வழக்கறிஞரை டேட் செய்யும் நடிகர்?
வழக்கறிஞரை டேட் செய்யும் நடிகர்? Twitter

Johnny Depp: பிரிவில் இணைந்த இதயங்கள் - வழக்கறிஞரை டேட் செய்யும் நடிகர்?

தனக்காக வழக்காடிய வழக்கறிஞர் ஒருவரை நடிகர் ஜானி டெப் டேட் செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. டெப்பிற்காக அவதூறு வழக்கை நடத்தியது வழக்கறிஞர் கமீல் வாஸ்க்.
Published on

தனக்காக வழக்காடிய வழக்கறிஞரை ஜானி டெப் டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் உலகம் முழுவதுமே பரபரப்பு ஏற்படுத்திய விஷயம் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டின் அவதூறு வழக்கு. ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த வழக்கு இரண்டு மாதங்கள் நீண்டு ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. இதில் ஜானி டெப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் நாம் அறிந்ததே. 

ஜானி மற்றும் ஜோயல்
ஜானி மற்றும் ஜோயல்

இதற்கிடையில் தனக்காக வழக்காடிய வழக்கறிஞர் ஒருவரை நடிகர் ஜானி டெப் டேட் செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. டெப்பிற்காக அவதூறு வழக்கை நடத்தியது வழக்கறிஞர் கமீல் வாஸ்க். 

வழக்கு நடைபெற்று வந்தபோது, ஜானியின் சார்பாக வாதாடிய கமீலை அவர் காதலித்து வருவதாக பல வந்தந்திகள் பரவி வந்தது. இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் சந்தேகங்களை கிளப்பின. இதனை 'sexist' என கமீல் குறிப்பிட்டிருந்தார். 

ஜோயல் மற்றும் கமீல்
ஜோயல் மற்றும் கமீல்

ஆனால் பேசப்படும் வழக்கறிஞர் இந்த கமீல் அல்ல. இவரது பெயர் ஜோயல் ரிச். ஜோயல் இங்கிலாந்தில் நடந்த ஸ்ன் பத்திரிக்கை அவதூறு வழக்கில் ஜானியின் சார்பாக வாதாடியவர். ஆனால் இந்த வழக்கில் ஜானிக்கு எதிராக தான் தீர்ப்பு வந்தது.

ஜோயல் ரிச்சை தான் தற்போது ஜானி டெப் டேட் செய்து வருகிறார் என வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் ஆம்பர் ஹெர்டுக்கு எதிரான அவதூறு வழக்கு நடைபெற்றபோது ஜோயல் ஜானிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வீற்றிருந்ததாக Us Weekly என்ற பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

ஜோயல் ரிச்சுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் தன் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவர்களது விவாகரத்துக்கு பின் ஜானி டெப் - ஜோயல் ரிச் ஜோடி தன் காதலை உலகுக்கு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கறிஞரை டேட் செய்யும் நடிகர்?
ஜானி டெப் ஷாட்: இணையத்தில் வைரலாகும் பார் விளம்பரம் - என்ன ஸ்பெஷல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com