பொதுவாக மனிதர்களாகிய நமக்குப் பொழுதுபோக்காக ஏதாவது ஒரு பழக்கம் இருக்கும், உதாரணமாக நம் நாட்டில் சிலர் பேருந்துகளிலோ, ரயில் நிலையங்களிலோ வாங்கும் பயணச்சீட்டுகளைப் பத்திரமாக வைத்துப் பாதுகாப்பார்கள்.
அந்த சீட்டின் மதிப்பு கலாவதியானாலும் அதனைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பார்கள், அந்த பழக்கத்தினை தொடர்ந்து கடைப்பிடித்து வருவார்கள்.
அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த நெர்னோ டைசுகி என்ற நபர் சற்று வித்தியாசமாகத் தினமும் தனது ஷூக்களில் சிக்கியுள்ள கற்களைச் சேமித்து வருவதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில்
கடந்த ஜூன் 2021 கொரோனா தொற்று அதிகரித்த போது பழக்கத்தைத் தொடங்கியதாகவும், பொழுது போக்கிற்காக இதனை சேகரிக்க தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும் போது தனது ஷூவில் சிக்கும் கூழாங்கற்கள்,கண்ணாடி துண்டுகள் பார்த்துள்ளார்.
சிக்கிய கற்களைத் தூக்கிய எறிய மனம் வராமல், அதனை ஏன் சேமிக்க கூடாது என்று எண்ணி தற்போது இந்த செயல் அவரின் பழக்கமாக மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதுவரை 179 கூழாங்கற்களும் 32 கண்ணாடி துண்டுகள் என மொத்தமாக 212 உள்ளதாகக் கணக்குக் காட்டியுள்ளார் டைசுகி. இந்த நிலையில் நெர்னோ டைசுகியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust