எறும்பு தானே என்று நினைக்காதீர்கள்! உலகின் மிக ஆபத்தான எறும்புகள் பற்றி தெரியுமா?

சில எறும்புகள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அப்படி உலகெங்கிலும் உள்ள சில எறும்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
Top Ten Most Dangerous Ants in the World
Top Ten Most Dangerous Ants in the WorldTwitter
Published on

எறும்புகள் சுமார் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

எறும்புகள் முற்றிலும் ஆச்சரியமானவை, காரணம் எந்த வகையான வாழ்விடத்திலும் எறும்புகள் வாழக் கூடியவையாக உள்ளது.

இதனால் எறும்புக் கூட்டங்கள் ஏராளமாக வளர்கின்றன. சில எறும்புகள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அப்படி உலகெங்கிலும் உள்ள சில எறும்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

புல்லட் எறும்பு

இது தென் அமெரிக்காவில் முக்கியமாக நிகரகுவா, பராகுவே, வெனிசுலா, பிரேசில் மற்றும் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

இந்த எறும்பு கொட்டுவது குளவி கொட்டுவதை விட முப்பது மடங்கு வலியை தரக்கூடியதாக இருக்குமாம்.

குளிர், வியர்வை மற்றும் உணர்வின்மை போன்றவற்றை உண்டாக்குமாம்.

புல்டாக் எறும்பு

ஆஸ்திரேலியா மற்றும் நியூ கலிடோனியாவில் இந்த வகை எறும்புகள் அதிகம் காணப்படுகிறது.

புல்டாக் எறும்பின் தோல் பார்ப்பதற்கு தீக்காயங்கள் ஏற்பட்டது போன்று தென்படும். புல்டாக் எறும்பு உலகின் மிக ஆபத்தான எறும்பு என கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

Top Ten Most Dangerous Ants in the World
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

ரெட் பயர் எறும்பு

அடர் கருப்பு நிறத்தில் நெருப்பு டோன்கள் (fire skin tone) இருக்கும் இவை ரெட் பயர் எறும்பு அழைக்கப்படுகிறது.

தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இது அதன் ஆக்கிரோஷமான நடத்தையால் மற்ற எறும்புகளில் இருந்து வேறுபடுகிறது.

ஆப்பிரிக்க எறும்பு

ஆப்பிரிக்க எறும்பு என்று பிரபலமாக அறியப்படும் Pachycondyla analis உலகின் மிக ஆபத்தான எறும்பு வகைகளில் ஒன்றாகும்.

இதனை செனகல், சியரா லியோன், நைஜீரியா, கானா, கேமரூன் மற்றும் டோகோவில் காணலாம்.

5 முதல் 18 மிமீ வரையிலான இந்த எறும்புகள் மனித தோலைத் துளைக்கக் கூடிய வலுவான முக்கோண தாடைகளைக் கொண்டுள்ளன.

Top Ten Most Dangerous Ants in the World
ஒரு அரேபிய குதிரை 82 லட்சமா? உலகெங்கிலும் உள்ள விலையுயர்ந்த விலங்குகள் குறித்து தெரியுமா?

அர்ஜென்டினா எறும்பு

இது அறிவியல் ரீதியாக Linepithema humile என்று குறிப்பிடப்படுகிறது.

அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் காணப்படும் இந்த வகை எறும்பு சுமார் 2 முதல் 3 மி.மீ. வரை உள்ளது.

Odorous house ant

அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது இந்த Odorous house எறும்பு. துர்நாற்றம் வீசும் எறும்பு என்பது தான் இதன் பொருள்

பெயர் குறிப்பிடுவது போல, நசுக்கப்படும் போது, ​​இந்த எறும்புகள் விரும்பத்தகாத வாசனையை வெளியிடுகின்றன.

இந்த எறும்புகள் வீட்டுச் செடிகள், பாறைகள், மரக்கட்டைகள், குப்பைகள் மற்றும் தளங்களில் விரிசல் உள்ளிட்ட பிற பொருட்களில் வாழ்கின்றன.

Top Ten Most Dangerous Ants in the World
பாம்பு தீவு - ஏரியா 51 : Google Map-ல் மட்டுமே பார்க்க முடிகிற உலகின் 10 விசித்திர இடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com