The Kohinoor Crown
The Kohinoor CrownTwitter

Queen Elizabeth II: கோஹினூர் வைரம் திரும்ப கிடைக்குமா? - டிவிட்டரில் டிரெண்டாகும் மீம்ஸ்

ராணி மறைந்த நிலையில், வைரம் குறித்த விவாதம் மீண்டும் துவங்கியுள்ளது. கோஹினூர் டைமண்ட் இந்தியாவின் கைகளுக்கு கிட்டுமா என பலரும் இணையத்தில் மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.
Published on

இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். உலக நாடுகளின் பெருந்தலைவர்கள், மக்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இணையத்தில் சிலர் ராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரம் மீண்டும் இந்தியாவிற்கு வருமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கதைகளின் படி இந்திய அரசர்களிடம் இருந்த கோஹினூர் வைரம், அப்போது இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களால் திருடப்பட்டு, அவர்களின் அரசகுல சொத்தாக மாறியது.

ஆங்கிலேயர்கள், இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்து வெளியேறிய பின்னர், அவர்கள் வைரத்தை திரும்ப கொடுக்கவில்லை. அது, தற்போது மறைந்த மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் கிரீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் வைரம் தங்களுடைய சொத்து என இன்று வரை உரிமைக்கொண்டாடி வருவது ஒரு புறம் இருக்கிறது தான்.

இப்போது ராணி மறைந்த நிலையில், வைரம் குறித்த விவாதம் மீண்டும் துவங்கியுள்ளது. கோஹினூர் டைமண்ட் இந்தியாவின் கைகளுக்கு கிட்டுமா என பலரும் இணையத்தில் மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.

The Kohinoor Crown
Noida Twin Tower: வீடியோ வைரலானதை அடுத்து இணையத்தை கலக்கி வரும் மீம்ஸ்

ராணியின் மறைவுக்கு பின் அவரது மகன் சார்ல்ஸ் தற்போது அரசராக பதவி ஏற்றிருக்கிறார். இதனால் தற்போது அவரது மனைவி கமீலாவுக்கு கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் சொந்தமாகும்.

The Kohinoor Crown
iPhone 14 : "என் கிட்னிய காப்பாத்திட்டீங்க" - வைரலாகும் ஆப்பிள் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com