இஸ்ரேல் பெண்ணுக்கு 'லவ் ப்ரபோஸ்' செய்த ஹமாஸ் வீரர் - என்ன நடந்தது?

"எல்லாரும் விடுதலையாகி சென்றுவிடுவார்கள். நீ என்னுடனே இருந்து என் குழந்தைகளைப் பெற்றுக்கொடு" என அவர் நோகாவிடம் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற பேச்சுகளுக்கு சிரித்தபடியே பதிலளித்திருக்கிறார் நோகா. மறுத்தால் தன்னைக் கொன்றுவிடுவார்களோ என அஞ்சியதாக தெரிவிக்கிறார்.
இஸ்ரேல் பெண்ணுக்கு 'லவ் ப்ரபோஸ்' செய்த ஹமாஸ் வீரர் - என்ன நடந்தது?
இஸ்ரேல் பெண்ணுக்கு 'லவ் ப்ரபோஸ்' செய்த ஹமாஸ் வீரர் - என்ன நடந்தது?Twitter

காசாவில் பணயக்கைதியாக இருந்த பெண், அவரை பிடித்து வைத்திருந்த பாலஸ்தீனிய ஆயுதப்படையைச் சேர்ந்த நபர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

18 வயதான நோகா வெய்ஸ் கிப்புட்ஸ் பீரி என்ற பகுதியில் இருந்த தனது வீட்டில் இருந்து கடந்த அக்டோபர் 7ம் தேதி கடத்தப்பட்டார். (இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய தினம்)

கடந்த ஆண்டு ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி விடுவிக்கப்பட்டார் நோகா.

50 நாட்கள் ஹமாஸ் பிடியில் இருந்த நோகாவுக்கு 14வது நாளில் மோதிரம் அளித்து திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். 50வது நாள் வரை அந்த பாலஸ்தீனியருடனே இருந்திருக்கிறார் நோகா.

"எல்லாரும் விடுதலையாகி சென்றுவிடுவார்கள். நீ என்னுடனே இருந்து என் குழந்தைகளைப் பெற்றுக்கொடு" என அவர் நோகாவிடம் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற பேச்சுகளுக்கு சிரித்தபடியே பதிலளித்திருக்கிறார் நோகா. மறுத்தால் தன்னைக் கொன்றுவிடுவார்களோ என அஞ்சியதாக தெரிவிக்கிறார்.

ஆனால் நோகாவின் அம்மா ஷிரி, ஹமாஸைச் சேர்ந்த நபரை திட்டியிருக்கிறார்.

நேகாவின் தந்தை அக்டோபர் 7 தேதி அதிகாலையில் வீட்டை விட்டு வெளியில் சென்றிருக்கிறார். கிப்புட்ஸ் பீரி அவசரப்படையில் இணைந்த அவர் குறித்து அதற்கு பிறகு தகவல் இல்லை. அவர் இறந்துவிட்டதாக பின்னாளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று நோகாவின் வீட்டுக்குள் துப்பாக்கி குண்டுகள் முழங்க ஹமாஸ் படையினர் நுழைந்துள்ளனர். நோகாவை கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்த ஷிரி ஹமாஸ் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதன் பிறகு நோகாவையும் கண்டறிந்து கைதுசெய்துள்ளனர். பணயக்கைதிகளாக இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர். பின்னர் உலகநாடுகளின் அழுத்தம் காரணமாக பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தபோது இருவரும் இஸ்ரேல் திரும்பியுள்ளனர்.

இஸ்ரேல் பெண்ணுக்கு 'லவ் ப்ரபோஸ்' செய்த ஹமாஸ் வீரர் - என்ன நடந்தது?
மாறுவேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்து ஹமாஸ் வீரரை தீர்த்துக்கட்டிய இஸ்ரேல் இராணுவம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com