திருமணம் என்றாலே குதூகலமும் உற்சாகமும் தானாக நமக்கு வந்துவிடும். அதிலும் நம் நண்பர்களின் திருமணம் என்றால் அந்த பூரிப்பு இரட்டிப்பாகும்.
சிகாகோவில் இந்திய நண்பனின் திருமணத்திற்கு பட்டுப்புடவை அணிந்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் மணமகனின் நண்பர்கள்.
சிகாகோவின் மிச்சிகன் அவன்யூ தெருக்களில் பட்டு புடவை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்து இருவரும் நடந்து வருவதை வீடியோ எடுத்து பராகோன் ஃபிலிம்ஸ் என்ற கணக்கிலிருந்து பகிர்திருந்தனர்.
வீடியோவில் இவர்களுக்கு பியூட்டிஷன் புடவை கட்ட உதவுவது தெரிகிறது. புடவை கட்டி முடித்த பின்னர், இருவரும் மணமகனை பார்க்க செல்கின்றனர். நண்பர்கள் இருவரையும் புடவையில் பார்த்த மணமகன் சிரிக்க தொடங்கிவிட்டார்.
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 27 ஆயிரம் லைக்ஸ் மற்றும் 150க்கும் மேற்பட்ட கமென்ட்களையும் பெற்றது. வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust