Netflix: விமான உதவியாளரை தேடும் ஓடிடி நிறுவனம் - சம்பளம் என்ன தெரியுமா?

தங்களது “dream crew”விற்கு ஒரு flight attendant தேவை என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதன் தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றில் பணியாற்ற ஒரு விமான உதவியாளர் தேவை என அறிவித்திருந்தது
Netflix
Netflixட்விட்டர்
Published on

பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ், தங்களது பிரைவேட் ஜெட்டிற்கு ஒரு விமான பணியாளரை தேடி வருவதாக விளம்பரம் கொடுத்துள்ளது.

இந்த வேலைக்கான சம்பளம், வருடத்திற்கு 385,000 டாலர்கள் எனவும் அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய்.

உலக பணக்கார ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ். இதில் எல்லா மொழி படங்கள், வெப் சீரீஸ்கள் வெளியாகும். மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட, இந்த 2023ஆம் ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது நிறுவனம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், தங்கலான், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் அதில் அடக்கம்.

இந்நிலையில், புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.

Netflix
Lollu Sabha : மீண்டும் வருகிறது ’லொள்ளு சபா’ - நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட Glimpse Viral
Netflix
சும்மா இருக்க 1.3 கோடி சம்பளம்: விரக்தியில் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்த ஊழியர் - ஏன்?

அதில், தங்களது “dream crew”விற்கு ஒரு flight attendant தேவை என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள அதன் லாஸ் கேடோஸ் தலைமையகத்திற்கு அருகில் சூப்பர்-மிட்சைஸ் தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றில் பணியாற்ற ஒரு விமான உதவியாளர் தேவை என அறிவித்திருந்தது.

இந்த பணிக்கு, சுயமாக தீர்மானம் எடுக்கக்கூடிய, சிறந்த வாடிக்கையாளர் சேவை திறன்கள் கொண்ட, சுய விருப்பங்களுக்கு இடமளிக்காத ஒரு ஆளை தேடிவருவதாக நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு ஆண்டிற்கு 3 கோடி ரூபாய் (385,000 டாலர்கள்) சம்பளம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது அந்நிறுவனம்.

இந்த சம்பளம், விண்ணப்பதாரரின் திறன், பின்னணி மற்றும் அனுபவத்தை பொறுத்து மாறுபடும் எனவும், இவர்கள் எந்த மாதிரியான வேலைகளை செய்யவேண்டும் எனவும் விளம்பரத்தில் தெரிவித்துள்ளது நிறுவனம்.

விமானம் புறப்படுவதற்கு முன், காக்பிட், கேபின் மற்றும் கேலரிகளில் உள்ல அவசரகால உபகரணங்களை ஆய்வு செய்யவேண்டும். 13 கிலோ வரை எடையுள்ள பொருட்களை சுமக்கும் அளவிற்கு வலு உள்ளவர்களாக இருக்கவேண்டும்.

கலிஃபோர்னியாவில் பணியிடம் என்பதால், அமெரிக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளிப்பதே தங்களது இலக்கு எனக் கூறியுள்ள நிறுவனம், இதற்கு தகுதியான விமான உதவியாளரை தேடிவருவதாக அறிவித்துள்ளது

Netflix
Netflix: AK62, வாத்தி, தங்கலான் - 2023 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் படங்கள் இதோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com