பெரு: 4000 ஆண்டுகள் பழமையான ’பாலிக்ரோம் சுவர்’ கண்டுபிடிப்பு!

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்கள் அந்தக் காலகட்டத்தில் நிலவிய பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி கூறுவதால் இது ஒரு பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
More than 4000 year old polychrome wall discovered in Peru
More than 4000 year old polychrome wall discovered in PeruTwitter
Published on

வடக்கு பெருவில் 400 க்கும் மேற்பட்ட பாலிக்ரோம் சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சுவர்கள் கோயில் விழாக்களின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்கள் அந்தக் காலகட்டத்தில் நிலவிய பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி கூறுவதால் இது ஒரு பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

பாலிக்ரோம் செங்கல் வேலை என்பது பீங்கான் காலத்திற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டிடகலையாகும். பாலிக்ரோம் செங்கற்கள் சிவப்பு, பழுப்பு, மஞ்சள், கிரீம், நீலம் மற்றும் கருப்பு போன்ற பல்வேறு நிறங்களை கொண்டுள்ளது. இந்த வண்ண செங்கற்கள் அனைத்து வடிவங்களிலும் பயன்படுத்தப்பட்டன.

பின்னர் இந்த வடிவங்கள் கட்டிடங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டன. இவை சுவர்களில் அலங்கார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

2020 ஆம் ஆண்டில் தங்கள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளால் முதலில் இந்தச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தற்செயலாக சுவரைக் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சுவர் தோராயமாக மூன்று மீ உயரம் கொண்டது. இந்த சுவரின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் முக்கோண வடிவியல் கோடுகள், சிவப்பு மற்றும் மஞ்சள் நிழல்களின் குறிப்புகள் என்கின்றனர்.

More than 4000 year old polychrome wall discovered in Peru
90,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடம் கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com