Ukraine War : உக்ரைன் போரிலிருந்து தப்பித்த கிரிக்கெட் வீரர் Kevin Pietersen குடும்பம்

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கெவின் பீட்டர்சன் குடும்பத்தினர் உக்ரைன் போரில் இருந்து தப்பி போலந்து சென்றது குறித்து பகிர்ந்துள்ளார்.
கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர்சன்

Twitter

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கிகெட் கேப்டன் கெவின் பீட்டர்சன் உக்ரைன் - ரஷ்யப் போரில் சிக்கிக்கொண்ட அவரது குடும்பம் அங்கிருந்து தப்பித்து போலந்தில் தஞ்சமானது குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ரஷ்யத் தாக்குதலில் தப்பித்து வரும் உக்ரைனிய மக்களுக்கு அண்டை நாடான போலந்து வெளிப்படுத்தும் அன்பு அளப்பரியது என்றும் தனது பதிவில் கூறியுள்ளார்.


கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பதிவில், “உக்ரைனிலிருந்து தப்பிச் செல்பவர்களுக்கு போலந்து நம்ப முடியாத ஆதரவளித்து வருகிறது. இரு நாடுகளின் எல்லை அருகில் வர்சா என்ற நகரத்தில் என் குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் போரின் போது தப்பித்துப் பக்கத்து நாடான போலந்திற்கு சென்றனர்… போலந்து மக்கள் அவர்களுக்கு அளித்த அன்பு இதுவரை அனுபவித்திடாது” என்று கூறியுள்ளார்.

இன்றுடன் ஆறாவது நாளாக ரஷ்யா - உக்ரைன் இடையில் போர் நடந்து வருகிறது. உக்ரைனிலிருந்து 15 லட்சம் மக்கள் வரை அகதிகளாக வெளியேறுவார்கள் என்று ஐ.நா கணித்துள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனில் மற்றொரு அண்டை நாடான ருமேனியாவில் மக்கள், அகதிகளாக வரும் உக்ரேனியர்களுக்காக உணவு மற்றும் தண்ணீருடன் எல்லையில் காத்திருக்கும் புகைப்படம் வெளியாகி உலக அளவில் பரவியது. தற்போது மற்றொரு அண்டை நாடான ருமேனியாவும் உக்ரைன் மக்களை அன்புடன் வரவேற்பது உலக மக்களிடையே புதிய நம்பிக்கையை மலரச் செய்துள்ளது.

<div class="paragraphs"><p>கெவின் பீட்டர்சன்</p></div>
Dhoni வைத்திருந்த நம்பிக்கையை இழந்த Suresh Raina| அவர் செய்த தவறு தான் காரணம்!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com