Josephine Baker: இசை உலகின் மகாராணி உளவாளி ஆன கதை - மினி சீரிஸ் 2

கிட்டத்தட்ட ஆடையே இல்லாத அளவுக்குக் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து கொண்டு, அவர் பாடிக் கொண்டே ஆடும் நடனம் ஆண்களை ஜுரத்தில் நடுங்க வைத்தது. ஜோசஃபைன் பேக்கரின் தோலின் நிறம் பிரான்ஸ் ரசிகர்களுக்கு ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை.
Josephine Baker: பிரான்ஸின் உளவு படையில் அமெரிக்க பெண்? - விவேகமான கருப்பின பெண்ணின் கதை 2
Josephine Baker: பிரான்ஸின் உளவு படையில் அமெரிக்க பெண்? - விவேகமான கருப்பின பெண்ணின் கதை 2twitter
Published on

பாரிஸ் நகரத்தில் வலது கால் எடுத்து வைத்திறங்கிய ஜோசஃபைன் பேக்கருக்கு, பாரிஸ் ஒரு பிரமாண்ட வாழ்கையை உருவாக்கிக் கொடுக்கும் என அவரிடம் சொல்லி இருந்தால் வாய்விட்டுச் சிரித்திருப்பார் பேக்கர்.

ஜோசஃபைன் பேக்கர் ஆடத் தொடங்கியதும் அவரை பார்த்த பிரான்ஸ் மக்கள் உடனடி ரசிகர்களாயினர். கிட்டத்தட்ட ஆடையே இல்லாத அளவுக்குக் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து கொண்டு, அவர் பாடிக் கொண்டே ஆடும் நடனம் ஆண்களை ஜுரத்தில் நடுங்க வைத்தது. 

ஜோசஃபைன் பேக்கரின் தோலின் நிறம் பிரான்ஸ் ரசிகர்களுக்கு ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. இன்ஸ்டன்ட் காபி போல, ஜோசஃபைன் பேக்கரின் புகழ் பட்டிதொட்டி எங்கும் சடுதியில் பரவியது.

1926ஆம் ஆண்டு நகைச்சுவைக் குழு அமெரிக்கா திரும்பிய போது, அக்குழு உடனான ஒப்பந்தங்களை எல்லாம் முடித்துக் கொண்டு பிரான்ஸ் நாட்டுக்கே திரும்பிவிட்டார் ஜோசஃபைன் பேக்கர். அதன் பிறகு ஜோசஃபைன் பேக்கரின் வாழ்கையில் பசி, பட்டினி, பஞ்சம் என்கிற சொற்கள் காணாமல்போனது.

அமெரிக்கக் கலைஞர் ஒருவர், பிரான்ஸ் நாட்டை கட்டி ஆழ்வதாகப் பத்திரிகைகள் பட்டாபிஷேகம் செய்தன. உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவே ஜோசஃபைன் பேக்கரின் அழகை தன் ஓவியத்தில் வழிந்தோடச் செய்தார். உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் கவிஞர் & எழுத்தாளர் ஜீன் காக்டியூ (Jean Cocteau) உள்ளூர் ஸ்டாராக இருந்த ஜோசஃபைன் பேக்கரை உலகப் புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றார். 

இத்தனை புகழ் அடையும் போது எதிர்ப்புகள் இல்லாமல் இருக்குமா என்ன..? மத குருமார்கள் மற்றும் சமூகத்தின் காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பழமைவாதம் பேசும் கூட்டம், ஜோசஃபைன் பேக்கரை மிகக் கடுமையாக எதிர்த்தது, கலாச்சாரத்தைச் சீரழிப்பவர் என முத்திரை குத்தியது. இதனால் சில நிகழ்ச்சிகள் கூட ரத்தானதாகவும் செய்திகள் இருக்கின்றன.

1939ஆம் ஆண்டுக்குள், பிரான்ஸ் நாட்டில் பச்சைக் குழந்தையிடம் ஜோசஃபைன் பேக்கரின் பெயரைச் சொன்னால் கூட தெரியுமெனத் தலையசைக்கும் அளவுக்குப் பிரபலமடைந்துவிட்டார் ஜோசஃபைன் பேக்கர். பிரான்ஸ் நாட்டின் சமானிய மக்கள் தொடங்கி, அரசு அதிகாரிகள், மற்ற நாட்டுத் தூதர்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், உளவாளிகள்... எனப் பல ஜோசஃபைன் பேக்கரின்  ரசிகர்கள் வட்டாரத்தில் இல்லாத ஆட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இரண்டாம் உலகப் போர்:

செப்டம்பர் 1939ஆம் ஆண்டு, ஜெர்மனி போலந்து மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜெர்மனி மீது போர் அறிவித்தது. ஜெர்மனியை எப்படியும் வென்றுவிடலாம் என பிரான்ஸ் நம்பியது. ஆனால் அதற்கு வலுவான, நம்பகமான உளவுப் படைத் தேவை என்பதில் உறுதியாக இருந்தார் ஜேக்ஸ் அப்டே என்கிற பிரான்ஸ் நாட்டின் உளவுத் துறை மூத்த அதிகாரி.

அப்போதுதான், தன் ரகசிய ஒற்றர்களில் ஒருவரான டேனியல் மரூனி (Daniel Marouani) என்கிற இசைக் கச்சேரி ப்ரொமோட்டர்களில் ஒருவரைச் சந்தித்தார். பிரான்ஸ் நாட்டின் ஒற்றர் படைக்கு ஜோசஃபைன் பேக்கர் என்கிற நடனக் கலைஞர் உதவிகரமாக இருப்பாரென முன் மொழிந்தார்.

புகழின் உச்சத்தில் இருக்கும் பெண் கலைஞர்களை நம்புவதா? என ஜேக்ஸ் யோசித்தார். அதோடு மாடா ஹாரி என்கிற பெண் ஜெர்மனியின் உளவாளியாக பிரான்ஸை உளவு பார்த்த சம்பவம் அவருக்கு ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியது. அதுவரை ஜோசஃபைன் பேக்கரை ஜேக்ஸ் அப்டே நேரடியாகச் சந்தித்ததில்லை.

ஆனால் ஜோசஃபைன் பேக்கருக்கு இருக்கும் தொடர்புகள் பெரும் பயனைத் தருமென டேனியல் எடுத்துச் சொல்லி ஜோசஃபைன் பேக்கரை சந்திக்க ஏற்பாடு செய்தார். 

ஜோசஃபைன் பேக்கரின் பிரமாண்ட பங்களாவிலேயே பேக்கர் - ஜேக்ஸ் அப்டே உடனான சந்திப்பு நடைபெற்றது. ஜோசஃபைன் பேக்கர் சுற்றி வளைக்காமல் பிரான்ஸ் தரப்புக்கு உளவு ரீதியில் உதவும் தன் ஆர்வத்தை ஜேக்ஸ் அப்டேயிடம் நேரடியாகத் தெரிவித்தார்.

அதெப்படி ஒரு அமெரிக்கப் பெண்மணி, பிரான்ஸ் நாட்டுக்கு உதவ முடியும்? என்கிற அடிப்படைக் கேள்வி ஜேக்ஸ் அப்டே மனதில் எழுந்தது. 

மேலும் பேசிய ஜோசஃபைன் பேக்கர் "பாரிஸ் நகர மக்கள் எனக்கு அன்பை மட்டுமே காட்டியிருக்கிறார்கள்" என உள்ளத்திலிருந்து பேசினார். "அவர்கள் தங்கள் இதயத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள், நான் என் இதயத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். பிரான்ஸ் நாட்டின் சேவைக்கு என் வாழ்வையே கொடுக்க நான் தயார் கேப்டன்" என பளிச்சென பேசியது ஜேக்ஸ் அப்டேவை சிந்தனையில் ஆழ்த்தியது.

Josephine Baker: பிரான்ஸின் உளவு படையில் அமெரிக்க பெண்? - விவேகமான கருப்பின பெண்ணின் கதை 2
Josephine Baker: இசை உலகின் மகாராணி உளவாளி ஆன கதை - மினி சீரிஸ் 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com