பேய்களுடன் தினமும் படுத்து தூங்கும் தம்பதி - அமானுஷ்ய வாழ்க்கையின் பின்னணி என்ன?

அவ்வப்போது இவர்கள் அமரும் சோபா, படுத்துறங்கும் மெத்தைகளில் கூட இந்த பேய்கள் அமர்ந்திருக்குமாம்.
பேய்களுடன் தினமும் படுத்து தூங்கும் தம்பதி - அமானுஷ்ய வாழ்க்கையின் பின்னணி என்ன?
பேய்களுடன் தினமும் படுத்து தூங்கும் தம்பதி - அமானுஷ்ய வாழ்க்கையின் பின்னணி என்ன?twitter
Published on

இறந்துபோன தங்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர் இங்கிலாந்தை சேர்ந்த தம்பதியினர்.

சந்திரமுகி, அரண்மனை, ஆனந்தபுரத்து வீடு போல பேய் படங்களை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இவற்றில் எல்லாம், வீடுகளில் இருக்கும் பேய்கள் அங்கு வாழ்பவர்களை பயமுறுத்துவதும், தொந்தரவு செய்வதும், பழிவாங்க நினைப்பதும் பற்றி திகிலாக காட்டியிருப்பார்கள். அந்த பேய் பிசாசுகளுடன் தான் இத்தனை நாளாக வாழ்ந்தோமா என்று வீட்டில் இருப்பவர்கள் கதிகலங்குவர்.

அப்படி தான் வாழ்ந்து வருகின்றனர் இங்கிலாந்தை சேர்ந்த தம்பதியினர்.

ஜென் மற்றும் டேவி ட்ரூ என்ற தம்பதி இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றனர். டேவிட் ட்ரூ என்பவரால் இறந்தவர்களின் ஆவிகளுடன் பேச முடியும்.

இதனால் ஆன்மாக்களுடன் பேசி அவர்களின் தேவையை கண்டறியும் பணியில் இருந்தார் டேவிட்.

தற்போது டேவிடுக்கு 70 வயதாகிறது. அவரால் நடக்க இயலாது. வீல் சேரில் அமர்ந்திருப்பவர் தனது 59 வயது மனைவியையே முழுவதுமாக நாடியுள்ளார்.

பேய்களுடன் தினமும் படுத்து தூங்கும் தம்பதி - அமானுஷ்ய வாழ்க்கையின் பின்னணி என்ன?
பேய் தாஜ்மஹால் : போபாலில் இருக்கும் கைவிடப்பட்ட கோட்டை - பேய் நடமாட்டம் இருக்கிறதா?

1984ல் முதன் முதலில் ஜென் ட்ரூ டேவிடை சந்தித்தார். சிறுவயது முதலே டேவிடின் கண்களுக்கு ஆன்மாக்கள் தெரிந்துள்ளன. ஆனால் அப்போது அவர் இயல்பாகவே சிறுவர்களுக்கு இருக்கும் ஒரு குணம் என்று நினைத்து விட்டுவிட்டார்.

ஆன்மாக்களுடன் பேசுவதை தற்போது நிறுத்தியபிறகும், இன்றும் அவரது கண்களுக்கு ஆன்மாக்கள் தெரிகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜென் உடைய தாயார் இறந்துவிட்டார். அவரை சமீபத்தில் பார்த்ததாக கூறுகிறார் டேவிட். அவ்வப்போது இவர்களின் வீட்டில் இருக்கும் பாரில் மறைந்த ஜென்னின் தந்தை நின்றிருப்பதையும் கவனித்துள்ளார் டேவிட்.

அவ்வப்போது இவர்கள் அமரும் சோபா, படுத்துறங்கும் மெத்தைகளில் கூட இந்த பேய்கள் அமர்ந்திருக்குமாம்.

முதலில் ஜென் இதனால் பயந்ததாகவும், இப்போது இந்த நிலை பழகிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

இருந்தாலும், பக்கத்துல பேய் படுத்திருக்குன்னா...

பேய்களுடன் தினமும் படுத்து தூங்கும் தம்பதி - அமானுஷ்ய வாழ்க்கையின் பின்னணி என்ன?
11 கோடிக்கு வாங்கப்பட்ட பேய் வீடு - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com