லாரன்ஸ் ஆஃப் அரேபியா : அரபு உலகைக் கலக்கியவரின் சாகச வரலாறு - விறுவிறுப்பான கதை

லாரன்ஸ் பல திறமைகளைக் கொண்ட மனிதர். ஏழு மொழிகளில் சரளமாகப் பேசுவார். தொல்பொருள் ஆய்வாளராக மட்டுமல்லாமல், போர் விமானி, உளவுத்துறை அதிகாரி, இராஜதந்திரி மற்றும் இராணுவ உத்திகள் வகுப்பவராகவும் அவர் பணியாற்றினார். துருக்கியிடமிருந்து அரபு மக்களைக் காத்த போராளி.
Lawrence of Arabia
Lawrence of ArabiaTwitter

லாரன்ஸ் ஆஃப் அரேபியா என்ற பெயரில் நீங்கள் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்திருக்கலாம். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான லாரன்ஸ் பற்றி எண்ணிறைந்த படங்கள் வெளி வந்துள்ளன. இதில் பீட்டர் ஓ டூல் நடித்து 1966 இல் வெளிவந்த வாழ்க்கை வரலாற்றுப் படம் முக்கியமானது. அதே போன்று இன்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசைகளிலும் லாரன்ஸ் வருகிறார்.

ஓட்டோமோன் துருக்கியர்களுக்கு எதிராகப் போராடிய அரபுலக கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து இவர் போராடினார். அதனால் ஊடகங்களால் இவர் "லாரன்ஸ் ஆஃப் அரேபியா" என்று அழைக்கப்பட்டார்.

லாரன்ஸ் பல திறமைகளைக் கொண்ட மனிதர். ஏழு மொழிகளில் சரளமாகப் பேசுவார். தொல்பொருள் ஆய்வாளராக மட்டுமல்லாமல், போர் விமானி, உளவுத்துறை அதிகாரி, இராஜதந்திரி மற்றும் இராணுவ உத்திகள் வகுப்பவராகவும் அவர் பணியாற்றினார்.

அவர் தனது சுயசரிதையான "ஞானத்தின் ஏழு தூண்கள் - தி செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டத்தில் தனது வரலாற்றை விரிவாக விவரித்திருப்பார். இந்நூல் 1926 இல் வெளிவந்து, லாரன்ஸை சர்வதேசப் புகழுக்கு உயர்த்தியது. 46 வயதில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவர் இறக்கும் வரை அவரது வாழ்வின் மர்மமான வரலாறு பெரும்பாலும் பலருக்கும் தெரிந்திராத ஒன்று.

Lawrence of Arabia படத்திலிருந்து
Lawrence of Arabia படத்திலிருந்துTwitter

லாரன்ஸின் குழந்தைப் பருவம்

அவரது தந்தை, ஐரிஷ் பிரபுவான தாமஸ் சாப்மேன். அவரது தாயார் சாரா ஜுன்னர். இத்தம்பதியினருக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். லாரன்ஸ் ஆகஸ்ட் 16, 1888 இல் வேல்ஸில் பிறந்தார். பின்னர், குடும்பம் ஆக்ஸ்போர்டுக்கு குடிபெயர்ந்தது. அங்கு தான் லாரன்ஸ் ஆர்வமுள்ள மற்றும் புத்திசாலியான சிறுவனாக வளர்ந்தார்.

லாரன்ஸ் முதல் உலகப் போரில் இரண்டு சகோதரர்களை இழந்தார்

தாமஸ் சாப்மேன் மற்றும் சாரா ஜுன்னருக்கு பிறந்த ஐந்து ஆண் குழந்தைகளில் இரண்டாவது மகனாக லாரன்ஸ் வளர்ந்தார். முதலில் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் ஆக்ஸ்போர்டில் வரலாற்றைப் படித்து, சிலுவைப்போர் கோட்டைகள் பற்றிய தனது ஆய்வறிக்கையை எழுதினார். முதலாம் உலகப் போர் வெடித்தபோது, ​​லாரன்ஸ் சிரியாவில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியிலிருந்தார். பிரிட்டிஷ் இராணுவம் அவரை கெய்ரோவில் உள்ள வரைபடத்தை உருவாக்கும் துறையில் நியமித்தது.

லாரன்ஸுக்கு ஒரு அறையில் முடங்கிக் கொண்டு வேலை பார்ப்பது போதுமானதாக இல்லை. குறிப்பாக அவரது சகோதரர்களான வில் மற்றும் ஃபிராங்க் மேற்கத்தியப் போர்முனையில் கொல்லப்பட்ட பிறகு, அவர் ஆர்வம் வேறு திசையில் சென்றது.

தனது சகோதரர்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள் என்று லாரன்ஸ் கருதினார். மற்றும் தானும் அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர்.

லாரன்ஸ் ஆஃப் அரேபியா பிரபலமானார்

1916 ஆம் ஆண்டில், இப்போது சவுதி அரேபியாவின் ஹெஜாஸ் பகுதியில் வாழ்ந்த அரேபியர்கள், ஒட்டோமான் பேரரசின் அடக்குமுறை நடைமுறைகளுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தொடங்கினர். ஒட்டோமான் பேரரசு ஜெர்மனியுடன் தன்னை இணைத்துக் கொண்டதால், ஆங்கிலேயர்கள் அரேபியர்களை ஆதரித்தனர்.

அதன் பொருட்டு மெக்காவின் ஷெரீப் ஹுசைனின் மகன் இளவரசர் பைசலுக்குத் தொடர்பு அதிகாரியாகச் செயல்பட லாரன்ஸை போர் பகுதிக்கு அனுப்பினர்.

அவரது போர்க்கள வீரம் அமெரிக்கப் பத்திரிகையாளர் லோவெல் தாமஸின் கவனத்தை ஈர்த்தது. 1926 ஆம் ஆண்டு லாரன்ஸ் தனது நினைவுக் குறிப்பான தி செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டத்தை வெளியிட்டபோதுதான் அவரது புகழ் வளர்ந்தது.

Lawrence of Arabia படத்திலிருந்து
Lawrence of Arabia படத்திலிருந்துTwitter

லாரன்ஸின் போர்க்கள சாதனைகள்

ஒருபுறம், நூறாயிரக்கணக்கான அரேபிய வீரர்கள் மற்றும் தோழர்கள் லாரன்ஸை ஒரு ஹீரோவாக கருதினர். 1920கள் மற்றும் 1930களில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வளரும் பள்ளிக் குழந்தைகளிடம் அவர் பிரபலமானார். சந்தேகத்திற்கு இடமின்றி லாரன்ஸ் துணிச்சலாகவும் புத்திசாலியாகவும் இருந்தார். துருக்கியர்களுக்கு எதிரான தனது போராட்டத்தில் இளவரசர் ஃபைசலுடன் இணைவதற்கு முன்பு எந்தவிதமான போர்ப் பயிற்சியும் பெறாத லாரன்ஸ் தன்னை ஒரு தந்திரமான மற்றும் இரக்கமற்ற இராணுவ உத்தி வகுப்பவராகக் காட்டினார்.

மறுபுறம், லாரன்ஸ் அரபு கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டார். அங்கி போன்ற அரபுலக ஷேக்குகளின் உடைக்குத் தன்னை மாற்றிக் கொண்டார். ஆனால், காமன்வெல் பத்திரிக்கையின் கூற்றுப்படி, அவர் தனக்குக் கீழே உள்ள அரேபியர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

அவர் சில வழிகளில், மற்ற ஐரோப்பியர்களைப் போன்ற காலனித்துவ வாதியாக இருந்தார். 20 ஆம் நூற்றாண்டின் அரேபியர்களை முட்டாள்கள் என்றும் நகரத்தில் வாழும் அரேபியர்களோ தெரிந்து கொள்ளக்கூடத் தகுதியற்றவர்கள் என்றும் நிராகரித்தார். அவர் தனது நினைவுக் குறிப்பில் எழுதினார், "அரை ஐரோப்பிய மயமாக்கப்பட்ட அரேபியரின் முழுமையான நம்பிக்கையற்ற அநாகரிகம் பயங்கரமானது. அரேபியர்கள் தீண்டப்படாமல் இருப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது."

அவர் கண்டுபிடித்த பல கொரில்லா போர்த் தந்திரங்கள் மிகவும் சக்திவாய்ந்த துருக்கியர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. இதில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் அல்லது ஐஇடி- IEDகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்றும் மத்திய கிழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. அரேபியர்களுக்குத் துருக்கியர்களுடன் போரிட உதவுவதில் லாரன்ஸ் வெற்றி பெற்றாலும் அவரது கைகளிலும் இரத்தம் இருப்பதை மறுக்க முடியாது.

T.E.Lawrence
T.E.LawrenceTwitter

லாரன்ஸ் தனது சொந்தக்குழுவின் உறுப்பினரைத் தூக்கிலிட வேண்டிய கட்டாயம்

ஜனவரி 1917 இல், லாரன்ஸ், அதற்குள் பெடோயின்களுடன் இணைந்து கொண்டார். அரபுக் கிளர்ச்சி என்று அழைக்கப்படுவதில் ஒரு தலைவராக அவர் இருந்தாலும் இந்த அனுவபம் அவரது சிறந்த மற்றும் மோசமான நாட்களில் ஒன்றாகவும் இருந்தது. துருக்கிய வீரர்கள் மீது வெற்றிகரமான தாக்குதலுடன் இம்மாதம் தொடங்கியது. அதில் அவரது வாழ்க்கை வரலாற்றின்படி, லாரன்ஸ் மற்றும் 35 ஆயுதமேந்திய பழங்குடியினரின் குழு இரண்டு துருக்கியர்களைப் பிடித்து விசாரணைக்காக அவர்களின் முகாமுக்கு அழைத்து வர முடிந்தது. இந்த விசாரணையின் போது தனது சொந்த போராளி ஒருவரது துரோகம் காரணமாக அவரை தூக்கிலிட வேண்டிய கட்டாயத்தில் லாரன்ஸ் இருந்தார். இந்தக் கொலை லாரன்ஸை வாழ்நாள் முழுவதும் வேட்டையாடியது.

Lawrence of Arabia
பர்மா - சயாம் மரண ரயில் பாதை : கொத்து கொத்தாக இறந்த தமிழர்கள் - ஒரு ரத்த சரித்திரம்

இந்த நேரத்தில், லாரன்ஸ் மிகவும் நோய்வாய்ப்பட்டார். கொதிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் மலேரியா ஆகியவற்றுடன் போராடினார். பணி பற்றிய நிச்சயமற்ற தன்மையிலும் அவர் பாதிக்கப்பட்டார். அவரும் அவரது சகோதரர்கள் குழுவும் பாலைவனத்தின் குறுக்கே கடலோர நகரமான அகாபாவை நோக்கிச் செல்லும்போது, ​​ரயில் பாதைகளைத் தகர்த்தனர். அவர் தனது தனிப்பட்ட நாட்குறிப்பில் சண்டையிலிருந்து தப்பியோடுவதையோ அல்லது கொல்லப்படுவதையோ தவிர வேறு எதையும் விரும்பவில்லை என்று எழுதினார்.

அவர் நினைத்தது போல இரண்டும் நடக்கவில்லை.

அரேபியாவின் லாரன்ஸ் ஒரு நல்ல நண்பரைப் பட்டினியால் இழந்தார்

லாரன்ஸ் தனது நினைவுக் குறிப்பான, ஞானத்தின் ஏழு தூண்களில், தஹூம் என்ற புனைபெயர் கொண்ட செலிம் அகமது என்ற மனிதனைப் பற்றி அன்புடன் எழுதுகிறார். இதற்கு அரபு மொழியில் "சிறிய இருளான ஒன்று" என்று பொருள். லாரன்ஸ் டாஹூமை சந்தித்த போது துருக்கி/சிரியா எல்லையில் உள்ள கார்கெமிஷில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த இளைஞனின் புத்திசாலித்தனத்தால் கவரப்பட்ட லாரன்ஸ் அவருக்கு ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களைக் கொடுக்கத் தொடங்கினார். பதிலுக்கு, தஹூம் லாரன்ஸுக்கு அரபி கற்பித்தார். இருவரும் பல ஆண்டுகளாகப் பிரிக்க முடியாதவர்களாக இருந்தனர், ஒன்றாகப் பயணங்களுக்குச் சென்றனர்.

ஜூன் 1914 இல், லாரன்ஸ் பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் துருக்கியப் படைகளுக்கு எதிராகப் போராடும் அரபு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்பாக பணியாற்றுவதற்காக கார்கெமிஷில் டாஹூமை விட்டு வெளியேறினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டமாஸ்கஸிற்கான முக்கியப் போருக்கு லாரன்ஸ் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​1916 மற்றும் 1917 ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்த பஞ்சத்தின் போது டஹூம், டைபஸ் நோயால் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டார்.

அனைத்து சண்டைகளும் முடிந்து, லாரன்ஸ் தனது சொந்த நாடான பிரிட்டனுக்குத் திரும்பியபோது, ​​அவர் செலிம் அகமது என்று பெரும்பாலான அறிஞர்கள் நம்பும் "எஸ்.ஏ." க்கு ஏழு தூண்கள் புத்தகத்தை அர்ப்பணித்தார். அவர்களுக்கு இடையே ஓரினச்சேர்க்கை காதல் இருந்ததாகப் பின்னர் தெரியவந்தது.

Lawrence of Arabia
Lawrence of ArabiaTwitter

லாரன்ஸ் தனது அரேபியக் கூட்டாளிகளுக்குத் துரோகம் செய்து விட்டதாக உணர்ந்தார்

பிரிட்டனும் பிரான்சும் ஈடுபட்டதிலிருந்தே துருக்கியர்களுக்கு எதிரான அரபு கிளர்ச்சியின் தொடக்கம் முதல், லாரன்ஸுக்கு மோதல் எப்படி முடிவடையும் என்பதோடு அவரது அரபு நண்பர்கள் எந்த வகையான வாழ்க்கையை வாழ முடியும் என்பது பற்றிய சந்தேகம் இருந்தது. 1919 இல் பாரிஸ் அமைதிப் பேச்சுக்களிலும், 1921 இல் கெய்ரோ மாநாட்டிலும் லாரன்ஸ் கலந்து கொண்டார்.

ஆனால் பேச்சுவார்த்தையின் விளைவுகளில் அவர் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்தார்.

Lawrence of Arabia
மைக்கேல் ஜாக்சன் : கலக கலைஞனின் அறியப்படாத வரலாறு | பகுதி - 1

அரேபியர்களுடனான சமாதான உடன்படிக்கை என்பது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிரமுகர்கள் மத்திய கிழக்கை அவர்களுக்கிடையில் பிரிப்பதற்கே பயன்பட்டது. இராஜதந்திரத்தின் இந்த கேலிக்கூத்து சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம் என்று அறியப்பட்டது.

லாரன்ஸ், இதைச் சரி செய்வதற்காக 1920 இல் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் செல்வாக்கு செலுத்த முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

ஒரு ஆபத்தான அரபு கிளர்ச்சியில் ஈடுபட்ட லாரன்ஸ் விமான விபத்தில் படுகாயமடைந்தார்

துருக்கியர்களுக்கு எதிரான அரபு கிளர்ச்சியின் தொடக்கத்திலிருந்தே, லாரன்ஸுக்கு மோதல் எப்படி முடிவடையும் மற்றும் என்ன செய்வது என்பது பற்றிய சந்தேகம் இருந்தது.

மே 1919 இல், லாரன்ஸ் தனது குறிப்புகளைச் சேகரிக்க பாரீஸிலிருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஞானத்தின் ஏழு தூண்கள் நினைவுக் குறிப்பை எழுதத் தொடங்கினார். இந்த பயணம் அவரை இத்தாலியின் சென்டோசெல்லே விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் வரலாற்றுப் பதிவின்படி, விமானி இருள் மற்றும் கணிக்க முடியாத காற்றால் குழப்பமடைந்தார். விமானி ஓடுபாதையைக் கடந்து மீண்டும் தரையிறங்க முயன்றார். ஆனால் இறக்கைகளில் ஒன்று மரத்தில் மோதி விமானம் விபத்திற்குள்ளானது. விமானம் பூமியில் விழுந்து ஒரு பைலட் உடனடியாக இறந்தார். மற்றொருவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

லாரன்ஸ் அதிர்ஷ்டசாலி. அவர் மரணத்திலிருந்து தப்பினார். ஆனால் அவரது தோள்பட்டை உடைந்து மற்றும் இரண்டு விலா எலும்புகள் உடைந்தன. விலா எலும்பு காயம் அவரது வாழ்நாள் முழுவதும் அவரைத் தொந்தரவு செய்தது.

Lawrence of Arabia
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

லாரன்ஸ் தனது வாழ்நாளை மூடுண்ட அறையில் வாழ்ந்திருக்கலாம்


லாரன்ஸ் மேடையிலும் திரையுலகிலும் முன்னணி நாயகனுக்குரிய அனைத்து குணங்களையும் கொண்டிருந்தார். அடுத்த மகத்தான சாகசத்தைத் தேடி அவர் தனது வாழ்க்கையை வாழ முடிவெடுத்தார். முதலில், அவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக பணியாற்றினார், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்காக பண்டைய மத்திய கிழக்கு தொல்பொருட்களைக் கண்டுபிடித்தார். பின்னர், பிரிட்டிஷ் ராணுவத்தில் உளவுத்துறை அதிகாரியாகச் சேர்ந்தார். அந்த வேலை அவரை போர்க்களத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு, மன்னர்கள், இளவரசர்கள் மற்றும் பழங்குடியினருடன் சேர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் துருக்கிய ஒடுக்குமுறையாளர்களைத் தோற்கடிக்க உதவினார்.

லாரன்ஸ் நிச்சயமாக ஓரினச்சேர்க்கையாவர் என்பது பலருக்கும் தெரியாது. ஞானத்தின் ஏழு தூண்கள் என்ற அவரது நினைவுக் குறிப்பில், அவர் தனது நண்பரான செலிம் அகமதுவைப் பற்றிய பாடல் வரிகளை எழுதுகிறார்.

இரண்டு மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட இளம் அரபு வேலையாட்கள், அவர்களின் வெளிப்படையான தொடர்பைப் பற்றி அவர் இந்த அவதானிப்பை மேற்கொள்கிறார்: "பெண்களோடு பிரிவினையைத் தவிர்க்க முடியாததாக ஆக்கிய கிழக்குப் பையன் மற்றும் இன்னொரு பையன் பாசத்தின் ஒரு உதாரணம் . இத்தகைய நட்புகள் பெரும்பாலும் ஆழமான மற்றும் அதற்கு அப்பாற்பட்ட ஆண்பால் காதல்களுக்கு வழிவகுத்தன."

அவர் 1935 இல் மரணமடையும் வரை தனது பாலுணர்வைப் பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்திருப்பதில் வெற்றி பெற்றார். இப்போதும் கூட, அவர் ஓரினச்சேர்க்கையாளரா அல்லது இல்லையா என்பது விவாதத்திற்குரியது.

Lawrence of Arabia
டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

லாரன்ஸ் ராயல் விமானப்படையிலிருந்து வெளியேற்றப்பட்டார்

போர்க்களத்திலிருந்து திரும்பி, புகழைப் பெற்ற பிறகு, லாரன்ஸ் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றார். 1922 இல், ஜான் ஹியூம் ரோஸ் என்ற பெயரில் ராயல் விமானப்படையில் நுழைந்தார். வரலாற்றின் படி, லாரன்ஸ் விமானியாக சில மாதங்கள் மட்டுமே செலவிட்டார். பத்திரிக்கைகள் அவரை அரேபியாவின் லாரன்ஸ் என்று அழைத்தன.

1925 இல், அவர் மீண்டும் பிரிட்டனின் ராயல் விமானப்படையில் சேர்ந்தார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஓய்வு பெற்றார். அவர், இந்த நேரத்தில், டோர்செட்டில் ஒரு சிறிய, ஸ்பார்டன் குடிசையில் வசித்து வந்தார். ஆனால், சுதந்திரத்தை அனுபவிக்க அவருக்கு நேரமில்லை. ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, அதிவேக மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார்.

அரேபியாவின் லாரன்ஸ்
அரேபியாவின் லாரன்ஸ்Twitter

அரேபியாவின் லாரன்ஸ் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தார்

லாரன்ஸ் ஒரு அசாத்திய மோட்டார் பைக் ஆர்வலர். டெலிகிராப் பத்திரிகையின் படி, அவர் எட்டு விலையுயர்ந்த மற்றும் அதிநவீன ப்ரோ சுப்பீரியர் மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்தார்.

" மே 13, 1935 அன்று காலை, லாரன்ஸ், தனது சுற்றுப்புறமான டோர்செட் வழியாக வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​இரண்டு பையன்களைச் சைக்கிளில் பார்த்தார். அவர் சிறுவர்களைத் தவிர்க்க, மோட்டார் பைக்கைத் திருப்பினார். இதனால் விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு, அவர் காயங்களால் இறந்தார். அப்போது பைக்குகளுக்கு ஹெல்மெட் போடும் பழக்கம் இல்லை.

Lawrence of Arabia
Jio அம்பானி கதை : திருபாய் நவீன இந்திய பொருளாதாரத்தின் குருபாய் | பகுதி 1

இருப்பினும் லாரன்ஸுக்கு இருந்த புகழை ஒட்டி சில அறிஞர்கள் இந்த விபத்து உண்மையில் விபத்தா இல்லை சதியா என்றெல்லாம் விவாதிக்கிறார்கள். அத்தகைய புகழை லாரன்ஸ் ஆஃப் அரேபியா பெற்றிருந்தார் என்பதால் இத்தகை சதிக் கோட்பாடுகள் உருவாகியிருக்கலாம். எனினும் ஒரு ஆங்கிலேயராக, ஒரு தொல்பொருள் ஆய்வாளராக, ஒரு போர்த் தளபதியாகத் தனது வாழ்வை விறுவிறுப்பாக மாற்றியவர் ஒரு சாதாரண விபத்தில் இறந்து போனார்.

அவரது வரலாற்றை ஒட்டி நிறையப் புத்தகங்களும், திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் மேற்குலகின் ஒருவர் தன்னை அரேபியராக மாற்றிக் கொண்டு மத்திய கிழக்கின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் என்ற முறையில் அவரது புகழ் இன்றும் மறையவில்லை.

Lawrence of Arabia
பிஜு பட்நாயக் : பிரதமரைக் காப்பாற்றிய ஒரு முதல்வரின் விமான சாகசம் - அறியாத வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com