Morning News Today: வடகொரியாவுக்கு பதிலடி - 8 ஏவுகணை சோதனைகளை நடத்திய தென்கொரியா

இன்று தென் கொரியா, அமெரிக்க ராணுவத்தினர் இணைந்து 8 ஏவுகணைகளைச் சோதனைகளை நடத்தியிருப்பதாகத் தென் கொரியாவின் ராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
Kim Jong un
Kim Jong unTwitter
Published on

வட கொரியாவுக்குப் பதிலடி; 8 ஏவுகணை சோதனை நடத்திய தென் கொரியா:

வட கொரியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள், உலக நாடுகளின் எதிர்ப்பு இவற்றைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த சோதனைகள் தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.45 மணியளவில் 10 நிமிடங்களுக்குத் தென் கொரியா, அமெரிக்க ராணுவத்தினர் இணைந்து 8 ஏவுகணைகளைச் சோதனைகளை நடத்தியிருப்பதாகத் தென் கொரியாவின் ராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார். தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 8 நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியிருப்பதாகச் சொல்கின்றனர்.

நுபுர் சர்மா
நுபுர் சர்மாTwitter

நபிகள் நாயகம் குறித்து கருத்து: பா.ஜ.க -வில் ஒரு நிர்வாகி இடைநீக்கம்; ஒருவர் நீக்கம்!

நபிகள் நாயகத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்த பா.ஜ.க -வின் தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருக்கின்றனர். டெல்லி பா.ஜ.க ஊடகப்பிரிவு தலைவர் நவீன்குமார் ஜிண்டால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் கருத்துகள், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக்கூறி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு Twitter

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு - இன்று விசாரணை!

மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 1ம் தேதி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணைக்காக வந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 101 பேரில் 27 நபர்கள் ஏற்கெனவே ஆஜராகி இருந்தனர். மீதி 74 பேர் அன்றைய தினம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதில் 64 பேர் மட்டுமே அன்று ஆஜராகியிருக்கின்றனர். மீதமுள்ள 10 பேர் ஜூன் 6-ம் தேதி ஆஜராக வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று அந்த விசாரணை நடைபெறுகிறது.

Kim Jong un
கோவில்பட்டி கடலை மிட்டாயை இனி ஸ்பீட் போஸ்ட்டில் வாங்கலாம் - எப்படி?

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ராணுவத்துக்கு அதிக நிதி!

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல இடங்களில் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்கிறது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.8,300 கோடி அதிகம்.

Kim Jong un
அடுத்த இலங்கை : திவாலாகும் நிலையில் பாகிஸ்தான் - என்ன நடக்கிறது அங்கே?
ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கேTwitter

இலங்கையில் அதிபரின் அதிகாரத்துக்கு நெருக்கடி- இன்று சட்ட மசோதா தாக்கல்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதன் பிறகு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக மே12-ம் தேதி பதவியேற்றார். இலங்கையில் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தபோது அவருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா-20 ஏ நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு, இலங்கையில் அதிபரின் மிதமிஞ்சிய அதிகாரங்களைப் பறித்துவிட்டு, நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தம் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறார்கள். அதன்படி, அதிபர் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருவார்.

Kim Jong un
சிங்கப்பூர் மக்களின் உணவுதட்டில் கை வைத்த உக்ரைன் ரஷ்யா போர் - என்ன நடக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com