ஜப்பானில் பாரம்பரியமாக நடைபெற்றுவரும் குழந்தைகளுக்கான சுமோ போட்டி கொரோனோ பரவலுக்கு பிறகு மீண்டும் நடைபெற்றது.
இந்த விளையாட்டுக்கு மொத்தமாக குழந்தைகள் அழைத்துவரப்பட்டு கதற கதற அழ வைக்கப்பட்டனர்.
இதன் மூலம் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த பாரம்பரிய விளையாட்டை நடத்தினர்.
டோக்கியோவில் உள்ள சென்சோஜி கோவிலில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளும் குழந்தைகள் சுமோ வீரரைப் போல உடையணிந்து அழைத்துவரப்படுகின்றனர்.
போட்டிப்போடும் இரண்டு குழந்தைகளை ஒருவரை ஒருவர் பார்த்தபடி பெற்றோர்கள் பிடித்து வைக்கின்றனர்.
பேய் போல மாஸ்க் அணிந்த ஒருவர் சுமோ ரிங்கில் இருக்கும் குழந்தைகளை பயங்காட்டுகிறார். முதலில் அழும் குழந்தை வெற்றியாளராக கருதப்படுகிறது.
கையில் இருக்கும் மர விசிறியைக் கொண்டு வெற்றி பெற்ற குழந்தையை அறிவிக்கிறார் நடுவர்.
இந்த போட்டிக்கு குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்கள், "குழந்தை அழுவது அவர்களின் ஆரோக்கியத்தின் வெளிப்பாடக இருக்கிறது. அவர்கள் ஆரோக்கியமாக அழுவதை கேட்பதற்காக இங்கு வருகிறோம்" எனக் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இந்த குழந்தைகளின் அழுகை சுமோ போட்டி நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் குழந்தைகள் அழுவதென்பது மிகவும் மோசமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் ஜப்பானில் அழுத்தமாக அழும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த போட்டிக்கான விதிமுறைகள் ஜப்பானின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சில இடங்களில் குழந்தைகளை சுமோ ரிங்குக்கு அழைத்துவரும் அப்பாக்களும் சுமோ உடை அணிந்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust