76.8 பில்லியன் டாலர்கள் உதவித்தொகைப் பெற்றுள்ளது.

மத்திய கிழக்கு உலகில் அமெரிக்கா அடையும் பலன்களை பாதுகாக்கவும் விருப்பங்கங்களை நிறைவேற்றவும் உதவும் கூட்டாளியாக இஸ்ரேல் விளங்குகிறது.

இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன? நவீன விமானங்கள் டு நீர்மூழ்கி - ஹமாஸை தோற்கடிக்க முடியுமா?
இஸ்ரேல் : பாலும் தேனும் ஓடும் நாடு என அறியப்படுவது ஏன்?

2023ம் ஆண்டு அமெரிக்கா இஸ்ரேல் இராணுவத்துக்கு வழங்கிய நிதி 3.8 பில்லியன் டாலர்களை விட அதிகம். ஹமாஸ் தாக்குதல் தொடுத்த உடனே அயர்ன் டோம் உள்ளிட்ட உபகரணங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இது இன்று நேற்று அல்ல. இஸ்ரேல் என்ற நாடு உருவாகி யோர்தான் நதியின் மேற்குகரை, கசா மற்றும் பல பகுதிகளை கைப்பற்றுவதற்க்கு அமெரிக்காவின் உதவித்தொகை உதவியிருக்கிறது. பிற அரபு நாடுகளை தோற்கடித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த காலங்களில் இந்த உதவித்தொகை அதிகரித்திருப்பதைக் காணலாம். 2014ம் ஆண்டு கசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது அமெரிக்கா 5 பில்லியன் டாலர்கள் வரை நிதியுதவி கொடுத்திருக்கிறது.

இஸ்ரேல் இராணுவத்தின் பலம் என்ன? நவீன விமானங்கள் டு நீர்மூழ்கி - ஹமாஸை தோற்கடிக்க முடியுமா?
இஸ்ரேல் என்ற நாடு உருவாக ஐன்ஸ்டீன் காரணமாக இருந்தது எப்படி? - அறிவியலாளரின் மற்றொரு முகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com