முதல் விமான பயணம் ஆசை, பயம், ஆர்வம் எல்லா உணர்வும் கலந்த ஒன்றாக இருக்கும். ஆனால் இந்த உணர்வுகளால் நாம் சரியாக கடைபிடிக்க வேண்டிய எதையாவது மிஸ் செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விமான நிலையம் சென்றால் கூட விமான நிலையத்தின் பாதுகாப்பு விதிமுறைகள மறந்துவிடக் கூடும். அத்துடன் விமான நிலையத்தின் எல்லா சோதனைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
முதல் விமான பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில டிப்ஸ் இங்கு கொடுக்கப்படுகிறது.
சாதாரணமாக ஊருக்கு செல்ல பேக் செய்வது எளிமையான விஷயம் தான். ஆனால் விமானத்தில் செல்ல பேக் செய்வதற்கு முன்னர் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு பெரிய செலவு வந்து சேர வாய்ப்பிருக்கிறது.
பேக் செய்வதற்கு முன்னரே விமான நிறுவனத்தின் வலைத்தளத்தில் எவ்வளவு சுமைகளை உடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளவும். முக்கியமாக அவற்றுக்கான கட்டணத்தையும் தெரிந்துகொள்ளவும். நீங்கள் செல்லும் விமான நிறுவனம் மற்றும் உங்கள் டிக்கெட் கட்டணம் ஆகியவற்றைப் பொறுத்து அனுமதிக்கப்படும் லக்கேஜ் அளவுகள் மாறுபடும்.
பொதுவாக அனுமதிக்கப்படுபவை,
ஒரு பர்ஸ் அல்லது முதுகுப்பை மற்றும் சிறிய பை அல்லது ரோலிங் சுட்கேஸ்.
சோதனை செய்யப்பட்ட சுட்கேஸ் ஒன்று (22 கிலோ அளவில்) 2000 முதல் 4000 ரூபாய்க்கு. மற்ற சுமைகளுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
முதுகுப்பை பெரியதாக இருந்தால் அதனையும் சோதனை செய்ய வேண்டியது இருக்கும். சோதனை செய்யப்பட்ட சுட்கேஸ் அதிக எடையுடன் இருந்தால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
முடிந்த வரை குறைந்த எடை கொண்ட, பை மற்றும் சுட்கேஸை உபயோகிக்கவும். அது சோதனைக்கும் எளிதாக இருப்பது சிறப்பு. பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்தியிருந்தால் அதனை ட்ரான்ஸ்பரன்டாக தேர்வு செய்யவும்.
பொதுவாக பயணங்களின் போது லேப்டாப், ஹெட் போன்கள், டாப் போன்றவற்றை தான் அதிகம் பயன்படுத்துவோம். ஆனால், நாம் கையில் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களில், மருந்து, தொடர்பு கொள்ளும் சாதனங்கள் (mobile), கண்ணாடிகள் அல்லது முக்கியமான பொருட்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.
உங்கள் முதுகுப்பை உங்கள் சீட்டுக்கு கீழேயோ அல்லது மடியிலோ வைக்க முடிகிறதா என்பதைப் பார்த்துக்கொள்ளவும். இல்லை என்றால் அதனை செக் செய்ய வேண்டியது இருக்கும்.
நீங்கள் எதை பேக் செய்யலாம் என்பதற்கான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் விதிகளை தெளிவாக படித்துக்கொள்ளவும். உங்களால் 3.4 அவுன்ஸ் அளவு பாட்டிலை எடுத்துப் போக முடியுமே தவிர, பெரிய பாட்டில்களுக்கு விமானத்தில் அனுமதிக் கிடையாது.
செக் செய்த பெரிய சுட்கேஸை பயணத்தின் பாதியில் திறக்க முடியாது என்பதால் எல்லா அத்தியாவசியங்களையும் கையில் வைத்துக்கொள்ளவும்.
பெரிய சுட்கேஸ் மிக அரிதாக, தொலைந்துவிட வாய்ப்பிருப்பதால். ஒரு வேளை அது இல்லாதபோதிலும் சமாளிப்பதற்கான பொருட்களை கையில் வைத்திருக்க முயலவும்.
விமானத்தை பிடிப்பது பஸ் அல்லது ரயிலை பிடிப்பதைப் போன்றது அல்ல. நீங்கள் உள்நாட்டு பயணத்துக்கு 2 மணி நேரம், சர்வதேச பயணத்துக்கு 3 மணி நேரம் முன்னதாக வர வேண்டியது அவசியம்.
உங்கள் boarding pass பெறவும், பொருட்களை செக் செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கடந்து செல்லவும் உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும். இது சில நேரங்களில் 10 நிமிடத்தில் முடிந்துவிடும் வேலை தான். ஆனால் சில சமயங்களில் நேரங்கள் ஆகலாம்.
பொதுவாக நம் டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் போர்டிங் டைமுக்கு 30 நிமிடங்கள் முன்னரே பயணிகளை ஏற்றிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்போர்ட், லைசென்ஸ், ஐடி ஆகியவற்றை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். உங்கள் பைகள் சோதனையிலிருக்கும் போது கூட இவை உங்களுக்கு தேவைப்படலாம். பர்சில் வரிசையாக வைத்திருந்தால் உங்கள் பயணம் இடைநிறுத்தப்படாது.
விமானநிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை கடப்பது அதிக மன உளைச்சலை, பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைகள் குறித்து தெரிந்திருந்தால் நீங்கள் துளியும் பதட்டமடைய வேண்டாம்.
உங்கள் காலணிகளை கழட்ட வேண்டும்.
பாக்கெட்களில் எதுவும் இல்லை என திறந்து காட்டவேண்டும். தொப்பி, பெல்ட், ஜாக்கெட், பணப்பை மற்றும் பெரிய நகைகளைக் கழட்ட வேண்டும்.
பையில் இருந்து லேப்டாப் மற்றும் ஏதாவது திரவம் (தண்ணீர்) அதனையும் வெளியில் எடுத்து வைக்க வேண்டும்.
பொருட்களையும் பையையும் ஸ்கேனர் வழியாக அனுப்ப வேண்டும்.
மெட்டல் டிடெக்டர் அல்லது பாடி ஸ்கேனர் வழியாக நடந்து செல்ல வேண்டும்.
இவற்றுக்கு பழகிக்கொண்டால் பாதுகாப்புகளைக் கடப்பது மிக எளிதாகிவிடும்.
நீங்கள் கூட்டமான நேரத்தில் பயணித்தால் அனைத்து இருக்கைகளும் நிறைந்து உங்களுக்கு கொஞ்சம் தான் இடம் கிடைக்கும். அப்போது கால் வைக்க சிரமமாக இருந்தாலும் உங்களின் இடத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்தவரின் இடத்தை தெரியாத் தனமாக கூட அபகரிக்காமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உதாரணமாக நீங்கள் போனி டெய்ல் போட்டு உங்கள் தலைமுடியை சீட்டுக்கு மேலே போட்டால், அது உங்களுக்கு பின் இருப்பவரின் ஸ்க்ரீனை மறைக்கும்.
நீங்கள் வாசனை திரவியம் உபயோகித்திருந்தால், அதிக வாசனையான பண்டங்களை சாப்பிட்டால் அது அருகில் இருப்பவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
முதல் முறை பயணம் செய்பவர்கள் விமானத்தை மிஸ் செய்தால் அதிகமாக பதட்டமடைவதுண்டு. ஆனால் அதற்கு அவசியமில்லை. முதலில் நன்றாக மூச்சு விட்டு சாதாரண நிலைக்கு வாருங்கள்.
எதிர்பாராத தாமதம் எல்லாருக்கும் ஏற்படுவது சகஜம் தான். உங்கள் ஏர்லைனில் உடனடியாக நீங்கள் விமானத்தை மிஸ் செய்ததைத் தெரிவியுங்கள். அப்போது அடுத்த விமானத்துக்கான காத்திருப்பு பட்டியலில் உங்களுக்கு இடம் கொடுக்கப்படலாம். விமானத்தை மிஸ் செய்த 2 மணி நேரத்துக்குள் தகவல் கொடுக்க வேண்டும். இதற்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் கிடையாது.
ஒரு வேளை நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லும் இணைப்பு விமானத்தை மிஸ் செய்தால்?, முதலில் நீங்கள் உண்மையில் மிஸ் செய்துவிட்டீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில் இணைப்பு விமானத்துக்கு ஏற்கெனவே காத்திருப்பு நேரம் இருந்தாலோ அந்த விமானம் தாமதமாக புறப்பட்டாலோ உங்களுக்கு அதில் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் இணைப்பு விமானத்தை தவறவிட உங்கள் ஏர்லைன்ஸ் காரணமாக இருந்தால், பொதுவாக நீங்கள் இலவசமாக பயணத்தை ரீபுக் செய்து தொடரலாம். காத்திருப்புக்கான சாப்பாடு மற்றும் தங்குமிடம் கொடுக்கப்படலாம்.
இந்த சலுகைகளைப் பெறுவதற்கு நீங்கள் ப்ரொஆக்டிவாக அதாவது விவேகமாக இருக்க வேண்டும். பிளைட் மிஸ் செய்தால் உடனடியாக தெரிவிக்க ஏர்லைன்ஸின் கஸ்டமர் கேர் நம்பரை கையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே விமான நிலையத்தில் இருந்தால் உடனடியாக கஸ்டமர் கேர் டெஸ்கை அணுகலாம். அவர்களிடம் விளக்கமாக நடந்ததைக் கூறி ரீபுக் குறித்து கேட்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust