10 நிமிடத்தில் பேல் புரி செய்த பெண்ணை பார்த்து வியந்த நடுவர்கள் - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியாளர் 10 நிமிட சவாலுக்கு பேல் பூரி தயார் செய்துகொடுத்துள்ளார். இதை சுவைத்த நடுவர்களோ, வெறும் பத்து நிமிடத்தில் இதை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்ற ஆச்சரியத்தில் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
Bhel puri
Bhel puriTwitter
Published on

மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியாவின் நடப்பு சீசனில் ஒரு போட்டியாளர் 10 நிமிட சேலெஞ்சுக்கு, நாம் மிக விரும்பி உண்ணும் பேல் பூரியை செய்து கொடுத்துள்ளார். அதை சுவைத்த அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள், அதன் பல்சுவையில் மதிமயங்கி இதை எப்படி சாத்தியப்படுத்தினீர்கள் என்று வியக்க, அதை பார்த்த நம் நாட்டு வாசிகளோ, செம்மையாக கலாய்த்து வருகின்றனர்.

Bhel puri
Bhel puriTwitter

காரணம், பேல் பூரி என்பது நம் அன்றாடத்தில் ஒன்றிவிட்ட ஒரு துரித உணவு. நினைத்த நேரத்தில் நாம் அதை தயார் செய்து உண்கிறோம். மேலும், பேல் பூரிக்கு ஒரு வித ரெசிபி தான் இருக்கிறதென்று அதை வகைப்படுத்திவிட முடியாது. ஒரு விதத்தில் பேல் பூரி மற்ற துரித உணவுகளை விட சற்று ஆரோக்கியத்துக்கும் நல்லது தான் என்றும் சொல்லலாம். அதில் பயன்படுத்தப்படும் ingridients எல்லாமே சமைக்கப்படாத பொருட்கள்.

வெங்காயம், தக்காளி, மாங்காய், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பொரி, தேங்காய் எண்ணை, காரத்திற்கு மிளகாய் பொடி என பல்சுவைகள் அதில் இருக்கும். இவை தான் பேல் பூரி தயாரிக்க வேண்டிய பேசிக் ingredients. இதை தவிர அதில் பூரி, தட்டை, நிலக்கடலை, அவல், மாதுளை, ஆப்பிள் என சுவைக்கேற்ப மற்ற பொருட்களையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த துரித உணவை தான் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியாவில் சாரா டோட் என்ற போட்டியாளர் தனக்கு கொடுக்கப்பட்ட 10 நிமிட சவாலுக்கு தயார் செய்துகொடுத்துள்ளார். இதை சுவைத்த நடுவர்களோ, வெறும் பத்து நிமிடத்தில் இதை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்ற ஆச்சரியத்தில் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இனிப்பு, புளிப்பு, காரம் போன்ற கடினமான பல்சுவையை ஒரு பிலேட்டில் அதுவும் 10 நிமிடத்தில் தந்தது வியப்பூட்டுகிறது என்றும் பாராட்டியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்ட இந்தியர்களோ, ஒரு பக்கம் இந்திய உணவின் அருமை பெருமையை பற்றி புகழ்பாட, இன்னொரு பக்கம், கொஞ்சம் கலாய்த்தும் வருகின்றனர். பேல் பூரியைப் பற்றி ஒருவேளை இப்போது தான் இவர்களுக்கு தெரிகிறதா, இதை நம்ம ஊர் கடைக்காரர் ஒரு நிமிடத்தில் செய்து முடித்துவிடுவார் என ட்வீட் செய்து வருகின்றனர்.

சாரா மட்டுமல்ல, இதே சீசனில் பங்குபெறும் அலி என்ற மற்றொரு போட்டியாளர், ஏர் ஃப்ரையர் சேலென்ஜிற்கு பாப்டி சாட் செய்துள்ளார். தட்டை, வேகவைத்த கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, க்ரீன் மற்றும் ஸ்வீட் சட்னி, மிளகாய் பொடி, சாட் மசாலா, உப்பு, மாதுளை, வெங்காயம், தக்காளி, மாங்காய், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி. இவற்றைச் சேர்த்து உண்ணும்போது இதுவும் ஒரு கலக்கல் டேஸ்ட்டை நமக்கு கொடுக்கும்.


அலி மற்றும் சாராவின் இந்த இரண்டு இந்திய உணவுகளும் ஆஸ்திரேலியாவின் செஃப்களை வாயடைத்துபோக வைத்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com