இறுதி சடங்கில் கண் விழித்த குழந்தை, மீண்டும் இறந்த சோகம் - என்ன நடந்தது?

இறுதிச் சடங்கில், குழந்தையைச் சவப்பெட்டிக்குள் வைத்து, நண்பர்கள் உறவினர்கள் சூழ இறுதி சடங்கு நடைபெற்றது. ஆனால், குழந்தையின் கண்கள் அசைவதை உறவினர் ஒருவர் கவனித்துள்ளார்.
dead
dead canva
Published on

இறந்து விட்டதாக நினைத்த தங்களது மூன்று வயது குழந்தை மீண்டும் எழுந்ததாதல் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி வயிற்றிலிருந்த புழுவின் காரணமாக மூன்று வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர் கமில் மெண்டோஸா என்ற குழந்தையின் பெற்றோர். இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட கமிலுக்கு வயது மூன்று தான்.

இறுதிச் சடங்கில், குழந்தையைச் சவப்பெட்டிக்குள் வைத்து, நண்பர்கள் உறவினர்கள் சூழ இறுதி சடங்கு நடைபெற்றது. ஆனால், குழந்தையின் கண்கள் அசைவதை உறவினர் ஒருவர் கவனித்துள்ளார். சவப்பெட்டியைத் திறந்து, குழந்தை கமிலின் நாடியைச் சோதித்துப் பார்த்ததில், அவளுக்கு உயிர் இருந்துள்ளது தெரியவந்தது.

குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்ற நிலையில், கமில் இரண்டாவது முறையாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் வயிற்று வலி மற்றும் காய்ச்சலின் காரணமாக மருத்துவமனைக்கு கமிலை அழைத்துச் சென்றார் குழந்தையின் தாயார். அப்போது, மருத்துவர்கள் கமிலை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளனர். அந்த மருத்துவமனையில் தான், சிறுமிக்கு நீரிழப்பு மற்றும், காய்ச்சலுக்கான மருந்துகளை கொடுத்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தை இறந்த போது, மருத்துவர்கள் அவளைப் பார்க்க அனுமதிக்கவில்லை எனவும் மேரி தெரிவித்தார். இறந்துவிட்டதாக எண்ணி தவறான அறிக்கை அளித்ததும் தெரியவந்துள்ள நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் துவங்கியுள்ளன

dead
இறந்த திருடன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி - ஒரு சுவாரஸ்ய விசாரணை | Podcast

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com