கென்யா : ”ஒரு பெண்ணுக்காக மட்டும் நான் படைக்கபடவில்லை” - 3 சகோதரிகளை திருமணம் செய்த நபர்

3 பேர் பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள் என்றும், வேறொரு பெண்ணை வாழ்க்கைக்குள் கொண்டுவர நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
Kenya Man Marries Three Sisters
Kenya Man Marries Three SistersTwitter
Published on

மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் கென்யா நாட்டில் நிகழ்ந்துள்ளது.

ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி இல்லை என்றாலும், இவ்வாறு நிகழ்ந்து வருகிறது.

கென்யாவில் ஒட்டிப்பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேத், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகளும் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை திருமணம் செய்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

முதலில் கேத் தான் ஸ்டீவோவை சந்தித்துள்ளார். பின்னர் கேத்தின் சகோதரிகளை சந்தித்த ஸ்டீவ், அவர்களிடம் பேசி பழகியபோது, தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்தாராம்.

உடனே மூன்று பேரையும் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.

மூன்று பெண்களுடனும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இணையவாசிகளை கடுப்பேற்றியுள்ளார்.

Kenya Man Marries Three Sisters
தனது மகளையே திருமணம் செய்த 62 வயது முதியவர்: வைரலாகும் வீடியோ - உண்மை என்ன? | Fact Check

ஸ்டீவோ பேசுகையில், "3 பேருடனும் சமமாக நேரம் செலவிட நான் தீவிரமாக அட்டவணையை பின்பற்றுகிறேன். வாரந்தோறும் திங்கட்கிழமைகளை மேரிக்காகவும், செவ்வாய்க்கிழமைகளை கேத்திற்காகவும், புதன்கிழமைகளை ஈவிற்காகவும் ஒதுக்கியுள்ளேன்.

அதேநேரத்தில் மூன்று சகோதரிகளின் தேவைகளை பூர்த்திசெய்வதில் கொஞ்சம் சிரமாக இருப்பதாக கூறினார்.

மேலும் 3 பேர் பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள் என்றும், வேறொரு பெண்ணை வாழ்க்கைக்குள் கொண்டுவர நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அந்த பெண்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

Kenya Man Marries Three Sisters
இறந்தவர்களுக்கு திருமணம்; பிணங்களை திருடும் குற்றவாளிகள் - சீன சடங்கின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com