உலகின் ஸ்மார்ட்டான பன்றி! இணையத்தை கவரும் செல்ல பிராணி - என்ன காரணம்?

15 கிலோ எடை மற்றும் 3 அடி நீளமுள்ள இந்த பன்றி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை ஆன் செய்து அணைப்பது, நடனமாடுவது, உட்கார்ந்து எழுவது, ஹை ஃபை தருவது போன்ற செயல்களை செய்கிறது.
உலகின் ஸ்மார்ட்டான பன்றி! - இணையத்தை கவரும் செல்ல பிராணி
உலகின் ஸ்மார்ட்டான பன்றி! - இணையத்தை கவரும் செல்ல பிராணிஇன்ஸ்டாகிராம்
Published on

மினா என்ற பெண் வளர்த்துவரும் மெர்லின் என்ற பன்றி தான் உலகின் ஸ்மார்ட்டான பன்றி என்று கொண்டாடி வருகின்றனர் டிக்டாக் வாசிகள்

நமது செல்ல பிராணிகளான நாய், பூனை, கிளிகள் போன்றவற்றிற்கு, நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் கற்றுக்கொடுப்பது வழக்கம். மனிதர்களைப் போலவே அவையும் டிவி ஃபேன் ஆன் செய்வது, யோகாசனம் செய்வது, நடனமாடுவது போன்ற விஷயங்களை செய்வதை பார்க்கும்போது கியூட்டாக இருக்கும்.

இங்கும் ஒரு பெண்ணின் செல்லபிராணி அப்படி கியூட்டான சில விஷயங்களை செய்கிறது. ஆனால் இந்த செல்ல பிராணி, வழக்கமாக நாம் பார்க்கும் நாய், பூனை அல்லாமல் ஒரு பன்றி. இதனால் இன்னும் அதிக கவனத்தை பெற்றுள்ளது அந்த பிராணி

மினா என்ற கலிஃபோர்னியாவை சேர்ந்த பெண், மெர்லின் என்ற பன்றியை வளர்த்து வருகிறார். இவர் இதனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பன்றி பண்ணையிலிருந்து வாங்கினார்.

பார்த்த மாத்திரத்திலேயே தனக்கு அந்த பன்றிக் குட்டியை பிடித்துவிட்டதாக கூறும் மினா, அதனுடன் விளையாடுவது மட்டுமல்லாமல், அதனை கட்டியணைத்து தான் தினமும் உறங்குகிறார். தனது உயிரையும் விட அதிகமாக மெர்லினை அவர் நேசிப்பதாக கூறுகிறார்

உலகின் ஸ்மார்ட்டான பன்றி! - இணையத்தை கவரும் செல்ல பிராணி
செல்ல பிராணிகளுக்கு டும் டும் டும்; பாரம்பரிய முறையில் நடந்த திருமணம் இணையத்தில் வைரல்!

15 கிலோ எடை மற்றும் 3 அடி நீளமுள்ள இந்த பன்றி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை ஆன் செய்து அணைப்பது, நடனமாடுவது, உட்கார்ந்து எழுவது, ஹை ஃபை தருவது போன்ற செயல்களை செய்கிறது.

இந்த வீடியோக்களை மினா தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிட, கடகடவென ஒரு மில்லியன் ஃபாலோவர்களை பெற்றது மெர்லின். டிக் டாக் பயனர்கள், இது உலகின் ஸ்மார்ட்டான பன்றிகளில் ஒன்று என்கின்றனர்.

தவிர மெர்லின் மினாவுடன் பேசவும் ஒரு புதிய முயற்சியை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். மனிதர்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்துவைத்துள்ளனர்.

மெர்லின் பசி, தாகம், வெளியில் விளையாடச் செல்வது, டான்ஸ் ஆடவேண்டும் போன்ற தனது தேவைகளை கேட்க, ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ள டேப்பின் பொத்தான்களை அழுத்தி பேசிக்கொள்ளலாம். இதற்காக மெர்லினுக்கு அதன் உரிமையாளர் மினா பயிற்சியளித்து வருகிறார்.

ஒவ்வொரு வேலையையும் மெர்லின் சரியாக செய்துமுடிக்கும்போது அதற்கு குக்கீஸ்கள், முத்தங்கள் கொடுத்து பரிசு மழையில் நனைய செய்கிறார் மினா. கிட்டதட்ட ஒரு நாளைக்குள்ளாகவே மெர்லினின் பயிற்சி முடிவடைந்துவிட்டது என்று மினா கூறினார்.

மினாவிடம், மெர்லினை தவிர இன்னும் இரண்டு செல்லப் பிராணிகளும் உள்ளன. அவை மிலி மற்றும் மிராக்கிள் என்ற இரண்டு எலிகளாகும்!

உலகின் ஸ்மார்ட்டான பன்றி! - இணையத்தை கவரும் செல்ல பிராணி
செல்ல பிராணியுடன் பைக் ட்ரிப் சென்ற நபர்; இணையத்தில் வீடியோ வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com