Lottery Ticket
Lottery TicketPexels

லட்சம் என நினைத்தவருக்கு கோடி - லாரி டிரைவருக்கு லாட்டரியில் அடித்த ஜாக்பாட்

அமெரிக்காவின் மிச்சிகன் என்ற இடத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. முதலில் 1.5 லட்சம் என நினைத்திருந்தவருக்கு, நிஜத்தில் கிடைத்த பரிசு 8 கோடி ரூபாய்.
Published on

லாட்டரி டிக்கெட் வாங்குவதில் இன்றும் நமக்கு ஆர்வம் அதிகம் தான். பரிசு கிடைக்குதோ இல்லையோ, அதற்கான காத்திருத்தலில், எதிர்பார்ப்பில் ஒரு தனி உற்சாகம் உள்ளது.

அதுபோல தான் மிச்சிகன் என்ற இடத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவருக்கு, ஜாக்பாட் அடித்துள்ளது.

இவர் ஒரு லாரி டிரைவர் என்பதால் அதிக நாட்கள் மிச்சிகனில் இருக்கவேண்டிய சூழல் ஏற்படுமாம். மிச்சிகனில் இருக்கும் சமயங்களில் லாட்டரி சீட்டுகளை ஆர்வத்துடன் வாங்கியதாக அந்த நபர் தெரிவித்தார்.

லாட்டரி சீட்டை வாங்கிய அன்றைக்கே அதை ஸ்க்ராட்ச் செய்து பார்த்ததில் தனது சீட்டில் உள்ள எண்ணுக்கு தான் பரிசு கிடைத்துள்ளது என்று குறுஞ்செய்தி கிடைத்ததாம். 1.5 லட்சம் ரூபாய் லாட்டரியில் கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியிலிருந்தவருக்கு, இன்னும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மீண்டும் ஒரு முறை அந்த சீட்டை ஸ்க்ராட்ச் செய்ததில், அவருக்கு நிஜத்தில் விழுந்த பரிசு தொகை 8 கோடி ரூபாயாம்.

அந்த லாட்டரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் உறுதிப்படுத்திய பின்னர் தான் 8 கோடி பரிசு கிடைத்துள்ளதை அவரே நம்பியுள்ளார்.

தனக்கு கிடைத்த 8 கோடி ரூபாயை வைத்து தனக்கென ஒரு கார் வாங்கவுள்ளதாகவும், மீதமுள்ள பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு 2 முறை லாட்டரி விழுந்ததில் கிட்டதட்ட 3 கோடி ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Lottery Ticket
2 முறை லாட்டரி பரிசு - கோடியில் புரளும் Lucky Woman

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com