Morning News Tamil : உக்ரைன் தலைநகர் கீவ்-யை நெருங்கிய ரஷ்ய பெரும் படைகள்

இன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன
புதின்

புதின்

Twitter

Published on

உக்ரைன் தலைநகருக்கு முன்னேறிய ரஷ்ய படைகள்

யுக்ரேன் தலைநகர் கீவில் ரஷ்யாவின் மிக நீண்ட படைவரிசை 17 மைல்கள் (27 கி.மீ.) நீளத்திற்கு முன்னேறியுள்ளதாக, வெளியான தகவல்கள் தவறானது என செயற்கைக்கோள் படங்களை வெளியிடும் மக்ஸர் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாறாக, ரஷ்ய படை வரிசை கீயவில் 40 மைல்கள் தொலைவுக்கு நீண்டுள்ளதாக, மக்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், யுக்ரேன் எல்லைக்கு 20 மைல்களுக்கும் குறைவான தொலைவில் உள்ள தெற்கு பெலாரூஸில் தரைப்படையினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இருக்கும் புதிய படங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் தலைநகரில் இருந்து பொது மக்கள் வெளியேறுமாரு ரஷ்ய இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வோம் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதின்

Yuvan Shankar Raja Mesmerising BGM : காதல் கொண்டேன் to பருத்திவீரன் - 25 Years of Yuvanism

மோடி மற்றும் செலென்ஸ்கி

மோடி மற்றும் செலென்ஸ்கி

Twitter

உக்ரைனுக்கு இந்தியா உதவி

உக்ரைன் ரஷ்யா போரில் ஆரம்பம் முதலே நடுநிலை காத்து வருகிறது இந்தியா. தற்போது, போரால் தவிக்கும் உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்படும் என இந்தியா அறிவிப்பு. இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உதவிப் பொருட்களை அனுப்புவதாக அறிவிப்பு. மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுமென இந்திய வெளியுறவுத்துறை தகவல்.

புதின்

காலநிலை மாற்றம் : 360 கோடி மக்கள் எதிர்காலம் கேவிக்குறி - எச்சரிக்கும் ஐ.பி.சி.சி

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

Twitter

'தேர்தலன்று காலையில் நடந்தது ஒன்று நள்ளிரவில் நடந்தது ஒன்று'

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்தும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பேசியதாவது, "எம்.ஜி.ஆர் 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து முதல் -அமைச்சரான போதும் கூட எதிர் கட்சியினர் மீது பொய் வழக்கும், கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான், இன்றும் அவர் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர். முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதனால்தான் இன்றும் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் குறையவில்லை.

இந்த தேர்தலில் காலையில் நடந்தது ஒன்று. நள்ளிரவில் நடந்தது ஒன்று இதன் காரணமாகத்தான் ஆளும் கட்சியினர் வெற்றி பெற்றனர். 10 சதவீத மக்கள் மாற்றி ஓட்டுப்போட்டதால், வெற்றி மாறிவிட்டது. மக்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க.வால் மட்டுமே தரமுடியும் என்பதை மக்கள் விரைவில் உணர்வார்கள். அ.தி.மு.க. போன்ற இயக்கத்தை பொய் வழக்குகளால் முடக்க முடியாது".

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில்  பேச்சுவார்த்தை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில்  பேச்சுவார்த்தை

Twitter

'போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா விருப்பம்'

போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ரஷ்யா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னதாக ஆலோசனைக்காகத் திரும்புவதாகவும் இரு நாட்டு பிரதிநிதிகளும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை அவசர கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் நேட்டோ அமைப்பில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதால் போர் மூண்டதாகவும் குறிப்பிட்டார்.

உக்ரைனும், ஜோர்ஜியாவும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. ரஷ்யாவின் நலனை காக்கவே உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

புதின்

Parvathi Nair : The latest pictures have grabbed the attention of her fans | Visual Story

கே.டி. குஞ்சுமோன்

கே.டி. குஞ்சுமோன்

Twitter

இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடலை போட பொண்ணு வேணும்’. விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசும்போது, “மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் எனச் சொன்னேன். அவரது அண்ணன் ஜீவி "நீங்கள்தான் செய்ய வேண்டும்" என்றார். அதற்காகவே செய்தேன். ‘நாயகன்’ படம் எனக்கு லாபம் இல்லை. இங்குத் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை, யாரும் உதவுவதில்லை.

மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. இந்த நிலைதான் இங்கு இருக்கிறது. தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை... இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை. தமிழ் மக்கள்தான் என்னை வாழவைத்தார்கள்” என்று பேசினார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com