அமெரிக்கா ஏரியா 51 மர்மங்கள் : இங்கு ஏலியன்கள் ஆய்வு நடக்கிறதா? US எதனை மறைக்கிறது?

1989 ஆம் ஆண்டில், ராபர்ட் லாசர் என்ற நபர், ஏரியா 51 க்குள் ஏலியன் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்ததாகக் கூறினார். அவர் வேற்றுகிரகவாசிகளின் மருத்துவ புகைப்படங்களைப் பார்த்ததாகவும், யுஎஃப்ஒக்களை ஆய்வு செய்ய அரசாங்கம் இந்த வசதியைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.
UFO
UFONewsSense

சிறிய அமெரிக்கா நகரங்களான ரேக்சல் மற்றும் ஹிகோவிற்கு அருகே உள்ள இரகசியமான பகுதிதான் ஏரியா 51. இது குறித்து அமெரிக்காவில் அவ்வப்போது சர்ச்சைகள், சதிக்கோட்பாடுகள் கிளம்பும். அங்கே வேற்றுக்கிரக வாசிகள் குறித்து ஆய்வு நடக்கிறது போன்ற வீடியோக்கள் வைரலாகின்றன.

ஏரியா 51 என்றால் என்ன?

ஏரியா 51 என்பது அமெரிக்காவின் விமானப்படைத் தளத்தின் பிரபலமான பெயராகும். இது லாஸ் வேகாஸுக்கு வடக்கே 135 கிமீ தொலைவில் நெவாடா பாலைவனத்தில் உள்ள வறண்ட ஏரியான க்ரூம்மிற்கு அருகில் உள்ளது.

இங்கே உள்ளே என்ன நடக்கிறது என்பது மிகவும் இரகசியமானது. பொதுமக்கள் யாரும் நுழைந்து விடமுடியாத படி எச்சரிக்கை பலகைகள், மின்னணு கண்காணிப்பு மற்றும் ஆயுதந்தாங்கிய காவலர்கள் இருக்கின்றனர்.

ஏரியா 51க்கு மேல் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தளம் செயற்கைக்கோள் படங்களில் தெரியும். தளமானது 3.7 கிமீ ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது.

இந்த ஏரியாவிற்கு அருகிலுள்ள்ள ரேக்சல் சிறு நகருக்குச் சென்றால் உணவகங்கள், பரிசுக் கடைகளில் வேற்றுக்கிரக வாசிகளின் சிலையோ, படங்களோ உங்களை வரவேற்கும். அங்கிருக்கும் கடைகள் இத்தகைய கதைகளை வைத்து வணிகம் செய்கின்றன.

ஏரியா 51க்கு அருகில் வேறு இரண்டு இராணுவ பகுதிகளும் உள்ளன. நெவாடா சோதனைத் தளம் என்பது அமெரிக்காவின் அணு ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்கும் தளமாகும். இங்கே 1950 முதல் 1990 வரை பல அணு ஆயுத சோதனைகள் நடந்துள்ளன. மற்றொரு தளம் சோதனை மற்றும் பயிற்சி கொடுக்கின்ற தளமாகும்.

அமெரிக்க இராணுவத்தின் கூற்றுப்படி இந்த தளங்களானது பல வகை போர் சோதனைகளை நடத்தி அவற்றை மேம்படுத்தி பயிற்சி கொடுக்கின்ற தளங்களாகும்.

Area 51
Area 51News Sense

ஏரியா 51 என் கட்டப்பட்டது?

அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான கெடுபிடிப் போரின் போது ஏரியா 51 உருவாக்கப்பட்டது. யூ-2 மற்றும் எஸ்ஆர்-71 உளவு விமானங்கள் உட்படப் பல விமானங்களுக்கான சோதனை மற்றும் மேம்பாட்டிற்காக இத்தளம் பயன்பட்டது.

இந்த ஏரியா 51, 1955 இல் திறக்கப்பட்டாலும் அதன் இருப்பை சிஐஏ உளவுத்துறை நிறுவனம் 2013 இல் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது. பின்னர் அப்போதிருந்த அமெரிக்கா அதிபர் ஒபாமா இதைப் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

இன்று அங்கே என்ன நடக்கிறது?

ஏரியா 51 ஐ பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் மிகவும் குறைவு. எனினும் அமெரிக்க இராணுவம் அங்கே அதிநவீன போர் விமானங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. சுமார் 1500 பேர் அங்கு பணியாற்றுகிறார்கள். அவர்களின் பலர் லாஸ்வேகாஸிலிருந்து தனிப்பட்ட விமானங்கள் மூலம் இங்கு வந்து போகிறார்கள்.

ஏரியா 51 இன் வரலாற்றை எழுதிய அன்னி ஜேக்கப்சன், உலகின் மிகவும் மேம்பட்ட உணவுத்திட்டங்கள் அங்கே உருவாக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

“ஏரியா 51 ஒரு சோதனை மற்றும் பயிற்சி வசதி கொண்ட தளம். 1950களில் யூ-2 உளவு விமானத்தில் தொடங்கிய ஆராய்ச்சி இப்போது ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன்களுக்கு மாறியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

UFO
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு!
Army Jet
Army JetPexels

ஏரியா 51 இல் ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டுகள் உள்ளதா?

ஏரியா 51 ஐச் சுற்றியுள்ள இரகசியமானது பல சதி கோட்பாடுகளைப் பற்றவைக்கும் எரிபொருளாக உதவியிருக்கிறது.

1947 ஆம் ஆண்டு நியூ மெக்ஸிகோவின் ரோஸ்வெல்லில் விபத்துக்குள்ளான வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் மற்றும் அதன் விமானிகளின் உடல்கள் இந்த தளத்தில் வைக்கப்பட்டுள்ளன என்ற சதிக்கோட்பாடு மிகவும் பிரபலமானது. அமெரிக்க அரசாங்கம் வேற்றுகிரகவாசிகள் இல்லை என்றும் விபத்துக்குள்ளானது வானிலையைக் கணிக்கும் சோதனை பலூன் என்றும் கூறுகிறது.

மற்றவர்கள் தளத்திற்கு மேலேயோ அல்லது அருகிலோ வேற்று கிரக விண்கலனக்ளை பார்த்ததாகக் கூறுகின்றனர். சிலரோ தாங்கள் வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டதாகவும், பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு தாங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர். அல்லது அடித்து விடுகின்றனர். X-Files போன்ற பல அறிவியல் ஹாலிவுட் திரைப்படங்களில் ஏரியா 51 இடம் பெற்றுள்ளது.


மேலும், 1989 ஆம் ஆண்டில், ராபர்ட் லாசர் என்ற நபர், ஏரியா 51 க்குள் ஏலியன் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்ததாகக் கூறினார். அவர் வேற்றுகிரகவாசிகளின் மருத்துவ புகைப்படங்களைப் பார்த்ததாகவும், யுஎஃப்ஒக்களை ஆய்வு செய்ய அரசாங்கம் இந்த வசதியைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.

இவ்வாறாக ஏரியா 51வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு இருப்பதாக மக்களால் பேசப்படுவது உளவுத்துறை நிறுவனங்களுக்குப் பயனுள்ள கவனச்சிதறலாக இருக்கலாம். இதன்மூலம் அங்கே உண்மையில் நடக்கும் இராணுவ ஆய்வுகள் வெளியே பேசப்படாமல் போகின்றன.

1950 ஆம் ஆண்டிலேயே, சிஐஏ, நெவாடாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைக் கண்டறிவதற்காக ஒரு UFO அலுவலகத்தை உருவாக்கியது. யூ-2 உளவு விமானம் பறப்பதை மக்கள் முதன்முதலில் பார்த்தபோது, ​​அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

சிஐஏ இப்படி ஒரு வேற்றுகிரகவாசிகள் மர்மக் கதைகளை வளர்ப்பதன் மூலம் அந்த தவறான தகவலை தங்களின் நலனுக்காகப் பயன்படுத்தியது.

UFO
UFO வரலாறு : உண்மையில் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா ?

ஏரியா 51 இல் மக்கள் அதிரடியாக நுழைந்தால் என்ன நடக்கும்?

மேட்டி ராபர்ட்ஸ், 2019 ஆம் ஆண்டில் ஒரு பேஸ்புக் நிகழ்வை உருவாக்கி ஏரியா 51 இல் நுழைவதற்கு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். "அவர்களுடைய தோட்டாக்களை விட நாம் வேகமாக ஓட முடியும். நாம் நிச்சயமாக வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்போம்" என்று அவர் முன்மொழிந்தார். 20 இலட்சம் மக்கள் தாங்கள் "போகிறோம்" என்று கூறினர். இருப்பினும் இராணுவத் தாக்குதல் காரணமாகப் பேரழிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

ஏரியா 51ஐச் சுற்றியுள்ள எச்சரிக்கைப் பலகைகள், அத்துமீறி நுழைபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

ஏரியா 51 "அமெரிக்க விமானப்படைக்கான ஒரு திறந்த பயிற்சி தளமாகும். மேலும் நாங்கள் அமெரிக்க ஆயுதப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கும் பகுதிக்கு பொது மக்கள் வர முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம்" என்று அமெரிக்காவின் விமானப்படை எச்சரித்தது.

எது எப்படியோ ஏரியா 51 ஒரு இரகசியமான இராணுவ, விமானப்படை மற்றும் உளவுத்துறை திட்டங்கள், சோதனைகள், பயிற்சிகளுக்கான தளம் என்பது உண்மை. அதை மறைப்பதற்கு வேற்றுக்கிரக கதைகளை மக்கள் முன்னெடுப்பது சிஐஏவிற்கு பயன்படுகிறது. மற்றபடி அமெரிக்காவில் இப்படி சதிக்கோட்பாடுகளை நம்பி பேசுவதற்கும், நேரத்தை விரயம் செய்வதற்கும் பெரும் கூட்டம் உள்ளது மட்டும் உண்மை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com