நீச்சல் குளம், 15 மாடி, தியேட்டர்: உலகின் மிகப்பெரிய 10 பயணக் கப்பல்கள் இவைதான்!

தற்போது உல்லாச பயணத்திற்கென்று மக்கள் கப்பல்களில் பயணிக்கின்றனர். நட்சத்திர விடுதிகளின் வசதிகளைக் கொண்ட இக்கப்பல்களில் சில வாரங்கள் வரை பயணத்திட்டங்களை வகுத்திருப்பார்கள். சரக்கு போக்குவரத்துதான் கப்பல்களின் பிரதானப் பணி.
பயணக் கப்பல்கள்
பயணக் கப்பல்கள்Pexels
Published on

உலகில் பயணத்திற்கென்று கப்பல்களை யாரும் பயன்படுத்துவதில்லை. காரணம் அவை விமானங்கள், ரயில்களை விட மெதுவாகவே செல்லும். ஆயினும் விமானப் போக்குவரத்து வளரும் வரை உலக நாடுகளது மக்களின் பயணத்தை கப்பல்கள்தான் சாத்தியமாக்கின. அப்படித்தான் காந்தியும், அம்பேத்கரும் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் படித்தனர். தற்போது உல்லாச பயணத்திற்கென்று மக்கள் கப்பல்களில் பயணிக்கின்றனர். நட்சத்திர விடுதிகளின் வசதிகளைக் கொண்ட இக்கப்பல்களில் சில வாரங்கள் வரை பயணத்திட்டங்களை வகுத்திருப்பார்கள். சரக்கு போக்குவரத்துதான் கப்பல்களின் பிரதானப் பணி.

டைட்டானிக் கப்பல் கூட அப்படி ஒரு உல்லாசப் பயணக் கப்பலோடு, பயணிகளது போக்குவரத்திற்கும் பயன்பட்ட கப்பல் தான். அதன் காலத்தில் டைட்டானிக்தான் மிகப்பெரும் கப்பல். தற்போது டைட்டானிக்கை விஞ்சும் மிகப்பெரும் கப்பல்கள் அறிமுகமாயிவிட்டன. அப்போதிருந்த நீராவிக் கப்பல்கள் தற்போது எரிபொருள் - டீசல் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செயல்படுகின்றன.

Luxury Ship
Luxury Ship Pexels

இங்கே உலகின் பத்து பெரும் உல்லாசப் பயணக் கப்பல்களை வரிசைக் கிரமமாகப் பார்க்கலாம்.

1. Wonder of the Seas – கடல்களின் அதிசயம்

ஒண்டர் ஆஃப் தி சீஸ் கப்பலானது பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்ட ஒன்று. ஜனவரி 2022 தனது பயணத்தை துவக்கிய இக்கப்பல்தான் தற்போது உலகின் மிகப்பெரும் பயணக் கப்பலாகும். இதன் மொத்த எடை 2,36,857 டன்கள், நீளம் 1,188 அடி. பயணிகள் தளங்கள் 16. மொத்த அறைகள் 2,867. பயணிகளின் எண்ணிக்கை 5,734. ஊழியர்களின் எண்ணிக்கை 2,300.

இப்படி ஒரு சிறு நகரத்தையே சுமந்து செல்கிறது இக்கப்பல். இதில் பல வசதிகளைக் கொண்ட தங்கும் அறைகள், பல வகை உணவகங்கள், பார்கள், நீச்சல் குளங்கள், இசையரங்கு, திரையரங்கு என பல வசதிகள் உள்ளன. அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்திலிருந்து இக்கப்பல் தனது பயணத்தை ஸ்பெயினின் பார்சிலோனாவை நோக்கி துவங்கியது. அதன் வழியில் கரீபியன் வளைகுடாவில் ஏழு இரவு பயணங்களைக் கொண்டிருக்கிறது.

Wonder of the Seas
Wonder of the SeasPexels

2. Symphony of the Seas சிம்பொனி ஆஃப் தி சீஸ்

இதுவும் பிரான்ஸில் கட்டப்பட்ட கப்பலாகும். மார்ச், 2018 இல் தனது முதல் பயணத்தை இக்கப்பல் துவங்கியது. தனது முதல் பயணத்தை இக்கப்பல் ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து துவக்கியது. இதன் மொத்த எடை 2.28,081 டன்கள். நீளம் 1,188 அடி. பயணிகள் எண்ணிக்கை 5,518. ஊழியர் எண்ணிக்கை 2,100. இக்கப்பலிலும் அனைத்து வசதிகளும் உள்ளன.

Symphony of the Seas
Symphony of the Seas Pexels

3. Harmony of the Seas ஹார்மனி ஆஃப் தி சீஸ்

இந்தக் கப்பலும் பிரான்ஸில் கட்டப்பட்ட பயணிகள் கப்பலாகும். மே மாதம், 2016 ஆம் ஆண்டு இக்கப்பல் தனது முதல் பயணத்தை துவங்கியது. கப்பலின் மொத்த எடை 2,27,500 டன்கள். நீளம் 155.6 அடி. பயணிகள் எண்ணிக்கை 5,480. ஊழியர் எண்ணிக்கை 2,100. இந்தக் கப்பலில் கடலுக்கு அடியில் கடலை ரசிக்கும் வண்ணம் ஜன்னல்கள் கொண்ட அறைகள் உள்ளன.

Harmony of the Seas
Harmony of the SeasPexels

4. Allure of the Seas – கடல்களின் கவர்ச்சி

இந்தக் கப்பலும் எண்ணற்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. மற்ற கப்பல்களை விட இக்கப்பல் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. கப்பலில் மிகப்பெரும் அக்வா அரங்கம் உள்ளது இதன் சிறப்பு. முதல் பயணம் அக்டோபர் 2010. மொத்த எடை 2,25,282 டன்கள். நீளம் 1,187 அடி. பயணிகள் எண்ணிக்கை 5,400. ஊழியர் எண்ணிக்கை 2,384.

Allure of the Seas
Allure of the Seas Pexels

5. Oasis of the Seas - கடல்களின் ஓயாசிஸ்

இக்கப்பல் பின்லாந்து நாட்டில் கட்டப்பட்டது. தனது முதல் பயணத்தை டிசம்பர் 2009 இல் துவங்கியது. உல்லாசப் பயண சுற்றுலாவில் புதிய உச்சத்தை தொட்ட கப்பல் இது. இதிலும் பல்வேறு வசதிகள் உள்ளன. மொத்த எடை 2,25,282. நீளம் 1,186 அடிகள். பயணிகள் எண்ணிக்கை 5,400. ஊழியர் எண்ணிக்கை 2,394.

Oasis of the Seas
Oasis of the SeasPexels

6. Costa Smeralda – கோஸ்டா ஸ்மரால்டா

இந்தக் கப்பல் பின்லாந்தில் கட்டப்பட்டது. தனது முதல் பயணத்தை டிசம்பர், 2019 இல் துவங்கியது. திரவ வகைப்பட்ட இயற்கை எரிவாயுவில் செயல்படும் கப்பல்களில் இதுவே முதலாவதாகும். தனது முதல் பயணத்தை ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து துவங்கியது. மொத்த எடை 1,85,000 டன்கள். பயணிகள் எண்ணிக்கை 6,600. ஊழியர் எண்ணிக்கை 1,500. விருந்தினர் அறைகள் 2,600. மற்ற சொகுசுப் பயணக் கப்பல்களை விட அதிக பயணிகள் செல்ல முடியுமென்பது இக்கப்பலின் சிறப்பு.

Costa Smeralda
Costa SmeraldaPexels

7. P&O Iona - பி&ஓ அயோனா

இக்கப்பல் பிரிட்டனால் கட்டப்பட்ட ஒன்று. இக்கப்பலும் திரவ வகை இயற்கை எரிவாயுவில் செயல்படும் கப்பலாகும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இக்கப்பல் தனது முதல் பயணத்தைத் தாமதமாக அக்டோபர் 2020 இல் துவங்கியது. மொத்த எடை 1,84,700 டன்கள். நீளம் 344 மீட்டர். பயணிகள் எண்ணிக்கை 5,200. ஊழியர் எண்ணிக்கை 1,800. தளங்கள் 15.

P&O Iona
P&O IonaPexels

8. AIDAnova மற்றும் AIDAcosma

ஜெர்மனியில் கட்டப்பட்ட இவ்விரண்டு கப்பல்களும் திரவ வகை இயற்கை எரிவாயுவில் செயல்படும் ஒன்றாகும். AIDAnova டிசம்பர் 2018 இல் தனது முதல் பயணத்தை துவக்கியது. பின்னர் சகோதரிக் கப்பல் AIDAcosma டிசம்பர் 2021 இல் வந்தது. மொத்த எடை 1,83,900 டன்கள். நீளம் 337 மீட்டர்கள். பயணிகள் எண்ணிக்கை 6,600. ஊழியர் எண்ணிக்கை 1,500.

AIDAnova
AIDAnovaPexels

9. MSC Grandiosa & MSC Virtuosa - எம்எஸ்சி கிராண்டியோசா & எம்எஸ்சி விர்ச்சுசா

இவை இரண்டும் உலகின் ஒன்பதாவது மிகப்பெரும் பயணக் கப்பல்களாகும். எம்எஸ்சி விர்ச்சுசா தனது பயணத்தை பிப்ரவரி 2021இல் துவங்கியது. இக்கப்பலில் உலகின் முதன் முதலான மனிதர்களைப் போன்று செயல்படும் பார் உதவியாளர் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது எம்எஸ்சி கிராண்டியோசா தனது பயணத்தை ஏப்ரல் 2021இல் துவங்கியது. இவ்விரண்டு கப்பல்களும் பிரான்சு நாட்டில் கட்டப்பட்டன. மொத்த எடை 1,81,541. நீளம் 331 மீட்டர்கள். பயணிகள் எண்ணிக்கை 6,334. ஊழியர் எண்ணிக்கை 1,704.

MSC Grandiosa
MSC Grandiosa Pexels

10. Carnival Mardi Gras - கார்னிவல் மார்டி கிராஸ்

இக்கப்பல் பிரான்சு நாட்டில் கட்டப்பட்டது. டிசம்பர், 2020 இல் தனது முதல் பயணத்தை இக்கப்பல் துவக்கியது. இக்கப்பல்களில் ஆறுவகையான பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளன. அதில் ஒன்றில் ரோலர் கோஸடர் விளையாட்டும் உள்ளது. இத்தகைய பொழுது போக்கு வசதிகளைக் கொண்ட இக்கப்பல் இதுதான். கொரோனா தாக்கத்தால் இதன் முதல் பயணம் தடைபட்டது. கப்பலின் மொத்த எடை 1,80,800 டன்கள். நீளம் 1,130 அடிகள். பயணிகள் எண்ணிக்கை 5,282. ஊழியர் எண்ணிக்கை 1,735. விருந்தினர் தளங்கள் 15.

Carnival Mardi Gras
Carnival Mardi GrasPexels

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com