பனாமாவில் கணக்கிட முடியாத ’தங்கப் புதையல்’ கண்டுபிடிப்பு!

இந்த கண்டுபிடிப்புகளில் கிபி 750 முதல் 800 வரை காலகட்டத்தைச் சேர்ந்த கலைப் பொருட்கள் இன்னும் முழுமையாக கிடைக்கப்படவில்லை என்றும் இன்னும் பல பழங்கால மக்களின் கலைப் பொருள்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Massive gold treasure trove of ‘incalculable’ amount discovered in Panama!
Massive gold treasure trove of ‘incalculable’ amount discovered in Panama! Twitter

பழங்கால பொருட்களை வரலாற்று ஆய்வாளர்கள் பொதுவாக புதையல் என்றே கூறுவார்கள். அந்த வகையில் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரும் தங்கப் புதையல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது அங்கு உள்ள வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என கூறப்படுகிறது.

பனாமா நகரின் கோட்டை மாகாணத்தில் நெக்ரோபோலிஸ் உள்ளது. இறந்தவர்களின் சடலங்களை பதப்படுத்தி, நகரத்தின் அருகில் உள்ள பகுதியில் பெரிய அளவிலான கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுவதை, பண்டைய கிரேக்க மொழியில் நெக்ரோபொலிஸ் என்பர். இதன் பொருள் இறந்தவர்களின் நகரம் என்பதாகும்.

இது ஸ்பானிஷ் காலத்திற்கு முன்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது இதன் கலாச்சாரம் கிபி 700 முதல் தொடங்கி கிபி ஆயிரம் வாக்கில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அங்கு உள்ள ஒரு கல்லறையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்கப் பொருட்கள் மற்றும் கலைப் பொருள்கள், மட்பாண்டங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.

கோல வடிவ அதாவது வட்ட வடிவமான மணிகள், இரண்டு பெல்ட், 4 வளையல்கள், மனித உருவங்களுக்கு தகுந்தார் போல் இருக்கக்கூடிய தோடுகள், திமிங்கல பற்களால் செய்யப்பட்ட ஐந்து காதணிகள் மற்றும் தங்க நகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கலைப் பொருட்களில் நாய் பற்களால் வடிவமைக்கப்பட்ட அணிகலனும் எலும்பினால் ஆன புல்லாங்குழலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி இருக்கலாம் என தேசிய பாரம்பரிய இயக்குனர் லினேட் மாண்டினீக்ரோ தெரிவித்துள்ளார்

எல் காணும் அறக்கட்டைளை மூலம் பனாமாவை ஆராயும் பணியானது 2008 முதல் தொடங்கப்பட்டது. இவற்றில் கிபி 750 முதல் 800 வரை காலகட்டத்தைச் சேர்ந்த கலைப் பொருட்கள் இன்னும் முழுமையாக கிடைக்கப்படவில்லை என்றும் இன்னும் பல பழங்கால மக்களின் கலைப் பொருள்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Massive gold treasure trove of ‘incalculable’ amount discovered in Panama!
உலகிலேயே அதிக தங்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com