தாமஸ் ஆல்வா எடிசனின் கடைசி மூச்சை பாதுகாக்கும் அருங்காட்சியகம் - எங்கே?

அவரது நண்பரும், அமெரிக்க பெரும்புள்ளியுமான ஹென்ரி ஃபோர்ட் என்பவர் தான் எடிசனின் மூச்சுக் காற்றை பாதுகாத்து வைக்கச் சொல்லி கேட்டிருந்தார்
தாமஸ் ஆல்வா எடிசனின் கடைசி மூச்சை பாதுகாக்கும் அருங்காட்சியகம் - எங்கே?
தாமஸ் ஆல்வா எடிசனின் கடைசி மூச்சை பாதுகாக்கும் அருங்காட்சியகம் - எங்கே?twitter
Published on

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் கடைசி மூச்சினை அருங்காட்சியத்தில் பாதுகாத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்லன.

பல்பு, கார்பன் டிரான்ஸ்மிட்டர், ஃபோனோகிராஃப் போன்ற சாதநங்களை கண்டு பிடித்ததற்காக அறியப்படுபவர் விஞ்ஞானி தாம்ஸ் ஆல்வா எடிசன்.

தொழில்நுட்ப துறையில் இவரது கண்டுபிடிப்புகள், பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டது.

இவரது கடைசி மூச்சை பாதுகாத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நண்பரும், அமெரிக்க பெரும்புள்ளியுமான ஹென்ரி ஃபோர்ட் என்பவர் தான் எடிசனின் மூச்சுக் காற்றை பாதுகாத்து வைக்கச் சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது.

அதே வேளையில், மிச்சிகனில் உள்ள ஹென்ரி ஃபோர்டின் அருங்காட்சியகம் எடிசனின் கடைசி சுவாசக் காற்றினை, ஒரு டெஸ்ட் டியூபில் பாதுகாத்து வருகிறது.

ஆனால் இது உண்மையில் அவரது மூச்சுக் காற்று தானா என வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகிக்கின்றனர். காரணம், எடிசன் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு, படுத்த படுக்கையாக இருந்த சமயத்தில், அவரது படுக்கைக்கு அருகில் 8 டெஸ்ட் டியூப்கள் இருந்தன என்று கூறப்படுகிறது.

எனில் இந்த குடுவையில் இருப்பது உண்மையிலேயே அவர் மூச்சுக் காற்று தானா என்ற சந்தேகம் எழுகிறது

தாமஸ் ஆல்வா எடிசனின் கடைசி மூச்சை பாதுகாக்கும் அருங்காட்சியகம் - எங்கே?
துருக்கி: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’முடி அருங்காட்சியகம்’ - எப்படி உருவானது?

எடிசனின் மகனான சார்லஸ் இது குறித்து கூறுகையில், ”எடிசனுக்கு வேதியியல் மீது தான் அதிக ஆர்வம் இருந்தது. இதனாலேயே அவரது படுக்கைக்கு அருகில் டெஸ்ட் டியூப்கள் இருந்தன.

அவர் இறந்த மறுகணம் இந்த டெஸ்ட் டியூப்களை நான் பாரஃபின் வைத்து அடைக்கச் சொல்லி அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் கூறினேன். பின்னர் அந்த டெஸ்ட் டியூப்களில் ஒன்றினை ஹென்ரி ஃபோர்டிடம் நான் கொடுத்தேன்” எனக் கூறியதாக இந்தியா டைம்ஸ் தளத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

அதே சமயத்தில், ஃபோர்டும் எடிசனின் மகனான சார்லஸிடம் எடிசனின் கடைசி மூச்சை பாதுகாக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், உண்மையில் மிச்சிகன் அருங்காட்சியகத்தில் இருப்பது எடிசனின் மூச்சுக் காற்று தானா என்பதற்கு சான்றுகள் இல்லை

தாமஸ் ஆல்வா எடிசனின் கடைசி மூச்சை பாதுகாக்கும் அருங்காட்சியகம் - எங்கே?
பெர்முடா முக்கோணம்: "கப்பல்கள் காணாமல் போனதற்கு இதான் காரணம்" விஞ்ஞானி சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com