நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

விமானம் இரண்டு பணியாளர்கள் மற்றும் 17 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பராமரிப்பு சோதனைகளுக்காக பொக்காரா நகருக்குச் சென்றதாக விமான நிலைய பாதுகாப்புத் தலைவர் அர்ஜுன் சந்த் தாக்குரி தெரிவித்திருந்தார்.
Nepal plane crash: 18 dead as aircraft crashes during takeoff at Kathmandu airport
Nepal plane crash: 18 dead as aircraft crashes during takeoff at Kathmandu airportTwitter
Published on

நேபாளத்தில் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானம் இரண்டு பணியாளர்கள் மற்றும் 17 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பராமரிப்பு சோதனைகளுக்காக பொக்காரா நகருக்குச் சென்றதாக விமான நிலைய பாதுகாப்புத் தலைவர் அர்ஜுன் சந்த் தாக்குரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்திருந்தார்.

விமானி மனிஷ் ஷாங்க்யா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேபாள ராணுவத்தின் தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேரில் கண்ட சாட்சிகளின்படி, விமானம் புறப்படும்போது இறக்கையின் முனை தரையில் மோதியதால் விமானம் கவிழ்ந்தது. அதன்பின்னர் விமானம் தீப்பிடித்து ஓடுபாதையின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த விமானம் உள்ளூர் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Nepal plane crash: 18 dead as aircraft crashes during takeoff at Kathmandu airport
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com