ரூ.5.5 லட்சத்துக்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த ஐஸ்கிரீம் அவர்கள் நினைத்த சுவையை அடைய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1.5 ஆண்டுகள் உழைத்து இந்த பியாகுயா என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர்.
ரூ.5.5 லட்சத்துக்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
ரூ.5.5 லட்சத்துக்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி என்ன ஸ்பெஷல்? ட்விட்டர்
Published on

உலகின் காஸ்ட்லியானை ஐஸ்கிரீம் ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில், ரூ.5.5 லட்சம்.

ஒரு கப் ஐஸ்கிரீமுக்கு எதற்கு லட்சக்கணக்கில் விலை என்று கேட்டால், கின்னஸ் உலக சாதனைகள் அதற்கு பதிலளிக்கிறது. இதில் வழக்கமாக ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் மட்டுமல்லாமல், சில விசேஷமான பொருட்களும் உடன் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் செல்லாட்டோ என்ற ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விலையுயர்ந்த ஐஸ்கிரீமின் பெயர் பியாகுயா.

இந்த ஐஸ்கிரீமில் இத்தாலியிலுள்ள அல்பா நகரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் அரிதான வெள்ளை நிற டிரஃபில் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை, ஒரு கிலோ 2 மில்லியன் ஜப்பானிய யென், அதாவது 11.9 லட்சம் ரூபாய்.

அடுத்ததாக, பார்மிகியானோ ரெக்கியானோ எனப்படும் ஒரு சீஸ் வகை இதில் சேர்க்கப்படுகிறது. இது கொஞ்சம் கெட்டியாக இருக்கும் உலர்ந்த சீஸ். இதில் பழங்களின் சுவையை உணரலாம்.

ரூ.5.5 லட்சத்துக்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
Ice Cream என்ற பெயர் எப்படி வந்தது? உங்கள் ஃபேவரைட் குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்

அடுத்து, சேக் லீஸ் எனப்படும் மற்றொரு வகை சீஸ் சேர்க்கப்படுகிறது. சேக் என்பது புளித்த அரிசியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு மதுபான வகை. இந்த சேக் லீஸின் சுவை, இந்த மதுபானத்தின் சுவையை போல இருக்கும்.

அடுத்த பொருள் தான் சிறப்பம்சமே. இதில் உண்ணக்கூடிய தங்க இதழ் சேர்க்கப்படுகிறது.

ஜப்பானிய மூலப்பொருட்களுடன், ஐரோப்பிய மூலப்பொருட்களை இணைத்து இந்த ஐஸ் கிரீமை தயாரிக்கவேண்டும் என செல்லாட்டோ நிறுவனம் நினைத்துள்ளது. இதனால் இந்த புதிய வகை ஐஸ்கிரீமை தயாரித்துள்ளது.

இந்த ஐஸ்கிரீம் அவர்கள் நினைத்த சுவையை அடைய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1.5 ஆண்டுகள் உழைத்து இந்த பியாகுயா என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர்.

இதனை புதிய சாதனையாக கின்னஸ் உலக சாதனைகள் அங்கீகரித்துள்ளது.

ரூ.5.5 லட்சத்துக்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
Popsicle : குச்சி ஐஸ் 11 வயது சிறுவனால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதா? ஒரு ஆச்சரிய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com