kim kardashian
kim kardashianNewsSense

Kim Kardashiyan: குழந்தைகளை எழுப்ப கிராமி விருது பெற்ற பியானோ கலைஞர்- நெட்டிசன்ஸ் ட்ரால்

ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் கிம் கர்தாஷியன். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, அவர்களை கிம் பிரிந்த நிலையில், பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்தார்.
Published on

கிராமி விருது பெற்ற இசைக்கலைஞரை அழைத்துவந்து தன் குழந்தைகளை எழுப்ப ஏற்பாடுகள் செய்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன்.

டிசம்பர் மாதம் முழுவதும், தன் குழந்தைகளை தூக்கத்திலிருந்து விழிக்க வைக்க கிராமி விருது பெற்ற பியானோ கலைஞர் ஃபிலிப் கார்னிஷ் என்பவரை கிம் கர்தாஷியன் நியமித்துள்ளார். இதனால் இணையவாசிகள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

கிம் கர்தாஷியன் - கன்யே வெஸ்ட் விவாகரத்து
கிம் கர்தாஷியன் - கன்யே வெஸ்ட் விவாகரத்துTwitter

ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் கிம் கர்தாஷியன். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, அவர்களை கிம் பிரிந்த நிலையில், பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்தார்.

ஆனால் இந்த தம்பதி கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். சமீபத்தில், கிம் கர்தாஷியன் - கென்யே வெஸ்ட் விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது. இதில், தன் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சமாக கென்யே மாதம் 1.6 கோடி ரூபாய் அளிக்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

kim kardashian
Kim Hardashian : கிம் கர்தாஷியனை வீழ்த்திய தமிழக வம்சாவளி ஜெயஶ்ரீ - யார் இவர்?

இந்நிலையில், தற்போது கிம் கார்தாஷியன் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையவாசிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் கிராமி விருது பெற்ற பியானோ கலைஞர் ஃபிலிப் கார்னிஷ் என்பவர் கிம்மின் வீட்டில் பியானோ வாசித்துக்கொண்டிருக்கிறார்.

தன் குழந்தைகளை தூக்கத்திலிருந்து எழுப்ப ஃபிலிப் பியானோ வாசிப்பதாக கிம் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஃபிலிப் தினமும் இதற்காக தன் வீட்டிற்கு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கிம் கார்தாஷியனுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள்

”காலை வேளைகளில் அவர்கள் (குழந்தைகள்) மனதை அமைதிப்படுத்தி, அந்த நாளை இனிதாக தொடங்க, அழகான கிறிஸ்துமஸ் பாடல்களை” ஃபிலிப் இசைப்பதாக கிம் அந்த ஸ்டோரியில் கூறியிருந்தார்.

இந்த புகைப்படம் இணையவாசிகளை சற்று கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கிராமி போன்ற உயரிய விருது பெற்ற ஒரு கலைஞனை இவ்வாறு நடத்துவது சரியல்ல என்பது ரசிகர்களின் கருத்து.

ஆனால், பியானோ கலைஞர் ஃபிலிப் கிம் கார்தாஷியன் குழந்தைகளுக்காக பிரத்யேக இசை நிகழ்ச்சி நடத்துவது இது ஒன்றும் முதல்முறையல்ல. கடந்த ஆண்டும் இதே போன்ற அவர் குழந்தைகளுக்காக அவர் பியானோ வாசிக்கும் புகைப்படங்களை கிம் பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த கிம்மை விமர்சித்து வருகிறது இணையம்.

kim kardashian
கிம் கர்தாஷியன் விவாகரத்து: மாதம் ரூ.1.6 கோடி இழப்பீடு கொடுக்கும் முன்னாள் கணவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com