கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை அறிவிக்கப்பட்டதனால் பிரச்சனைகள் வெடிக்கத் தொடங்கின. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதனால் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவிகள் காவித் துண்டுகளை அணிந்து வந்தனர். ஹிஜாப் தங்கள் உரிமை என இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் இறங்கவே மாணவர்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் ஹிஜாப் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். இந்த குழுக்களுக்கு இடையில் கலவரம் மூண்டது இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.
இதற்கிடையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால், மீண்டும் பிரச்சனைகள் வெடித்தன. ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து குவைத் நாட்டின் இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவின் சார்பில் குவைத் நாட்டின் இந்தியத் தூதரகத்துக்கு அருகில் 'அல்லாஹு அக்பர்' (இறைவனே மிகப்பெரியவன்) என்று எழுதப்பட்ட பதாகைகளைக் கையில் ஏந்திய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் மத தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. இந்தியாவின் குடிமக்கள் முஸ்லிம் நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எங்களது எதிர்ப்பை, கருத்துக்களை இந்தியத் தூதரகம் அந்த நாட்டுக்கு அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியுள்ளனர்.